என் மலர்

  சினிமா

  `பிரேமம் இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?
  X

  `பிரேமம்' இயக்குநருடன் இணையும் மலையாள சூப்பர்ஸ்டாரின் மகன்?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அல்போன்ஸ் புத்ரன் தனது அடுத்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவரின் மகனை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
  `நேரம்', `பிரேமம்' படங்களை தொடர்ந்து அல்போன்ஸ் புத்ரன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பை கடந்த வாரம், அவரது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதில் தனது அடுத்த படம் இசையை மையப்படுத்தி உருவாக உள்ளதாக அல்போன்ஸ் தெரிவித்திருந்தார்.

  அதற்காக இசை என்னும் கடலில் தனது கால்களை நனைத்து, அதில் நனைந்திருக்கிறேன். இந்த படம் நகைச்சுவை, காதல் கலந்த ஒரு உணர்வுப்பூர்வமான சாதாரண படமாக இருக்கும். ஆனால் `நேரம்', `பிரேமம்' போன்று கண்டிப்பாக இருக்காது என்பதையும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் தனது அடுத்த படத்தில் நிவின் பாலி நடிக்கவில்லை. ஆனால் நிவினுடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  இதையடுத்து அல்போன்ஸ் தனது அடுத்த படத்தில் யாரை இயக்க போகிறார் என்ற கேள்வி தமிழ், மலையாள சினிமா ரசிகர்களிடையே பரவி வந்தது. அதற்கு பதில் அளிக்கும் விதமாக, மலையாள சூப்பர் ஸ்டார் ஒருவரின் மகன் நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.  இந்நிலையில், அல்போன்ஸ் புத்ரனின் தனது அடுத்த படத்தில் ஜெயராமின் மகனான, காளிதாஸ் ஜெயராமை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. `மீன் குழம்பும் மண் பானையும்' படத்தின் மூலம் காளிதாஸ் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது மலையாளத்தில் `பூமரம்' என்ற படத்தில் காளிதாஸ் நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.  இந்நிலையில், அல்போன்ஸின் அடுத்த படத்தில் காளிதாஸ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  அல்போன்ஸின் படங்களுக்கு தமிழ், மலையாள ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு இருப்பதால், இந்த படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகலாம்.
  Next Story
  ×