என் மலர்

  சினிமா செய்திகள்

  ஆர்.ஜே.பாலாஜி
  X
  ஆர்.ஜே.பாலாஜி

  நயன்தாராவை தொடர்ந்து பிரபல நடிகையுடன் நடிக்கும் ஆர்.ஜே.பாலாஜி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது கதாநாயகனாக நடித்து வரும் ஆர்.ஜே.பாலாஜி, புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
  விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் காமெடி வேடத்தில் நடித்தவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படத்தில் இவருடைய காமெடி மிகப்பெரிய அளவில் எடுபடவே, தொடர்ந்து மிகப்பெரிய படங்கள் அவரைத் தேடி வந்தவண்ணம் உள்ளன. இவர் ஹீரோவாக நடித்த ‘எல்.கே.ஜி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

  அதைத்தொடர்ந்து, மூக்குத்தி அம்மன் படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்திருந்தார். இதில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். தற்போது மீண்டும் கதாநாயகனாக ஆர்.ஜே.பாலாஜி நடிக்க இருக்கிறார். கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு 
  நடைபெற்று வருகிறது.

  இப்படத்தை ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இவர், பிரதிவ்ராஜ் நடித்த மலையாள படமான “தியான்” ( ‘TIYAAN’ ) ஹிட் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் டார்க்-காமெடி-திரில்லர் படமாக உருவாகிறது. இதன் பூஜை இன்று எளிமையாக நடைபெற்றது. மார்ச் 23ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு ஆரம்பமாகி, தொடர்ந்து நடைபெறுகிறது.

  ஐஸ்வர்யா ராஜேஷ் - ஆர்.ஜே.பாலாஜி
  ஐஸ்வர்யா ராஜேஷ் - ஆர்.ஜே.பாலாஜி

  வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரித்துள்ள இப்படத்தை நட்டு தேவ் இயக்கியுள்ளார். வருண் கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 11-ந் தேதி ரிலீசாக உள்ளது.
  Next Story
  ×