என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    இசை நிகழ்ச்சிக்கு பாவலர் வரதராஜன் வராமல் போனதால், வரதராஜனாக பாஸ்கரும், பாஸ்கராக இளையராஜாவும் நடிக்க நேரிட்டது.
    இசை நிகழ்ச்சிக்கு பாவலர் வரதராஜன் வராமல் போனதால், வரதராஜனாக பாஸ்கரும், பாஸ்கராக இளையராஜாவும் நடிக்க
    நேரிட்டது.இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:

    "மேடையில் கடைசியாகப் பேசிய கம்ïனிஸ்ட்டு கட்சித் தோழர், தனது முடிவுரையில் பாவலரை பற்றி ஒரு அறிமுக உரையாற்றினார். அப்போதைக்கப்போது மக்கள் கைதட்டினார்கள். `இப்படியாகப்பட்ட பாவலர் சகோதரர்களின் இசை இப்போது தொடங்கும்' என்று அறிவித்தார்.

    எத்தனை சாமர்த்தியம் பாருங்கள்! இவர்தான் பாவலர் என்று அறிமுகப்படுத்தாமல் `பாவலர் சகோதரர்கள்' என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டார். கச்சேரியின்போதோ, முடிந்த பிறகோ `எப்படி நீங்கள் பாஸ்கரை பாவலர் என்று சொல்லி ஜனங்களை ஏமாற்றலாம்?' என்று யாரும் கேள்வி கேட்க முடியாதல்லவா!

    பாஸ்கர் துண்டோடு மேடையேறினார். மேடையில் ஏற போடப்பட்டிருந்த மரப்படிகளில் கால் வைக்கும்போது கால் இடறியது. நல்ல வேளையாகக் கீழே விழாமல் மேலே ஏறிவிட்டார்.

    அவரைத் தொடர்ந்து நான் ஏறினேன்.

    டைட்டில் மிïசிக் முடிந்தது. செங்கொடிப் பாடல் முடிந்தது. அடுத்து `வணக்கம்' பாடலைத் தொடங்கினோம்.

    `வணக்கம்' பாடலில் குறைந்தது நாலு இடங்களிலாவது எல்லா ஊரிலும் கைதட்டல் கிடைக்கும். அன்றைக்கோ, இதோ இப்போது கிடைக்கும், இல்லை இப்போது கிடைக்கும் என்று முழுப்பாடலும் முடியும்வரை எதிர்பார்த்தோம்.

    ஊஹும். ஒரு இடத்தில்கூட கைதட்டல் கிடைக்கவில்லை.

    அப்போதே நன்றாக ஊதிவைத்த பலூனில் `புஷ்' என்று காற்றுப்போனது போலாயிற்று.

    பாவலர் போல பேச பாஸ்கர் ஆயத்தமானார். பாஸ்கர் போல பேச நான் தயாரானேன்.

    பாவலர் மாதிரி பாஸ்கர் பேசத்தொடங்கினார்.

    சிவாஜியின் வசனத்தை ஆயிரம் நடிகர்கள், பத்தாயிரம் ரசிகர்கள் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். அவர் வசனங்களை எப்படி ஏற்றி இறக்கிப் பேசுவார் என்பது எல்லாருக்கும் அத்துப்படி.

    ஆனால் அவர் மாதிரி நமக்கும் வரும் என்று பேசிப் பார்க்கும்போதுதான், அடடா! இது அல்ல அது. அவர் பேசுவது வேறு. நாம் பேசிக்கொண்டிருப்பது வேறு' என்பது புரியும்.

    பாவலர் பேசியதையெல்லாம் பாஸ்கர் பேசினார். பாஸ்கர் பேசியதை நான் பேசினேன்.

    இருந்தாலும் இருவருக்கும் `ஏதோ ஒன்று' குறைந்திருப்பது புரிகிறது. நூற்றுக்கு நூறு தெரியும் என்ற நம்பிக்கையோடு தொடங்க, பூஜ்யம் அளவு கூட அது இல்லை என்பது தெரிய வந்ததும், அந்த இரண்டு மணி நேரக் கச்சேரி ஒரு ஜென்மம் முழுக்க நீண்டு போவதைப் போலிருந்தது.

    அண்ணனுடன் பாஸ்கர் பேசும்போது இடையிடையே ஏதாவது `காமெடி' பண்ணி மக்களை சிரிக்க வைத்து விடுவார்.

