என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா செய்திகள்
X
வீடியோ வெளியிட்ட தளபதி 66 இயக்குனர்.. உற்சாகத்தில் ரசிகர்கள்
Byமாலை மலர்7 April 2022 6:44 AM GMT (Updated: 7 April 2022 6:44 AM GMT)
தளபதி 66 படத்தின் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.
விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். விறுவிறுப்பாக இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 13-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தளபதி 66 பூஜை
இப்படத்தை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். 'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இதில் நடிக்கவுள்ள நடிகை குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி இப்படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்துள்ளார்.
விஜய் - ராஷ்மிகா மந்தனா
விஜய்யின் 66-வது படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் விஜய், ராஷ்மிகா, இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், அந்த நிகழ்வின் போது எடுக்கப்பட்ட வீடியோவை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Next Story
×