search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    விக்னேஷ் சிவன், நயன்தாரா
    X
    விக்னேஷ் சிவன், நயன்தாரா

    வைரலாகும் விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள்

    விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    2021 புத்தாண்டு தினத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சினிமா பிரபலங்கள் பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ் திரையுலகில் காதல் ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடியும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளனர். 

    விக்னேஷ் சிவன், நயன்தாரா

    நயன்தாராவுடன் புத்தாண்டு கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் அதில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இப்போது நாம் வாழ்வில் ஒரு மறக்கமுடியாத கட்டத்தை கடந்து விட்டோம். தற்போது 2021ஆம் ஆண்டை நோக்கி முன்னேறுவோம். 

    விக்னேஷ் சிவன், நயன்தாரா

    இந்தாண்டு சிறந்த தருணங்களுடனும், மகிழ்ச்சியாகவும், நல்ல ஆரோக்கியத்துடனும், அமைதியாகவும், திருப்தியாகவும் அமைய அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன
    Next Story
    ×