மலைவாழ் மக்களுடன் ஜிகர்தண்டா -2 படம் பார்த்த கார்த்திக் சுப்பராஜ்

ஜிகர்தண்டா -2 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மலைவாழ் மக்களுடன் ஜிகர்தண்டா -2 படம் பார்த்த கார்த்திக் சுப்பராஜ்
Published on

'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.17 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் 'ஜிகர்தண்டா 2' படத்தில் நடித்த மலைவாழ் மக்களுடன் இப்படத்தை பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள அவர், "ஜிகர்தண்டா 2 படத்தை அப்படத்தில் நடித்த தண்டிக்குடி மக்களுடன் திரையரங்கில் பார்த்தேன். பெரிய திரையில் வருவதை பார்த்து மகிழ்ச்சியடைந்த அவர்களை பார்த்து மகிழ்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com