என் மலர்

  சினிமா

  ஆதார் பிரச்சினையை கிளப்பும் விஷால்
  X

  ஆதார் பிரச்சினையை கிளப்பும் விஷால்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜுன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘இரும்புத்திரை’ படம் ஆதார் பிரச்சினையை மையமாக வைத்து உருவாகி உள்ளது. #Vishal #IrumbuThirai
  விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் விஷால் தயாரித்துள்ள படம் ‘இரும்புத்திரை’. விஷால் நாயகனாக நடிக்கும் இதில், சமந்தா நாயகியாக நடிக்கிறார். அர்ஜுன், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன்சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படத்துக்கு, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு செய்திருக்கிறார். திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

  லைகா நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த படத்தை கிரிஷ் சினிகிரியே‌ஷன் சார்பில் ஸ்ரீதரன் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்கிறார்.

  “இந்த படத்தில் விஷால் ராணுவ மேஜராக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார். சமந்தா டாக்டராக முக்கிய வேடத்தில் வருகிறார். அர்ஜுன் அதிரடி வில்லனாக நடித்துள்ளார். இதில் ஆதார் அடையாள அட்டையால் ஒரு சாதாரண குடி மகனுக்கு என்ன என்ன பிரச்சினைகள் வருகிறது? எப்படிப்பட்ட சிக்கல்களை சந்திக்க வேண்டியது வரும் என்பதை விஷால் அலசுவதாக காட்சிகள் உள்ளன. டிஜிட்டல் பணபரிமாற்றம், ஜிஎஸ்டி உள்ளிட்டவை பற்றிய அரசியல் விமர்சனங்களும் இடம் பெறுகின்றன. எனவே ‘இரும்புத்திரை’ பரபரப்பை ஏற்படுத்தும் படமாக இருக்கும்” என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
  Next Story
  ×