என் மலர்
சினிமா செய்திகள்
- உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- இது தொடர்பான புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் அஜித்குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அஜித்தின் 62 - வது ஆக்ஷன் படமாக இது உருவாகி வருகிறது.
இதனையடுத்து ஆதி ரவிசந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை எடுத்து வருகிறார்.
அதனால் அஜீத்குமார் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக்கொண்டு சிகிச்சை பெற்று வரும் தனது மனைவியை கவனித்துக் கொள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
இது சம்பந்தமான புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் எப்போதும் உங்களை காதலிக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு உருவான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- மகாராஜா வெற்றியின் மூலம் விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் நித்திலனுக்கும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிகிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 50-வது திரைப்படம் "மகாராஜா." குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, நட்டி என்கிற நட்ராஜ், சிங்கம் புலி, முனிஸ்காந்த், வினோத் சாகர் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
தன் குடும்பத்தில் ஒருவராக இருக்கும் இரும்பு குப்பைத்தொட்டியை தேடும் தந்தையின் கதையை கருவாக கொண்டு உருவான படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத வகையில் அமைந்துள்ளதால் வசூலில் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தின் வெற்றியின் மூலம் விஜய் சேதுபதிக்கும், இயக்குனர் நித்திலனுக்கும் அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிகிறது.
இந்நிலையில், தற்போது இயக்குனர் பாண்டிராஜுடன் விஜய் சேதுபதி இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
முன்னதாக, மகாராஜா படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் நித்திலன் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்க இருப்பதாகவும் அப்படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
- படப்பிடிப்பு தொடர்ச்சியாக 35 நாட்கள் நடைபெற உள்ளது.
- ‘கூலி’ படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஜெயிலர் படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினி காந்த் மகள் இயக்கத்தில் லால் சலாம், ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். லால் சலாம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறவில்லை.
இதையடுத்து, லைக்கா நிறுவனம் தயாரிக்கும் 'வேட்டையன்' ஒரு ஆக்ஷன் படம் என சொல்லப்படுகிறது. துஷரா விஜயன், அமிதாப்பச்சன், பஹத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், தெலுங்கு நடிகர் ராணா என பலரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத், நாகர்கோவில், கன்னியாகுமாரி மற்றும் கேரளா என பல இடங்களிலும் நடைந்தது. இப்படத்தின் போஸ்டர்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கான டப்பிங் வருகிற 8-ந்தேதி சென்னையில் தொடங்க உள்ளது.
அடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள 'கூலி' படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் ஐதராபாத்தில் தொடங்க உள்ளது. இப்படத்தில் பிரபலங்கள் பலரும் நடிக்க உள்ளனர். படப்பிடிப்பு தொடர்ச்சியாக 35 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்நிலையில், 'கூலி' படத்தில் சினிமா ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரன் பணியாற்ற உள்ளதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் லோகேஷ் கனகராஜ், உங்களுடன் மீண்டும் ஒருமுறை இணைந்ததில் மகிழ்ச்சி கிரிஷ் கங்காதரன்... விரைவில் கூலி படத்தின் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அந்தமானில் வைத்து சூர்யா - பூஜா ஹெக்டேவின் இரண்டு டூயட் பாடல்கள் படமாக்கபட உள்ளன
- இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை நடித்து முடித்துள்ள சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சூர்யாவின் 2D நிறுவனமும் , கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்தின் கதாநாயகியாக பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே இணைத்துள்ளார்.

இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஷ் கிருஷ்ணா, சண்டைப் பயிற்சியாளராக கேச்சா கம்பக், கலை இயக்குநராக ஜாக்கி, எடிட்டராக ஷபீக் முகமது அலி, ஆகியோர் இணைத்துள்ளனர். படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்பராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியானது.

