என் மலர்

  சினிமா

  கருத்து சொல்லி ரன்வீர் சிங் படவாய்ப்பை தவறவிட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி
  X

  கருத்து சொல்லி ரன்வீர் சிங் படவாய்ப்பை தவறவிட்ட ஸ்ரீதேவி மகள் ஜான்வி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ‘தடக்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியிருக்கும் ஜான்வி கபூர், ரன்வீர் சிங் நடிப்பில் உருவகா இருக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டிருக்கிறார். #JhanviKapoor
  ஸ்ரீதேவி மகள் ஜான்வி ‘தடக்’ என்ற இந்தி படம் மூலம் நாயகி ஆகி இருக்கிறார். கரண்ஜோகர் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டார் நாயகனாக நடிக்கிறார்.

  ரன்வீர்சிங் நாயகனாக நடிக்கும் ‘சிம்பா’ என்ற புதிய படத்தை ரோஹித் ஷெட்டி இயக்குகிறார். இதில் கத்ரீனாகைப், ஜான்வி, சாராஅலிகான், பிரியா பிரகாஷ் இவர்களில் ஒருவரை நாயகி ஆக்க அவர் திட்டமிட்டு இருந்தார். இதையடுத்து, விருப்பத்தை சொல்வதற்காக ஜான்வி, அவருடைய தோழியும் சயிப் அலிகானின் மகளுமான சாரா ஆகியோரிடம் கதையை கொடுத்து படித்துப் பார்க்கும்படி கூறினார்.

  அதை படித்த சாரா எந்த கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். ஆனால் ஜான்வி, “ ‘சிம்பா’ படத்தில் என்னை நடிக்க அழைக்கிறார்கள். ரன்வீர்சிங் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடிக்க பயமாக இருக்கிறது” என்று மனதில் பட்டதை சிலரிடம் கூறி இருக்கிறார்.  இதை அறிந்த இயக்குனர் ரோஹித் ஷெட்டி, ஸ்ரீதேவி மகள் ஜான்வியை விட்டுவிட்டு சாராவை தனது படத்தின் நாயகியாக்கியுள்ளார். சாராவின் முதல் படமான ‘கேதர்நாத்’ பாதியில் நிற்கிறது. இந்த நிலையில் அவருக்கு ‘சிம்பா’ படவாய்ப்பு கிடைத்துள்ளது. உண்மையை வெள்ளை மனதுடன் சொன்ன ஜான்வி பெரிய படவாய்ப்பை இழந்த செய்தி, இந்தி பட உலகில் வேகமாக பரவி வருகிறது. #JhanviKapoor
  Next Story
  ×