search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இந்தியன் -2 ரிலீஸ் எப்போது தெரியுமா?
    X

    இந்தியன் -2 ரிலீஸ் எப்போது தெரியுமா?

    • இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘இந்தியன் 2’.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.


    இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு கட்டங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில் 'இந்தியன் -2' படப்பிடிப்பு சென்னை விமானநிலையத்தில் நடைபெற்றது. இந்த படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையம் ஆணையத்திடம் படக்குழு ரூ.1.24 கோடி கட்டணமாக செலுத்தி முன் அனுமதி பெற்றது.

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'இந்தியன் -2' திரைப்படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    Next Story
    ×