search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    தனுஷ் பட நடிகையை தன் வசமாக்கிய அதர்வா
    X

    தனுஷ் பட நடிகையை தன் வசமாக்கிய அதர்வா

    நடிகர் தனுஷ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர், அடுத்ததாக அதர்வா நடிக்க இருக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.
    கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஒரு பக்க கதை’ படத்திலும் மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இப்படமும் விரைவில் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், மேகா ஆகாஷ் அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்துள்ளார். ‘இவன் தந்திரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதர்வாவை வைத்து படம் இயக்குகிறார் கண்ணன். ஆக்‌ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக பல நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், தற்போது மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.

    ஒரு படம் கூட வெளியாகமலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் மேகா ஆகாஷ், படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×