என் மலர்

  சினிமா

  அசுர குருவாக மாறிய விக்ரம் பிரபு
  X

  அசுர குருவாக மாறிய விக்ரம் பிரபு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பக்கா, துப்பாக்கி முனை படத்தை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிக்க இருக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. #VikramPrabhu
  ‘நெருப்புடா’ படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் பிரபு ‘பக்கா’ படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை தவிர தற்போது தினேஷ் செல்வராஜின் ‘துப்பாக்கி முனை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில், மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க விக்ரம் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த புதிய படத்திற்கு ‘அசுரகுரு’ என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்தீப் இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர்.  இந்த படத்தில் யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இதன் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. அதிரடியான திகில் படமாக உருவாக இருக்கும் இப்படத்தை ஜே.எஸ்.பி. பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜே.சதீஷ்குமார் தயாரிக்கிறார். 
  Next Story
  ×