என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi Manju"

    • நான் ஆணாதிக்கத்தை பொறுத்துக்கொள்ளவே மாட்டேன்.
    • தனக்கு பிடித்த பெண்ணை காதலிக்க ஒரு ஆண் பல்வேறு முயற்சிகளை செய்வார்.

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். தமிழில் 'கடல்', 'காற்றின் மொழி', 'இஞ்சி இடுப்பழகி', 'பூக்கி' படங்களில் நடித்துள்ளார்.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மஞ்சு பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

    அதில், "நான் ஆணாதிக்கத்தை பொறுத்துக்கொள்ளவே மாட்டேன். திருமணம் என்ற அழகிய பந்தத்தில் ஒருவர் சரியில்லை என்றாலும் அந்த உறவு அர்த்தமற்றதாகி விடும். கணவனின் அடக்குமுறைகளை சகித்து வாழ்வது என்பது அவரவர் விருப்பம். அவர்களிடம் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். யாரும் நம்மை அடிக்க உரிமை கிடையாது. சுயமரியாதை நமக்கு முக்கியம்.

    ஒருகாலத்தில் காதலை பெற்றோரிடம் சொல்லவே பயந்தோம். இன்றைக்கு 'நான் ஒருவருடன் உறவில் இருக்கிறேன்' என்று கூறும் நிலை வந்திருக்கிறது. சமூக வலைதளங்கள் நம் மனதை அசைத்து பார்த்துவிட்டன.

    தனக்கு பிடித்த பெண்ணை காதலிக்க ஒரு ஆண் பல்வேறு முயற்சிகளை செய்வார். ஆனால் இன்று ஒரு பெண்ணுக்கு அனுப்ப வேண்டிய எஸ்.எம்.எஸ்-ஐ பலருக்கும் காப்பி செய்து அனுப்புகிறேன். உலகம் நிறைய மாறிவிட்டது. இதுபோன்ற ஆசாமிகளை கண்டறிவது பெண்களின் பொறுப்பு தான் என கூறினார்.

    • தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதாக சர்ச்சைகள்.
    • தயாரிப்பாளர் கஷ்டத்தை உணர்ந்து நடக்க வேண்டும்.

    நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும்போது நிறைய உதவியாளர்களை அழைத்து வந்து அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க தயாரிப்பாளர்களை நிர்ப்பந்திப்பதாக சர்ச்சைகள் கிளம்பி உள்ளன.

    இந்த நிலையில் தயாரிப்பாளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து நடிகை கீர்த்தி சனோன் கூறும்போது, "நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும்போது அவர்களுடன் எத்தனைபேர் இருக்க வேண்டும் என்று ஒரு வரைமுறை ஏற்படுத்த வேண்டும்.

    அதிகம்பேரை அழைத்து வருவதால் தயாரிப்பாளருக்கு படப்பிடிப்பில் அதிகம் செலவு ஏற்படும். தயாரிப்பாளர் கஷ்டத்தை உணர்ந்து நடக்க வேண்டும்'' என்றார்.

    நடிகை லட்சுமி மஞ்சு கூறும்போது, "ஹாலிவுட் செட்டில் நடிகர்களே அவர்களது இருக்கைகளை கொண்டு வந்து போட்டுக் கொள்வார்கள். நம்ம ஊரில் நடிகை அல்லது நடிகர் வந்தால் நாற்காலியை நகர்த்த கூட உதவியாளர் இருப்பார்.

    ஹாலிவுட் நடிகர் நடிகைகள் பக்கத்தில் ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட், ஒரு ஹேர் டிரஸ்ஸர் மட்டும்தான் இருப்பார்கள். மிகக் குறைந்த பேருடன் வேலை நடக்கும். நம்ம ஊரில் ஒரு ஹேர் டிரஸ்ஸர் இருந்தால் அவருக்கு ஒரு அசிஸ்டன்ட், ஒரு மேக் அப் ஆர்டிஸ்ட் இருந்தால் அவருக்கு ஒரு அசிஸ்டன்ட் இருப்பார்கள். இப்படி வீண் செலவு எதற்கு என்பதுதான் கேள்வி. பெரிய நடிகர் நடிகைகள் ஒரு படை வைத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ள வேண்டும்''என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×