தற்போது சூர்யா 44 படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி நடைபெற்று வருகிறது. அங்குவைத்து சூர்யா - பூஜா ஹெக்டேவின் இரண்டு டூயட் பாடல்கள் படமாக்கபட உள்ளன அடுத்தாக ஊட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் படத்தின் புதிய அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வரும் ஜூலை 23 சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் போஸ்டரும் பர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
- இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த் நடித்துள்ளனர்.
நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம், தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (கோட்). இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி வந்தது. அதன்படி இந்த படத்தின் வி.எஃப்.எக்ஸ். பணிகள் அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

விஜய்யின் கோட் படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படம் தொடர்பான இதர அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
- ரொமான்டிக் வசனம் பேசுமாறு அர்ஜூன் தாஸிடம் கேட்டார்.
கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் அர்ஜூன் தாஸ். இவர் நாயகனாக நடித்த அநீதி, ரசவாதி போன்ற படங்கள் சமீபத்தில் வெளியாகின. இதைத் தொடர்ந்து இவர் விஷால் வெங்கட் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற விழாவில் நடிகர் அர்ஜூன் தாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவுக்கு வருகைதந்த அர்ஜூன் தாஸ்-க்கு மாணவர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்களிடம் கைதி பட வசனத்தை அர்ஜூன் தாஸ் பேசினார்.

இதைகேட்ட மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். பிறகு மாணவர்களின் கேள்விகளுக்கு அர்ஜூன் தாஸ் பதில் அளித்தார். அப்போது மாணவி ஒருவர் ரொமான்டிக் வசனம் ஒன்றை பேசுமாறு அர்ஜூன் தாஸிடம் கேட்டார். அதை கேட்ட அர்ஜூன் தாஸ் மேடையில் இருந்து கீழே இறங்கினார்.
மாணவி இருந்த இடத்திற்கே சென்ற அர்ஜூன் தாஸ் அவரிடம் வாரணம் ஆயிரம் படத்தின் வசனத்தை பேசினார். இதை கண்டு அங்கிருந்த மாணவர்கள் மகிழ்ச்சியில் உற்சாக குரல் எழுப்பினர். தொடர்ந்து பேசிய நடிகர் அர்ஜூன் தாஸ் தனது அடுத்த படம் காதல் கதை கொண்ட ரொமான்டிக் திரில்லராக இருக்கும் என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
- கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என கூறப்படுகிறது.
விஜய்சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்து பெரிய வெற்றியை பெற்றுள்ள படம் மகாராஜா. இந்த படம் விஜய் சேதுபதிக்கு 50-வது படம். படத்தை நித்திலன் இயக்கி இருந்தார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத வகையில் அமைந்து ரசிகர்களின் கைத்தட்டலை பெற்றது.
மகாராஜா படத்தின் வெற்றி மகிழ்ச்சியில் இருக்கும் நித்திலன் அடுத்ததாக புதிய படமொன்றை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் அவரிடம் நித்திலன் கதை சொல்லி இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. சமீபகாலமாக நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இந்த படத்தின் கதையும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை என கூறப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டீன்ஸ் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
- இந்த படத்தில் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குநர், நடிகர் பார்த்திபன். இவர் இயக்கிய முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்று இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்து வருகிறார்.
பல்வேறு திரைப்படங்களில் ஏராளமான கதாபாத்திரங்களில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவர் கடைசியாக தயாரித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இதைத் தொடர்ந்து இவர் தயாரித்து, இயக்கிய படம் இரவின் நிழல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இவர் இயக்கி, தயாரித்திருக்கும் அடுத்த படம் டீன்ஸ். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
ஜூலை 12 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் வெளியாக இருப்பதை தொடர்ந்து, டீன்ஸ் படமும் இதே நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதாக சர்ச்சைகள்.
- தயாரிப்பாளர் கஷ்டத்தை உணர்ந்து நடக்க வேண்டும்.
நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும்போது நிறைய உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.
இந்த நிலையில் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து நடிகை கீர்த்தி சனோன் கூறும்போது, "நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர்களுடன் எத்தனைபேர் இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை ஏற்படுத்த வேண்டும்.
அதிகம்பேரை அழைத்து வருவதால் தயாரிப்பாளருக்கு படப்பிடிப்பில் அதிகம் செலவு ஏற்படும். தயாரிப்பாளர் கஷ்டத்தை உணர்ந்து நடக்க வேண்டும்'' என்றார்.
நடிகை லட்சுமி மஞ்சு கூறும்போது, "ஹாலிவுட் செட்டில் நடிகர்களே அவர்களது இருக்கைகளை கொண்டு வந்து போட்டுக் கொள்வார்கள். நம்ம ஊரில் நடிகை அல்லது நடிகர் வந்தால் நாற்காலியை நகர்த்த கூட உதவியாளர் இருப்பார்.
ஹாலிவுட் நடிகர் நடிகைகள் பக்கத்தில் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட், ஒரு ஹேர் டிரஸ்ஸர் மட்டும்தான் இருப்பார்கள். மிகக் குறைந்த பேருடன் வேலை நடக்கும். நம்ம ஊரில் ஒரு ஹேர் டிரஸ்ஸர் இருந்தால் அவருக்கு ஒரு அசிஸ்டன்ட், ஒரு மேக் அப் ஆர்டிஸ்ட் இருந்தால் அவருக்கு ஒரு அசிஸ்டன்ட் இருப்பார்கள். இப்படி வீண் செலவு எதற்கு என்பதுதான் கேள்வி. பெரிய நடிகர் நடிகைகள் ஒரு படை வைத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்''என்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- வீட்டின் புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
- வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
கேரளாவில் இருந்து வந்து தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறக்கும் நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சினிமாவை தாண்டி தொழில் அதிபராகவும் உயர்ந்து இருக்கிறார். சென்னை எழும்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் வசிக்கும் போயஸ் கார்டனில் நயன்தாரா இடம் வாங்கி வீடு கட்டி வருவதாக ஏற்கனவே தகவல் பரவியது.
தற்போது வீடு கட்டி முடிக்கப்பட்ட நிலையில் புதிய வீட்டில் நயன்தாரா குடியேறி இருக்கிறார். வீட்டின் முன்னால் எடுத்த புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார். அவை வைரலாகின்றன.

