என் மலர்

  சினிமா

  தனுஷுடன் இணையும் விஷ்ணு விஷால்
  X

  தனுஷுடன் இணையும் விஷ்ணு விஷால்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷ்ணு விஷால் நடிப்பில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சசன்', `ஜெகஜாலக் கில்லாடி' உள்ளிட்ட படங்கள் உருவாகி வரும் நிலையில், விஷ்ணு அடுத்ததாக தனுஷ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். #Dhanush #VishnuVishal
  விஷ்ணு விஷால் நடிப்பில் `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சசன்', `ஜெகஜாலக் கில்லாடி' உள்ளிட்ட படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் ராட்சசன் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  இந்த நிலையில், விஷ்ணு விஷால் தற்போது வெங்கடேஷ் ராதாகிருஷ்ணன் என்ற புதுமுக இயக்குநர் இயக்கத்தில் நடித்து வருகிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ஷிவானியும், முக்கிய கதாபாத்திரங்களில் பிரபு, சரண்யா பொன்வண்ணன், முனிஸ்காந்த், சிங்கம் புலி, பிரவீன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.  இந்த படத்தை முடித்த பிறகு விஷ்ணு விஷால், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதுகுறித்து விஷ்ணு விஷாலிடம் கேட்டபோது, தனுஷ் தயாரிப்பில் நடிக்க இருப்பது உண்மை தான். எனினும் அந்த படம் குறித்த தகவல்களை தற்போது தெரிவிக்க முடியாது. இந்த படம் குறித்த மற்ற தகவல்களை தனுஷ் விரைவில் வெளியிடுவார் என்று கூறினார். 

  இந்த படத்தை புதுமுக இயக்குநர் ஒருவர் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Dhanush #VishnuVishal

  Next Story
  ×