search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    சூர்யா
    X
    சூர்யா

    நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகும் சூர்யாவின் புதிய படம்

    சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் புதிய படம் ஒன்று ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரின் 39-வது படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். ‘ஜெய் பீம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார். சூர்யாவின் பிறந்தநாளில் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர்.

    இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 4 மொழிகளில் ஜெய் பீம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    சூர்யா

    ஏற்கனவே சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×