என் மலர்

  சினிமா

  நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்
  X

  நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், சமீபத்தில் இந்தியா திரும்பினர். அங்கு எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவரது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். #Nayanthara
  நயன்தாராவும், டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலிக்கின்றனர். நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். நயன்தாரா காது கேளாத பெண்ணாக நடித்து இருந்தார். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். சென்னையில் ஒரே வீட்டில் தங்குவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.

  ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருவரும் நெருக்கமாக பழகி வருகிறார்கள். கடந்த மாதம் காதலர் தினத்தை அமெரிக்காவில் கொண்டாடி விட்டு வந்தனர். அப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் படத்தையும் டுவிட்டரில் வெளியிட்டனர்.

  தற்போது மீண்டும் அமெரிக்கா சென்று இருக்கிறார்கள். அங்கு பல இடங்களில் ஜோடியாக சுற்றுகிறார்கள். இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட படங்களை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.  நயன்தாரா ஏற்கனவே நடிகர் சிம்புவை காதலித்தார். பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதைத் தொடர்ந்து பிரபுதேவாவுடன் காதல் மலர்ந்தது. இருவரும் நெருங்கி பழகினார்கள். திருமணத்துக்கும் தயாரானார்கள். இதற்காக நயன்தாரா மதம் மாறவும் செய்தார். ஆனால் அந்த காதலும் முறிந்துவிட்டது.

  இந்நிலையில், நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் முடிந்துவிட்டதா அல்லது திருமணம் செய்துகொள்ளாமலேயே சேர்ந்து வாழ்கிறார்களா? என்று திரையுலகினர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். விஸ்வாசம் படத்தில் அஜித்குமார் ஜோடியாகவும் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் நயன்தாராவுடன் பேசி வருகிறார்கள். இந்தநிலையில் தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. #Nayanthara #VigneshShivn
  Next Story
  ×