    நானும் பாஸ்கர் மாதிரி கைதட்டல் வாங்கி விடுவேன் என்று நம்பி, அதையே செய்தால், எனக்கு வரவேயில்லை. சரியாகச் சொல்ல வேண்டுமானால் அது காமெடியாகவும் இல்லை; வேறு விதமாகவும் இல்லை.

    உதாரணத்துக்கு மேடையில் அண்ணன் பாவலர் ஏதோ சொல்ல, "ஆமாண்ணே'' என்று சொல்லி விட்டு அப்படியே பக்கத்தில் இருக்கும் சோடாவை எடுத்து `மடக்... மடக்' என்று குடிப்பார் பாஸ்கர். மக்கள் சிரிப்பார்கள்.

    இந்தப் பாணி எனக்கு வரவில்லை. கைதட்டும் கிடைக்கவில்லை. அதனால் சோடாவும் உள்ளே போக மறுத்து `தும்மலை'

    வரவைத்துவிட்டது.இதெல்லாம் எனக்குத்தான் காமெடியாக இருந்ததே தவிர, ஜனங்கள் கண்டுகொள்ளவில்லை.

    ஊருக்குள் நுழையும்போது, உற்சாகமாக `பாவலர் வாழ்க' என்று கோஷம் போட்ட இந்த ஜனங்களுக்கு என்னதான் ஆயிற்று?

    இப்போது எனக்கு புரியத்தொடங்கியது. இயல்பான தன்மை குறையும்போது, அது உள்ளங்களைத் தொடுவதும் இல்லை; கவருவதும் இல்லை.

    கைதட்டல் இல்லாமலே அன்றைய கச்சேரி முடிந்தது. இன்னும் 6 நாட்கள் இதே போல் இருந்தால் என்னாவது? அண்ணன் வந்துவிடமாட்டார்களா என மனசு ஏங்கியது.

    இப்படியே மூன்று நாட்கள் நாங்கள் கச்சேரி முடித்தோம். நாலாம் நாள் ஒருவழியாக அண்ணன் வந்துவிட்டார். `அப்பாடா' என்று உயிர்

    வந்தது.ஆனால் இன்னுë என் ஆர்மோனியப் பெட்டி வரவில்லையே? உயிர் வந்ததும், வராத மாதிரியல்லவா இருக்கிறது?

    இன்னொரு ஆர்மோனியத்தை அதிக விலை கொடுத்துக்கூட வாங்கி விடலாம். ஆனால் அதெல்லாம் அந்த ஆர்மோனியம் போல வருமா?

    அடுத்த மூன்று நாட்கள் கச்சேரியையும் அண்ணனுடன் முடித்துவிட்டு மதுரை வந்து கட்சி ஆபீசுக்கு சென்றால், என் `உயிர்' அங்கே இருந்தது. நான் ரெயிலில் தவறவிட்ட அதே என் ஆர்மோனியம்.

    போன உயிர் திரும்ப வந்தது போல் எனக்குள் அப்படியொரு சந்தோஷம்!

    மதுரையில் இந்தப் பெட்டியை வாங்கிக்கொள்ள வந்த வெள்ளைக்காரர், அது தன்னுடையது இல்லை என்று சொல்லியிருக்கிறார். அதனால் இந்தப்பெட்டி யாருடையது என்று தெரிந்து கொள்வதற்காக பெட்டியை உடைத்திருக்கிறார்கள். ஆர்மோனியத்தின் மேல் மூடியில் அரிவாள் சுத்தியல் படத்துடன் பாவலர் வரதராஜன் என்றும் எழுதியிருந்ததைப் பார்த்து நேராக கம்ïனிஸ்டு கட்சி ஆபீசில் கொண்டு சேர்த்து விட்டார்கள்.

    நான் ஆர்மோனியப் பெட்டியைப் பார்த்தேன். "என்னடா பசங்களா? நான் இல்லாம கச்சேரியா பண்ணிட்டு வர்றீங்க?'' என்று கேட்பது போல் இருந்தது.

    ஆர்மோனியப் பெட்டியின் பூட்டை உடைத்திருந்தார்கள். பரவாயில்லை. வேறு பூட்டு கிடைக்கும்.

    ஆனால் அது தொலைந்ததால் உடைந்து போன என் மனம், இப்போது உடைந்த அடையாளமே தெரியாமல் நன்றாகிவிட்டதே!

