என் மலர்

  சினிமா

  பூஜையுடன் துவங்கிய விஜய் தேவரகொண்டாவின் முதல் தமிழ் படம்
  X

  பூஜையுடன் துவங்கிய விஜய் தேவரகொண்டாவின் முதல் தமிழ் படம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவர்கொண்டா - மெஹ்ரீன் பிர்சாடா நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. #VijayDevarakonda #MehreenPirzada
  ‘அரிமா நம்பி’ ‘இருமுகன்’ படங்களை இயக்கிய ஆனந்த்சங்கர் அடுத்ததாக காதல் கலந்த ஆக்‌ஷன் படத்தை இயக்கவிருக்கிறார்.  அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடித்த மெஹ்ரீன் பிர்சாடா நடிக்கிறார். 

  ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை ஐதராபாத்தில் இன்று நடைபெற்றது. பூஜையில் நாயகன் விஜய் தேவரகொண்டா, மெஹ்ரீன் பிர்சாடா, இயக்குநர் ஆனந்த் சங்கர், தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.   தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் சத்யராஜ், நாசர் முக்கிய கதபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர். படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. #VijayDevarakonda #MehreenPirzada

  Next Story
  ×