என் மலர்

  சினிமா

  ரசிகரை நெகிழ வைத்த செல்வராகவன்
  X

  ரசிகரை நெகிழ வைத்த செல்வராகவன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூர்யாவை வைத்து ‘என் ஜி கே’ திரைப்படத்தை இயக்கி வரும் செல்வராகவன், தற்போது ரசிகர் ஒருவரை நெகிழ வைத்துள்ளார். #NGK #Selvaraghavan
  காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘இரண்டாம் உலகம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

  தற்போது இவரது இயக்கத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மேலும் சூர்யாவை வைத்து ‘என்ஜிகே’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், இவரது தீவிர ரசிகனை நேரில் சந்தித்து இருக்கிறார். இந்த சந்திப்பின் போது ரசிகர் ஒரு டிசர்ட்டை அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். அந்த டிசர்ட்டை இன்று அணிந்துக் கொண்டு, புகைப்படம் எடுத்து அன்பு பரிசுக்கு நன்றி என்று பதிவு செய்திருக்கிறார்.  இதைப் பார்த்த ரசிகர் மிகவும் நன்றி தெரிவித்து, என்னுடைய பெற்றோர் அளவிற்கு உங்கள் மீது மரியாதை உள்ளது என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.
  Next Story
  ×