என் மலர்

  சினிமா செய்திகள்

  கம்பி வேலி போட்டிருக்கும் திரையரங்கம்
  X
  கம்பி வேலி போட்டிருக்கும் திரையரங்கம்

  கொண்டாட தயாராகும் ரசிகர்கள்... கம்பி வேலி போட்ட திரையரங்க நிர்வாகம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திரையரங்கில் திரைக்கு முன்பாக ரசிகர்கள் செல்வதைத் தடுக்க கம்பிவேலி அமைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்து இருக்கிறார்கள்.
  ஒவ்வொரு நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போதும், ரசிகர்கள் கொண்டாடும் விதமாக திரையரங்குகள் முன்பாக பேனர் வைப்பது, மேளம், தாளம் போட்டு நடனம் ஆடுவது, பால் அபிஷேகம் செய்வது, திரையில் படம் ஆரம்பிக்கும் போது பேப்பர் தூவுவது, திரைக்கு முன் நடனம் ஆடுவது என்று கொண்டாடுவார்கள்.

  அதுபோல், எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதை கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீகாகுளத்தில் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்கம் ஒன்றில், திரைக்கு முன்னே உள்ள மேடையில் ரசிகர்கள் ஏறாமல் தடுக்கும் வகையில் கம்பி வேலியை திரையரங்க நிர்வாகம் அமைத்திருக்கிறார்கள்.

  ஆர்.ஆர்.ஆர்.

  திரையில் நாயகர்களைப் பார்த்த உற்சாகத்தில் அந்த மேடையில் ஏறி ஆர்ப்பரிக்கும் ரசிகர்களால், திரைக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் அறிவித்துள்ளது.
  Next Story
  ×