என் மலர்

  சினிமா செய்திகள்

  புஷ்பா
  X
  புஷ்பா

  சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்ற புஷ்பா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற புஷ்பா திரைப்படம் சிறந்த படத்திற்கான விருதை தட்டிச் சென்றுள்ளது.
  சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வெளியான படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும் அவருக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் நடித்திருந்தார்.

  புஷ்பா
  புஷ்பா

  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பாகுபலி, கேஜிஎப் பட பாணியில் இப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் முதல் பாகம் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது.

  புஷ்பா
  புஷ்பா

  இந்நிலையில் புஷ்பா திரைப்படம் 'தாதாசாஹேப் பால்கே' சர்வதேச திரைப்பட விழா விருதுகள் 2022-ல் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை தட்டி சென்றுள்ளது.
  Next Story
  ×