search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ்
    X
    சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ்

    சிரஞ்சீவிக்கு ராக்கி கட்டி தங்கையாக நடிப்பதை உறுதி செய்த கீர்த்தி சுரேஷ்

    சிரஞ்சீவி - கீர்த்தி சுரேஷ் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ‘போலா ஷங்கர்’ படத்தை மெஹர் ரமேஷ் இயக்க உள்ளார்.
    சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடித்த வேதாளம் திரைப்படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. இப்படத்தில் அஜித் ஜோடியாக சுருதிஹாசனும், தங்கை கதாபாத்திரத்தில் லட்சுமிமேனனும் நடித்து இருந்தனர். தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் அஜித் வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். 

    ‘போலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை மெஹர் ரமேஷ் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே சிரஞ்சீவி நடித்த ‘பில்லா’ படத்தின் தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார். 

    சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ்
    சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ்

    இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

    ரக்‌‌ஷ பந்தன் தினமான இன்று நடிகர் சிரஞ்சீவிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ராக்கி கட்டுவதை போன்ற புகைப்படம் அடங்கிய சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. 
    Next Story
    ×