புதிய வீட்டுக்கு சென்ற நயன்தாராவுக்கு வலைத்தளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். நயன்தாரா தற்போது தி டெஸ்ட், மண்ணாங்கட்டி, சின்ஸ் 1960, டியர் ஸ்டூடண்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
https://iflicks.in/
- இந்த படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
- சமீபத்தில் டிமான்டி காலனி 2 படத்தின் டீரைலரை படக்குழு வெளியிட்டது.
2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியது.
இந்த படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் டிமான்டி காலனி 2 படத்தின் டீரைலரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளது.
- படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது
இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் என பல தமிழ் சினிமா நட்சத்திரங்கள் நடித்திருக்கும் கருடன் அதிரடி திரில்லர் திரைப்படமாக அமைந்தது. இப்படத்தினை தயாரிப்பாளர் கே குமார் மாற்றம் இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மற்றும் லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
குடும்பங்களோடு ரசிக்கும் வகையில் அதிரடி - திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள 'கருடன்' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ஆர்தர் எ வில்சன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங் செய்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரோஷ்ணி ஹரிப்ரியன், ரேவதி சர்மா, மைம் கோபி, மொட்டை ராஜேந்திரன் என பல தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கருடன் திரைப்படம் வெளியான முதல் நாளில் இருந்து ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. திரைக்கதை, வசனங்கள், நடிப்பு என இப்படம் பெரிய அளவில் ரசிகர்களின் மனதை வென்று புகழ் பெற்றுள்ளது. கிராமத்து திரைக்கதையில் வெளியான இப்படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்று இந்த ஆண்டின் வெற்றி பட வரிசையில் இணைந்துள்ளது.
விடுதலை படத்தின் மூலம் நாயகனாக நடிக்க தொடங்கிய நகைச்சுவை நடிகர் சூரி, இப்படத்தில் நாயகனாக நடித்து பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார். இப்படத்தில் சூரியின் நடிப்பை பலரும் பாராட்டினர். நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டு இருந்தவர். விடுதலை படத்திற்கு பிறகு முற்றிலும் மாறுப்பட்ட சூரியாக திரையில் வந்தார். அதற்கடுத்து கருடன் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி மக்கள் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.
படம் திரையரங்குகளில் ஓடி இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வாங்கியுள்ளது. படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் நாளை [ஜூலை 3] வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






