என் மலர்

  சினிமா செய்திகள்

  லவ் டுடே பட இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்.. கவனம் ஈர்க்கும் புகைப்படம்..
  X

  பிரதீப் ரங்கநாதன் - ரஜினிகாந்த்

  'லவ் டுடே' பட இயக்குனரை பாராட்டிய ரஜினிகாந்த்.. கவனம் ஈர்க்கும் புகைப்படம்..

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் 'லவ் டுடே' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
  • இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

  ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


  லவ் டுடே

  யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.


  ரஜினிகாந்த் - பிரதீப் ரங்கநாதன்

  இந்நிலையில், 'லவ் டுடே' படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த், பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "நான் இன்னும் என்ன கேட்க முடியும்? சூரியனுக்கு அருகில் இருப்பது போல் இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'லவ் டுடே' படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டினார். நீங்கள் சொன்ன வார்த்தைகள் எதையும் மறக்க முடியாது சார்." என்று பதிவிட்டுள்ளார்.  Next Story
  ×