என் மலர்

  சினிமா

  இன்னமும் படபடப்பாக தான் இருக்கிறது - சுனைனா
  X

  இன்னமும் படபடப்பாக தான் இருக்கிறது - சுனைனா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் காளி படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் சுனைனா, இன்னமும் படபடப்பாக தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். #Kaali #Sunaina
  சுனைனா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’. இதில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்திருக்கிறார். மேலும் சுனைனாவுடன் அஞ்சலி, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள். கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

  இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நாயகி ஷில்பா மஞ்சுநாத் பேசும்போது, ‘தமிழில் என்னுடைய முதல் படம், முதல் மேடை. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்த போது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருப்பார் என்று தான் நினைத்தேன். ஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனர். படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்’ என்றார்.  சுனைனா பேசும்போது, ‘ஷில்பாவும், அம்ரிதாவும் படபடப்பாக உணர்ந்ததாக கூறினார்கள். நான் என்னுடைய வம்சம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அழுதே விட்டேன். அதை ஒப்பிடும் போது இது பரவாயில்லை. 19 படங்களில் நடித்து விட்டாலும் இன்னமும் எனக்கு படபடப்பாக தான் இருக்கிறது. இந்த படத்தின் மையக்கருத்தே அன்பு தான். இந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை. விஜய் ஆண்டனி அவர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராக பார்த்திருக்கிறேன், இப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்’ என்றார். 
  Next Story
  ×