search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அண்ணாத்த படத்தில் ரஜினி
    X
    அண்ணாத்த படத்தில் ரஜினி

    அண்ணாத்த படத்தில் இணைந்த கார்த்தி பட வில்லன்

    சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் கார்த்தியுடன் மோதிய வில்லன் நடிகர் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
    சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், யோகிபாபு உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

    இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ‘அண்ணாத்த’ திரைப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    அபிமன்யு சிங்
    அபிமன்யு சிங்

    இந்நிலையில், இப்படத்தில் அபிமன்யு சிங் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×