என் மலர்
சினிமா செய்திகள்
மனோபாலா மறைவு: துல்கர் சல்மான், செல்வராகவன், தமன் இரங்கல்
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா காலமானார்.
- இவருடைய மறைவுக்கு துல்கர் சல்மான், செல்வராகவன், தமன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் மனோபாலா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் துலகர் சல்மான் பதிவிட்டிருப்பது, நீங்கள் எப்பொழுதும் அன்பானவர், பன்பானவர், எங்களை சந்தோஷமாக வைத்து கொள்ளக்கூடியவர். நாம் படத்தில் ஒன்றாக நடித்த பொழுது இனிமையான நினைவுகள் மட்டுமே என்னிடம் உள்ளது.
இசையமைப்பாளர் தமன், உண்மையிலேயே நல்ல மனிதர். அவருடைய மறைவு செய்தி உலுக்குகிறது.
இயக்குனர் செல்வராகன், எப்பொழுதும் என்னுடைய இனிய நண்பர்.
இயக்குனர் பாண்டியராஜ், மிஸ் யூ மனோபாலா சார், என்று இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.