என் மலர்

  சினிமா செய்திகள்

  சூர்யா
  X
  சூர்யா

  பருத்திவீரன் ஸ்டைலில் கார்த்தி.. சூர்யா பகிர்ந்த புரோமோ

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் ‘விருமன்’ படத்தில் இடம் பெற்றுள்ள பாடலின் புரோமோவை சூர்யா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
  குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இதையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கத்தில் தற்போது ‘விருமன்’ படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

  விருமன்
  விருமன்

  கிராமத்து கதையம்சத்தில் இப்படம் தயாராகி வருகிறது. விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை வருகிற ஜூன் மாதம் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

  விருமன்
  விருமன்

  இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள “கஞ்சா பூ கண்ணாலே” என்னும் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. இதனை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, விருமா கலக்குது என்றும் திரைத்துறையில் 25 வருடத்தை கடக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கு வாழ்த்தும் கூறி பகிர்ந்துள்ளார். பருத்திவீரன் பட ஸ்டைலில் இருக்கும் கார்த்திக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.  Next Story
  ×