    தொடர்ந்து கச்சேரிகள், கலகலப்பு என்று போய்க்கொண்டிருந்த இந்த மாதிரியான ஒரு நாளில் பாரதிக்கு நாடக ஆர்வம் இருப்பதை அண்ணன் தெரிந்து கொண்டு விசாரித்திருக்கிறார். பாரதியுடன் நாங்களும் நாடகம் போட்டதை தெரிந்து கொண்டவர், மதுரையில் நடந்த கம்ïனிஸ்டு கட்சி மாநாட்டில் நாடகம் நடத்த பாரதிக்கு ஒரு சந்தர்ப்பம் வாங்கிக் கொடுத்தார். தொடர்ந்து கிடைத்த நாடக அனுபவங்கள் பாரதிக்கு புது உத்வேகம் கொடுத்தது உண்மை.
    அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள ‘விவேகம்’ படத்தின் டீசர் சொன்ன தேதிக்கு முன்னதாகவே வெளியாகவிருக்கிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் புதிய படம் ‘விவேகம்’. இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இப்படத்தின் டீசர் அஜித்தின் பிறந்தநாளான மே 1-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தேதியில் டீசரை வெளியிடவில்லை. இந்நிலையில், வருகிற மே 18-ந் தேதி ‘விவேகம்’ டீசரை வெளியிடப்போவதாக சிவா அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்தார். அஜித் ரசிகர்களும் ‘விவேகம்’ டீசரை வரவேற்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்



    அவர்களுக்கு மேலும் உற்சாகம் அளிக்கும்விதமாக சொன்ன தேதிக்கு முன்னதாக ஒருவாரத்திற்கு முன்பே மே 11-ந் தேதியே இப்படத்தின் டீசரை வெளியிடப்போவதாக சிறுத்தை சிவா மீண்டும் அறிவித்துள்ளார். எனவே, அஜித் ரசிகர்களுக்கு ஒருவாரத்திற்கு முன்பே கொண்டாட்டம் தொடங்கவிருக்கிறது. 
    டி.வி. நடிகர் பிரதீப் சாவில் மர்மம் இல்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

    சுமங்கலி தமிழ் டி.வி. தொடரில் நடித்து வந்தவர் பிரதீப். ஐதராபாத்தை சேர்ந்த இவர் தெலுங்கு டி.வி. தொடரிலும் நடித்து வந்தார். இவரது மனைவி பாவனி ரெட்டி. இவரும் டி.வி. நடிகை ஆவார். சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் பிரதீப் ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது தலை, உடம்பில் காயங்கள் இருந்தன. போலீசார் இவரது சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    பாவனியிடமும், வீட்டில் தங்கியிருந்த அவரது உறவினர் ஷிராவன் என்பவரிடம் விசாரித்து வந்தனர். பிரதீப் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அதன் அறிக்கைக்காக போலீசார் காத்திருந்தனர்.


    பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் பிரதீப் உடலில் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை. மேலும் தலை, உடம்பில் பெரிய காயங்கள் எதுவும் இல்லை. அவர் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை. எனவே பிரதீப் தற்கொலை செய்து இருக்கவே வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டு இருந்தது.

    இதையடுத்து போலீசார் பிரதீப் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.வீட்டில் தங்கியிருந்த ஷிராவன் தொடர்பாக பிரதீப்-பாவனி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அவர் தற்கொலை முடிவை எடுத்தாரா? அல்லது வேறு காரணமா? என்று விசாரிக்கிறார்கள்.

    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பாகுபலி-2’ படம் இந்தி ஹீரோக்களையே அதிர வைத்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    இந்தியாவிலும் ‘ஹாலிவுட்’ தரத்தில் படங்கள் எடுக்கமுடியும் என்பதை ‘பாகுபலி-2’ மூலம் இயக்குனர் ராஜமௌலி நிரூபித்திருக்கிறார். இந்தியாவில் அதிக வசூல் என்றால் அந்த தகுதி இந்தி படங்களுக்கு மட்டும்தான் உண்டு என்று கூறப்பட்டது.

    இந்தி பட நாயகர்கள் ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான் படங்களுக்கு தனிமவுசு உண்டு. இவர்கள் நடித்த படங்கள் வசூலில் சாதனை படைக்கும். இந்தி படங்கள்தான் ஒருசில நாட்களில் ரூ.100 கோடி வசூலை தொடும் என்று கூறப்பட்டு வந்தது.



    ‘பாகுபலி-2’ அந்த சாதனைகளை முறியடித்து விட்டது. இந்தியில் மட்டுமே 3 நாளில் பாகுபலி ரூ.127 கோடி வசூலித்து இந்திபட உலகை கலக்கம் அடைய வைத்துள்ளது. ‘தங்கல்’ படம் 3 நாளில் ரூ.106 கோடி வசூலித்தது. ‘பாகுபலி-2’ அந்த சாதனையை உடைத்து எறிந்து இருக்கிறது.

