search icon
என் மலர்tooltip icon

    சினிமா

    கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க நடிகர் ஆன ஆடை வடிவமைப்பாளர்
    X

    கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க நடிகர் ஆன ஆடை வடிவமைப்பாளர்

    நடிகர்கள் விளையாடும் சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறார்.
    விஜய் நடித்த ‘பைரவா’, சிம்பு நடிக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியவர் சத்யா. இவர் தற்போது நடிகராகி இருக்கிறார்.

    ‘‘என்னை ஒரு கிரிக்கெட் வீரராக ஆக்க வேண்டும் என்பது தான் என்னுடைய தந்தையின் கனவு. ஆனால் நானே என்னுடைய விருப்பப்படி ஆடை வடிவமைப்பாளராகி விட்டேன். என்னுடைய தந்தையின் கனவை நனவாக்க தற்போது நடிகராக களம் இறங்கியுள்ளேன். என்னுடைய இலக்கு ஆண்டுதோறும் திரைப்பட நடிகர்கள் பங்கேற்கும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியில் கலந்து கொண்டு கிரிக்கெட் ஆட வேண்டும் என்பது தான்.

    அதற்காகவே நான் நடிக்கத் தொடங்கினேன், சின்ன சின்ன கேரக்டரில் ஏழு படங்களில் நடித்திருக்கிறேன் என்றார்.
    Next Story
    ×