ஆகஸ்ட்டில் வெளியாகும் டிமான்ட்டி காலனி-2?

இந்த படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சமீபத்தில் டிமான்டி காலனி 2 படத்தின் டீரைலரை படக்குழு வெளியிட்டது.
ஆகஸ்ட்டில் வெளியாகும் டிமான்ட்டி காலனி-2?
Published on

2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான 'டிமான்ட்டி காலனி' முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியது.

இந்த படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்திருக்கிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் டிமான்டி காலனி 2 படத்தின் டீரைலரை படக்குழு வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில், 'டிமான்ட்டி காலனி -2' படத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com