    இந்தி படங்கள் தான் ரூ.500 கோடி வசூலை தொட முடியும் என்ற நிலை முன்பு இருந்தது. இப்போது ‘பாகுபலி-2’ ஆயிரம் கோடி வசூலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தென் இந்திய மொழி படமான ‘பாகுபலி-2’ சரித்திர சாதனை படைத்து வருவதால், இந்திபட உலகின் பிரபல ஹீரோக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.



    இந்தி பட ஹீரோக்களுக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்படுகிறது. படப்பிடிப்பு மற்றும் தொழில் நுட்பங்களுக்கு குறைந்த அளவே செலவு செய்யப்படுகிறது. ஆனால் ‘பாகுபலி-2’ படத்தில் நடிகர், நடிகைகளுக்கு கொடுத்த சம்பளம் மொத்த தயாரிப்பு செலவை ஒப்பிடும்போது மிக குறைவு. ஒரு இந்தி படத்தை ரூ.300 கோடிக்கு தயாரிக்க திட்டமிட்டால் பெரிய ஹீரோக்கள், ஹீரோயின்களுக்கே ரூ.200 கோடி சம்பளமாகவும் மற்ற செலவுகளுக்கும் கொடுக்க வேண்டியது வரும்.

    ‘பாகுபலி-2’ படத்தில் அதன் படப்பிடிப்பு, தொழில்நுட்ப பணிகளுக்குத்தான் மொத்த பணத்தில் பெரும் பகுதி செலவிடப்பட்டது. இந்தி பட உலகில் இது சாத்தியம் இல்லை. எனவே இதுபோன்ற பிரமாண்ட படங்கள் இந்தியில் தயாராக வாய்ப்பே இல்லை. இதுபோன்ற படத்தை இந்தியில் எடுத்தால் இதைவிட 4 மடங்கு செலவு செய்தாலும் இந்த பிரமாண்டத்தை கொண்டு வர முடியாது என்று திரை உலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
    வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து நடிகை ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
    பெங்களூருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் ரேகா சிந்து (வயது 22). பெங்களூருரில் டி.வி. துணை நடிகையாக நடித்து வந்தார். டி.வி. நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், விளம்பர மாடலாகவும் இருந்தார்.

    தற்போது தமிழில் 'ருத்ரா' என்ற படத்தில் நடித்து வருகிறார். படம் இன்னும் வெளியாகவில்லை. இவர், சென்னையில் சூட்டிங்கிற்கு சென்று விட்டு நேற்றிரவு காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டார். நடிகை ரேகா சிந்துவுடன், பெங்களூருவை சேர்ந்த அவரது தோழி ரட்சினி (21) மற்றும் ஜெயக்குமரன் (20) ஆகிய 2 பேரும் பயணித்தனர்.

    காரை, டிரைவர் அபிஷேக் குமரன் (22) என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 1 மணியளவில் வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி சுண்ணாம்பு குட்டை என்ற பகுதியை கடந்து சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்தது.


    அப்போது டிரைவருக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடியது. சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது.

    இடிபாடுகளுக்குள் சிக்கியதில் ரேகா சிந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் அபிஷேக் குமரன் உள்பட மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான ரேகா சிந்துவின் உடலையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் டி.வி. நடிகை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப மத்திய அரசிடம் வற்புறுத்துவேன் என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அறிவித்து உள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த பாகுபலி-2 படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் வசூலில் எந்த இந்திய படமும் செய்யாத சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

    அதிக வசூல் ஈட்டிய படங்கள் பட்டியலில் இருந்த தங்கல், சுல்தான் ஆகிய இரண்டு இந்தி படங்களின் சாதனையை முறியடித்து உள்ளது. 6 நாட்களில் ரூ.750 கோடி வசூலித்து இந்திய பட உலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது.

    இந்த வசூல் ரூ.1,000 கோடியை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    இதன் முதல் பகுதியான பாகுபலி மொத்தமாக ரூ.650 கோடி வசூலித்து இருந்தது. அந்த வசூலை பாகுபலி-2 தாண்டி விட்டது. உலக அளவில் இதுவரை அவதார், டைட்டானிக், ஹாரிபாட்டர், லார்ட் ஆப் ரிங்க்ஸ் உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்கள் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    பாகுபலி-2 படத்தை சீனா மற்றும் ஜப்பான் மொழிகளில் ‘டப்பிங்’ செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜப்பானில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ரஜினிகாந்தின் பல படங்கள் ஜப்பான் மொழியில் வெளியிடப்பட்டு உள்ளன. பாகுபலி-2 படத்தை மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் பாராட்டி உள்ளனர்.

