search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சிம்பு
    X
    சிம்பு

    எப்படி இருந்த நான் இப்படியாகிட்டேன்.... வைரலாகும் சிம்புவின் செல்பி

    தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் சிம்புவின் செல்பி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளை சந்தித்தவர் சிம்பு. பல மாதங்களாக படப்பிடிப்பு செல்லாமல், பட வாய்ப்புகள் இல்லாமல் வீட்டில் இருந்து உடல் எடையை கூட்டினார். அதன்பின் கொரோனா ஊரடங்கு காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்தவர் ஒரு மாதத்தில் ஈஸ்வரன் படப்பிடிப்பை முடித்தார்.

    தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பு பெற்றது. சிம்பு போஸ்டரில் மிரட்டலான பார்வையுடன் எரியும் காட்டில் சிறு வயது தோற்றத்தில் மிரட்டியிருந்தார். ஏற்கனவே உடல் எடை குறைந்து பிட் ஆக மாறியிருந்த சிம்பு இந்தப் படத்திற்காக மேலும் தீவிர உடற்பயிற்சி செய்து 15 கிலோ வரை எடையைக் குறைத்துள்ளார்.

    சிம்பு
    சிம்புவின் செல்பி

    சிம்பு தற்போது இருக்கும் உடல் அமைப்புடன், உடல் எடை அதிகம் இருக்கும் புகைத்துடன் இணைத்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து இருக்கிறார். இதைப்பார்த்த அனைவரும் சிம்புவின் மாற்றத்தை வியந்து பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
    Next Story
    ×