search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    பேய் பசிக்கு பாட்டு பாடிய விஜய் சேதுபதி
    X

    பேய் பசிக்கு பாட்டு பாடிய விஜய் சேதுபதி

    யுவன் இசையில் உருவாகி வரும் ‘பேய் பசி’ படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி பாட்டு பாடி இருக்கிறார். #VijaySethupathi #Yuvan
    ரெட் ஈஸ்ட் கிரியே‌ஷன் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரிக்கும் படம் ‘பேய் பசி’. இதில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அம்ரிதா நடிக்கிறார். இவர்களோடு விபின், புதுமுகம் நமீதா, டேனியல், பகவதி பெருமாள், கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

    ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உள்ளே நடக்கும் திகில் கதையாக உருவாக்கி வருகிறார்கள். ஸ்ரீநிவாஸ் கவி நயம் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.



    இவருடைய இசையில் முதல் முறையாக விஜய் சேதுபதி பாட்டு பாடி இருக்கிறார். இப்பாடல் சிறந்த பாடலாக உருவாகி இருக்கிறது என்று யுவன் கூறியிருக்கிறார். நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த விஜய் சேதுபதி பாடகராக நிச்சயம் இடம் பிடிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இந்தப் பாடல் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.
    Next Story
    ×