இந்தியன் 2 உடன் மோதும் டீன்ஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டீன்ஸ் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்தியன் 2 உடன் மோதும் டீன்ஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on

தமிழ் திரையுலகில் வித்தியாசமான படைப்புகளை தொடர்ந்து எடுத்து வருபவர் இயக்குநர், நடிகர் பார்த்திபன். இவர் இயக்கிய முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருதை வென்று இருக்கிறார். இயக்கம் மட்டுமின்றி படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்து வருகிறார்.

பல்வேறு திரைப்படங்களில் ஏராளமான கதாபாத்திரங்களில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவர் கடைசியாக தயாரித்து, இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 பல்வேறு விருதுகளை வென்று குவித்தது. இதைத் தொடர்ந்து இவர் தயாரித்து, இயக்கிய படம் இரவின் நிழல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், இவர் இயக்கி, தயாரித்திருக்கும் அடுத்த படம் டீன்ஸ். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் இந்த படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார்.

ஜூலை 12 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் சங்கர் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தியன் 2 படம் வெளியாக இருப்பதை தொடர்ந்து, டீன்ஸ் படமும் இதே நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com