search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    என்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா
    X

    என்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா

    திருமணத்திற்குப் பிறகு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஜோதிகா, குழந்தைகளை கவனிப்பதில் சூர்யாவே சிறந்தவர் என்று கூறியிருக்கிறார். #Suriya #Jyothika
    திருமணத்துக்கு பின் சில ஆண்டுகள் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்த ஜோதிகா இப்போது நடிப்பில் மறுபடியும் பிசியாக இருக்கிறார். உங்களுக்கான வேடங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு ’உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் 36 வயதினிலே படத்துக்குப் பிறகு ஒன்றரை வருடம் வரை எனக்கு எந்தப் படமும் வரவில்லை. ‘மகளிர் மட்டும்’ தொடங்கிய போதுதான் நிறைய படங்கள் வந்தன. அவற்றில் நான்கு படங்கள் பெரிய ஹீரோக்களின் படங்கள்.

    ஆனால் பெண்களுக்கு முக்கியத்துவ‌ம் தந்து பவர்புல்லா இருந்தால் மட்டும்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வந்து நடிக்கிறேன். அந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாகவும் கதாபாத்திரமாகவும் இருக்கவேண்டும்’ என்று கூறி இருக்கிறார்.



    சூர்யா பற்றி கேட்டதற்கு ‘என்னைவிட குழந்தைகளை கவனிப்பதில் அவர்தான் பெஸ்ட். அவர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்ய விடுவார். நான் கொஞ்சம் கண்டிப்பான தாய்’ என்று பதில் அளித்து இருக்கிறார்.
    Next Story
    ×