கிச்சா சுதீப்பை இயக்கும் சேரன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

நடிகர் கிச்சா சுதீப் 'நான் ஈ' படத்தில் நடித்து பிரபலமானார்.இவர் விஜய்யின் ‘புலி’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
கிச்சா சுதீப்பை இயக்கும் சேரன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
Published on

பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி ஹிட்டான சேது மற்றும் ஆட்டோகிராப் போன்ற படங்களின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து ரசிகர்களை கவந்தார்.

கிச்சா 47 போஸ்டர்

இந்நிலையில், நடிகர் கிச்சா சுதீப்பின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் 47-வது படத்தை இயக்குனர் சேரன் இயக்கவுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தங்களது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com