search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அஜித், எடப்பாடி பழனிச்சாமி
    X
    அஜித், எடப்பாடி பழனிச்சாமி

    முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள் - வைரலாகும் வீடியோ

    தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
    அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படம் பூஜையுடன் தொடங்கப்பட்டதுக்கு பின், எந்தவித அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடாமல் உள்ளது.

    குறிப்பாக இப்படத்தில் அஜித்தை தவிர யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதைக்கூட இதுவரை தெரிவிக்கவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அப்டேட் கேட்டு சமூக வலைதளங்களில் ஹேஷ்டேக்கை டிரெண்டாக்குவதும் உண்டு. 

    இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ சமூக  வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஓரிரு மாதங்களில் இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×