    இந்த நிலையில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு பாகுபலி-2 படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “பாகுபலி-2 படம் இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. இந்த படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்பும்படி மத்திய அரசிடம் சிபாரிசு செய்வேன். பாகுபலி-2 படக்குழுவினர் அனைவரையும் தலைநகர் அமராவதிக்கு அழைத்து பாராட்டு விழா நடத்துவேன்” என்றார்.
    எஸ்.எஸ்.ராஜமௌலி, ரஜினியை வைத்து படம் இயக்கவேண்டும் என்றால் அவருக்கேற்ற கதை அமையவேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்.28-ந் தேதி வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை இந்திய சினிமா படைத்த அனைத்து சாதனைகளையும் இந்த படம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது. விரைவில், இப்படத்தின் வசூல் ரூ.1000 கோடியை எட்டவிருக்கிறது.

    இந்நிலையில், எஸ்.எஸ்.ராஜமௌலியும், ரஜினியும் இணைவார்களா? என்ற ஒரு பேச்சு சினிமா வட்டாரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே எஸ்.எஸ்.ராஜமௌலி, ரஜினியிடன் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளதாக தனது கருத்தை தெரிவித்திருந்தார்.



    மறுபடியும் அதேகேள்வி ராஜமௌலி முன் வைக்கப்பட்டபோது அவர் கூறியதாவது: ரஜினியை வைத்து படம் பண்ணுவது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. அவருக்கென்று சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்து உள்ளது. அவருக்கேற்ற கதை அமைவது மிகவும் கடினம். அந்தமாதிரி ஒரு கதை எனக்கு அமைந்தால் என்னைவிட இந்த உலகத்தில் பெரிய மகிழ்ச்சியான ஆள் இருக்கவே முடியாது. ரஜினிக்கேற்றவாறு கதை அமைந்தால் கண்டிப்பாக அவரை வைத்து படம் இயக்குவேன் என்று தெரிவித்தார்.

    ரஜினியும் சமீபத்தில் ராஜமௌலியுடன் இணைந்து பணியாற்ற ஆவலாக இருப்பதாக தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார். எல்லாம் சரியாக கூடிவந்தால் ரஜினி - ராஜமௌலி இணையும் மெகா கூட்டணியை விரைவில் எதிர்பார்க்கலாம். 
    நடிகர் பிரதீப் தலையில் ரத்தக் காயம் உள்ளது என்றும், எனவே அவரது சாவில் மர்மம் இருப்பதாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    சுமங்கலி தமிழ் டி.வி. தொடரிலும், தெலுங்கு டி.வி. தொடர்களிலும் நடித்து பிரபலமான நடிகர் பிரதீப் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். குடும்ப தகராறில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்டது. போலீசார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது தலையிலும், உடம்பிலும் ரத்தக்காயங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து தற்கொலையை மர்ம சாவாக மாற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகிறார்கள். பிரதீப் தூக்கில் தொங்கிய அறையை போலீசார் சோதனை நடத்தியபோது தரையிலும், படுக்கையிலும் ரத்தக் கறைகள் இருந்தன. வீட்டில் இருந்த பொருட்கள் உடைந்து தாறுமாறாக சிதறி கிடந்தன. கண்ணாடிகளும் உடைந்து கிடந்தது. மேஜையில் மது பாட்டில்கள் இருந்தன.



    இதனால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்து இருக்கிறது. பிரதீப் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான பாவனி, வீட்டில் தங்கி இருந்த உறவுக்கார இளைஞர் ஷிராவண் ஆகியோரின் செல்போன்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதீப்பும், பாவனியும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பாவனியும் டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருகிறார்.

    பாவனியின் உறவுக்கார இளைஞரான ஷிராவண் என்பவரும் இரண்டு மாதங்களாக அவர்களுடன் ஒரே வீட்டில் தங்கி இருக்கிறார். சமீபத்தில் பாவனி தனது வாட்ஸ் அப் முகப்பில் ஷிராவணுடன் சேர்ந்து இருப்பதுபோன்ற படத்தை வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.



    இது பிரதீப்புக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து பாவனி கூறும்போது, “பிரதீப்புக்கும் எனக்கும் அவ்வப்போது சிறுசிறு தகராறுகள் நடக்கும். சிறிது நேரத்தில் அதை மறந்து விடுவோம். ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்தில் தற்கொலை முடிவை எடுத்து இருக்கிறார். அறைக்கதவை பூட்டி இருந்ததால் ஜன்னலை உடைத்தோம். அந்த கண்ணாடிதான் வீட்டில் சிதறி கிடந்தன” என்றார்.

