என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சினிமா
X
பெண்ணுடன் லிப்லாக் முத்தக்காட்சி.... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நித்யா மேனன்
Byமாலை மலர்15 July 2020 9:35 AM GMT (Updated: 15 July 2020 9:35 AM GMT)
பாலிவுட் வெப் தொடர் ஒன்றில் பெண்ணுடன் லிப்லாக் முத்தக்காட்சியில் நடித்து நடிகை நித்யா மேனன் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடித்து வருபவர் நடிகை நித்யாமேனன். இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் தமிழில் வெப்பம், மெர்சல், ஓ கே கண்மணி, சைக்கோ போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அடுத்ததாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் தி அயர்ன் லேடி படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தியில் நடிகை நித்யா மேனன் நடித்துள்ள வெப் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 'பிரீத் - இன் டு த ஷேடோஸ்' என்ற அந்த வெப் தொடர் சில நாட்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் நடிகை நித்யா மேனன் மற்றொரு நடிகையான சுருதி பாப்னா என்பவருடன் லிப்லாக் காட்சி ஒன்றில் நடித்திருக்கிறார். காருக்குள் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் காட்சி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தான் நடிக்கும் படங்களில் கவர்ச்சியாக உடை அணிய மறுக்கும் நித்யா மேனன், இப்படிப்பட்ட ஒரு காட்சியில் நடித்திருப்பது வியப்பாக உள்ளதாக ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Next Story
×