search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    காலா பாடல்களை இணைய தளத்தில் வெளியிட்டார் தனுஷ்
    X

    காலா பாடல்களை இணைய தளத்தில் வெளியிட்டார் தனுஷ்

    பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காலா’ படத்தின் பாடல்களை இணைய தளத்தில் நடிகர் தனுஷ் வெளியிட்டிருக்கிறார். #Rajini #Kaala #KaalaSongs
    ரஜினிகாந்த் நடிப்பில் ‘காலா’ படம் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று (மே 9-ஆம் தேதி) மாலை நடைபெற இருக்கிறது.  

    படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது. காலா படத்தின் தமிழ் பதிப்பில் மொத்தம் 8 பாடல்கள் உள்ளன. மற்ற மொழிகளில் 9 பாடல்கள் உள்ளன. இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில், பாடல்கள் இன்று காலை 9 மணிக்கு, அனைத்து விதமான டிஜிட்டல் தளங்களில் வெளியாகும் என்று ‘காலா’ படத்தை தயாரித்துள்ள நடிகர் தனுஷ் நேற்று டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். 

    அதன்படி, இன்று காலை 9 மணியளவில் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பாடல்களை வெளியிட்டுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 



    பா.இரஞ்சித் இயக்கத்தில் மும்பையை பின்னணியாக கொண்டு உருவாகி இருக்கும் இந்த படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. 

    சமுத்திரக்கனி, சம்பத், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், அருந்ததி, சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். #Rajini #Kaala #KaalaSongs
    Next Story
    ×