    ஷிராவண் கூறும்போது பிரதீப் வீட்டில் நான் தங்கி இருந்ததை தவறாக பேசுகிறார்கள். அவர் அனுமதியோடுதான் வீட்டில் தங்கினேன்” என்றார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே கொலையா? தற்கொலையா? என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
    பொது சாலையை மறித்துள்ளதாக நடிகர் சங்கத்துக்கு எதிராக போடப்பட்டுள்ள வழக்கு ஐகோர்ட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
    சென்னை ஐகோர்ட்டில், தியாகராய நகர், வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பலர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் அவர்கள், “சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, அபிபுல்லா சாலையையும், பிரகாசம் சாலையையும் இணைக்கும் 33 அடி அகலம் கொண்ட பொது சாலையை நடிகர் சங்கத்தினர் மறித்துள்ளனர்.

    இதனால், பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் குடியிருப்பவர்கள், பிரகாசம் சாலைக்கு வருவதற்கு வேறு பாதைகளை பயன்படுத்தி சுற்றி வரவேண்டியதுள்ளது. விதிமுறைகளை மீறி, சாலைகளை மறித்து கட்டிடம் கட்டப்படுவதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறி உள்ளனர்.

    இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர், ‘இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சங்கம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த நிலையில் வழக்கு, இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
    ‘கபாலி’ படத்திற்கு பிறகு தன்ஷிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘எங்க அம்மா ராணி’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே பார்ப்போம்.
    மலேசியாவில் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார் தன்ஷிகா. இவரது கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றவர் திரும்பி வராததால் அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையில், தன்ஷிகாவின் ஒரு குழந்தை திடீரென மயக்கமடைந்து கீழே விழ, அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். அன்று இரவே அந்த குழந்தை இறந்து போகிறது.



    தன்னுடைய கவனிப்பில்லாமல்தான் அவள் இறந்துவிட்டாள் என்ற குற்ற உணர்வுடன் இருக்கும் டாக்டரான சங்கர் அந்த குழந்தை எதனால் இறந்தது என்பதை கண்டறிய முற்படுகிறார். அப்போது, அந்த குழந்தை வினோதமான ஒரு நோயால் பாதிக்கப்பட்டுதான் இறந்துபோனாள் என்று கண்டுபிடிக்கிறார். அந்த குழந்தைகள் இரட்டையர்கள் என்பதால் மற்றொரு பெண்ணுக்கும் அந்த நோய் தாக்கியிருக்கக்கூடும் என்ற அச்சத்தில், அந்த பெண்ணையும் அவர் சோதிக்கிறார்.

    பரிசோதனையில் அந்த பெண்ணுக்கும் வினோதமான நோய் தாக்கியிருப்பது தெரிய வருகிறது. ஒருபக்கம் தனது கணவரை தேடும் பணியிலும், மறுமுனையில் தன்னுடைய மகளை அந்த நோயிலிருந்து காப்பாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார் தன்ஷிகா.



    இறுதியில், தனது கணவரை தன்ஷிகா தேடிக்கண்டுபிடித்தாரா? தன்னுடைய மற்றொரு பெண்ணையாவது காப்பாற்றினாரா? தன்னுடைய பெண்ணுக்கு வந்துள்ள அந்த விநோதமான நோய்க்கு என்ன காரணம்? என்பதே படத்தின் மீதிக்கதை.

    தன்ஷிகா முதலில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க ஒப்புக்கொண்டதற்காக அவரை பாராட்டலாம். இருப்பினும், தனது குழந்தையை காப்பாற்ற நினைக்கும் பரிதவிப்பு, தனது கணவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் துடிதுடிப்பு இவற்றில் எல்லாம் நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிக்கலாமோ என்று தோன்றுகிறது. மற்றபடி, ஒருசில காட்சிகளில் ரசிக்க வைக்கிறார்.



    தன்ஷிகாவின் குழந்தைகளாக வரும் வர்ணிகா, வர்ஷா இருவரும் இந்த படத்திற்குண்டான தங்களது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள். நமோ நாராயணா சொக்கு என்ற கதாபாத்திரத்தில் இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிக்க வைக்கிறார். இவருக்கு ஒருசில காட்சிகள் என்றாலும் தனது நடிப்பில் நிறைவை கொடுத்திருக்கிறார். டாக்டராக வரும் சங்கர்ஸ்ரீ ஹரி புதுமுகம் என்றாலும் அவருடைய கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.



