search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    அருள்நிதி ஜோடியாகும் பிந்து மாதவி
    X

    அருள்நிதி ஜோடியாகும் பிந்து மாதவி

    பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை பிந்து மாதவி அடுத்ததாக அருள்நிதி நடிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
    வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி தற்போது `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் நடித்து வருகிறார்.

    அருள்நிதி அடுத்ததாக ‘புகழேந்தி எனும் நான்’ என்ற அரசியல் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அருள்நிதி, தீவிர அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ‘புகழேந்தி எனும் நான்’ படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த படத்தை கரு.பழனியப்பன் இயக்குகிறார். நாயகிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இந்த கதையில் பிந்து மாதவி நாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து பிந்து மாதவி கூறும்போது,

    "எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம் தான் 'புகழேந்தி எனும் நான்'.

    இது அரசியல் சார்ந்த படம் என்றாலும் என் கதாபாத்திரத்திமும் முக்கியத்துவம் வாய்ந்தது. எப்போதும் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதை எழுதும் கரு.பழனியப்பன் படத்தில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அருள்நிதியுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி, புகழேந்தி எனும் நான் படத்தில் அவரின் திரை ஆளுமை இன்னும் அதிகமாகவே வெளிப்படும். டிசம்பரில் தொடங்கும் இந்த புகழேந்தி எனும் நான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறேன்" என்றார்.
    Next Story
    ×