search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பிரித்விராஜ்
    X
    பிரித்விராஜ்

    பிரபல நடிகரை மீண்டும் இயக்கும் பிரித்விராஜ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

    நடிகராகவும் இயக்குனராகவும் இருக்கும் பிரித்விராஜ், தனது அடுத்த படத்தை பிரபல நடிகரை வைத்து இயக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
    மலையாள நடிகர் பிரித்விராஜ் சினிமாவில் நடிகராகும் முன்பு, இணை இயக்குநராக பணிபுரிந்தவர். அந்த வகையில் ஓர் இயக்குநராக தனது முதல் படத்தை மோகன்லாலை வைத்து 'லூசிபர்' படத்தை இயக்கினார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரித்விராஜ் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

    மோகன்லால்
    பிரித்விராஜ் இயக்கும் அடுத்த படத்தின் தலைப்பு

    இந்நிலையில், பிரித்விராஜ் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், மீண்டும் மோகன்லாலை வைத்து எனது இரண்டாவது படத்தை இயக்க இருக்கிறேன். இந்தப் படத்திற்கு ப்ரோ டாடி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

    Next Story
    ×