    இயக்குனர் பாணி படத்தில் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்பதே புரியாத புதிராக இருக்கிறது. தன்ஷிகா தொலைந்துபோன தனது கணவரை ஒரு பக்கம் தேடுகிறார்? மற்றொரு பக்கம் தனது குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார்? இரண்டு பேரின் கதையையும் முழுதாக சொல்லாமல் அந்தரத்திலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டார். படம் பார்ப்பவர்களுக்கு படத்தில் என்ன கதை இருக்கிறது என்பதே புரியவில்லை. அதேபோல், அம்மா செண்டிமென்டும் பெரிதாக எடுபடவில்லை.

    இளையராஜாவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். அம்மாவை பற்றிய பாடலில் சரியான காட்சியமைப்புகள் இல்லாததால் பெரிதாக ஈர்க்கவில்லை. பின்னணி இசையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். குமரன், சந்தோஷ் குமார் ஆகியோரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படியாக இருக்கிறது. கலர் கரெக்ஷனும் நன்றாக செய்திருக்கிறார்கள்.

    மொத்தத்தில் ‘எங்க அம்மா ராணி’ அழகில்லை.
    நடிகர் கமல்ஹாசன் வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் சார்பில் வக்கீல் காந்திமதிநாதன் வள்ளியூர் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் மகாபாரதத்தை இழிவுபடுத்தி கருத்து தெரிவித்ததாகவும், எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், கமல்ஹாசனை மே 5-ந் தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு மதுரை ஐகோர்ட்டில் கமல்ஹாசன் மனு தாக்கல் செய்தார்.



    அந்த மனுவில், ‘யார் மனதையும் புண்படுத்தும்படி கருத்து தெரிவிக்கவில்லை. இதே சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அந்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் வள்ளியூர் கோர்ட்டு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி என்.ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆஜராகி, “மனுதாரர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு தனிப்பட்ட முறையில் தான் பதில் அளித்துள்ளார். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. எனவே வள்ளியூரில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும்” என்றார்.

    இதையடுத்து, வள்ளியூர் கோர்ட்டில் கமல்ஹாசன் ஆஜராக விலக்கு அளித்தும், அவர் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
    கச்சேரிக்கு ரெயிலில் கோவில்பட்டி சென்றபோது, இளையராஜா மிகவும் நேசித்த ஆர்மோனியப்பெட்டி காணாமல் போய்விட்டது.

    கச்சேரிக்கு ரெயிலில் கோவில்பட்டி சென்றபோது, இளையராஜா மிகவும் நேசித்த ஆர்மோனியப்பெட்டி காணாமல் போய்விட்டது.

    இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "மதுரை சித்திரைத் திருவிழா முடிந்த நேரத்தில் மறுநாளே கோவில்பட்டியில் கச்சேரிக்காக புறப்பட்டோம். மதுரையில் இரவு 12-30 மணிக்கு ரெயில் வந்தது. நெல்லை எக்ஸ்பிரசோ, செங்கோட்டையோ ஞாபகம் இல்லை. எங்களை ரெயிலேற்றிவிட பாரதியும் வந்திருந்தார். ரெயில் புறப்படும் முன்பாக அவர் விடை பெற்றுச்சென்று விட்டார்.

    முந்தின நாட்களில் சரிவர தூங்காத அலுப்பு கண்களை செருக வைக்க, பெட்டி, படுக்கைகளை கீழே வைத்த நாங்கள் மேலே காலியாக இருந்த "பெர்த்''தில் ஏறி படுத்துவிட்டோம். சாதாரணமாக படுத்தவுடன் தூக்கம் வராத எங்களுக்கு முந்தின நாள் பொருட்காட்சியில் அலைந்த களைப்பில் படுத்ததும் தூக்கம் தூக்கிக்கொண்டு போனது. ரெயில் மதுரையில் அரை மணிக்கும் மேலாக நின்றது போலும். அதுதான் பிரச்சினையாகிவிட்டது.

    நாங்கள் ஏறிய ரெயிலில் கொடைக்கானல் போகவேண்டிய வெளி நாட்டுக்காரர் ஒருவர் அவரது மரப்பெட்டி ஒன்றை `கொடைக்கானல் ரோடு' ஸ்டேஷனில் இறங்கும்போது எடுக்க மறந்துவிட்டிருக்கிறார். இதனால் உடனடியாக மதுரை ஸ்டேஷன் மாஸ்டருக்கு போன் செய்து தெரியப்படுத்தி இருக்கிறார்.

    இதனால் அந்த மரப்பெட்டியைத் தேடிய ரெயில்வே ஊழியர்கள் நாங்கள் படுத்திருந்த பெட்டிக்கும் வந்திருக்கிறார்கள். எங்கள் கம்பார்ட்மென்டில் நான் ஆர்மோனியத்தை பூட்டி வைத்திருந்த மரப்பெட்டியை பார்த்து, அது அந்த வெள்ளைக்காரர் தவறவிட்ட பெட்டி என்று எண்ணிக்கொண்டார்கள்.இருந்தும் சிறு சந்தேகம். வேறு யாருடைய பெட்டி யாகவும் இருந்தால்?

    சந்தேகத்தை சரி செய்ய, உரத்த குரலில் "இந்த மரப்பெட்டி யாருது?'' என்று கேட்டிருக்கிறார்கள். நாங்கள்தான் அதற்குள் தூங்கிவிட்டோமே. அந்தக் குரல், எங்கள் தூக்கத்தை தாண்டி காதுகளை எட்டவே இல்லை. அவர்களும் பெட்டியில் பூட்டு இருந்ததால், திறந்து பார்க்க முற்படவில்லை. பெட்டியை இறக்கிவிட்டு, பெட்டி கிடைத்து விட்டது என்ற தகவலை ஸ்டேஷன் மாஸ்டரிடம் தெரிவித்து இருக்கிறார்கள். மறுநாள் காலை 6 மணிக்கு ரெயில் கோவில்பட்டி வந்தபோதுதான் அரக்கப் பறக்க விழித்தோம். வாத்தியங்களை இறக்கி வைக்க முற்பட்டபோதுதான், ஆர்மோனியம் காணாமல் போய்விட்டது தெரிந்தது. எங்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அடிவயிற்றை ஏதோ கவ்வியது போன்ற உணர்வு.

    இப்போது ஆர்மோனியம் பற்றி கொஞ்சம் விளக்கவேண்டும். ஒவ்வொரு ஆர்மோனியமும் வெவ்வேறு அமைப்பில் இருக்கும். பெட்டிக் கட்டைகளில் ஆக்ஷனுக்காக வைக்கப்பட்டிருக்கும் கம்பிகளின் டென்ஷன், `கட்டை'யை அழுத்தியவுடன் அது கீழே இறங்கும் அளவு, அதிலிருந்து புறப்பட்டு வரும் நாதம் எல்லாமே பெட்டிக்கு பெட்டி மாறுபடும்.

    இங்கே கச்சேரிக்கென எனக்குத்தரப்பட்ட ஆர்மோனியத்தை வாசித்துப் பார்த்தேன். திருப்தியில்லை. இருந்தாலும் வேறு வழி? ஒரு வழியாக மனதை தேற்றிக்கொண்டேன். ஆனால் என்னுடைய ஆர்மோனியம், `இந்தக்கால கட்டத்தில் இவன் என்னை வாசிக்கக்கூடாது' என்று முடிவு செய்து பிரிந்துபோய் விட்டபிறகு, நான் என்ன செய்ய முடியும்? இந்த சோகத்துடன் இன்னொரு சோகமும் சேர்ந்தே வந்தது.

    கோவில்பட்டியில் ஒரு வார கச்சேரிக்கு அண்ணன் ஒத்துக்கொண்டார்கள். நாங்கள் ரெயிலில் கோவில்பட்டி போய்ச்சேர, பண்ணைபுரத்தில் இருந்து அண்ணன் பஸ் ரூட்டில் வந்து எங்களுடன் கோவில்பட்டி கச்சேரியில் கலந்து கொள்வதாக ஏற்பாடு. நாங்கள் கோவில்பட்டிக்கு வந்துவிட்டோம். இப்போது கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டது. மாலையில் கச்சேரி. பாவலரோ வரவில்லை. சரி, மாலையில் எப்படியும் அண்ணன் வந்து விடுவார் என்று உள்ளூர் கம்யூனிஸ்டு தோழர்களை சமாதானப்படுத்தினோம்.

    கட்சியின் செயலாளருக்கு விஷயம் போயிற்று. அவர் யதார்த்தவாதி. பாவலர் வரவில்லை என்பதை கூட்டத்தில் சொல்ல முடியாது. அதே நேரம் பாவலரை அதுவரை அந்த ஊர் மக்கள் பார்த்ததில்லை. இந்த விஷயத்தை மனதில் கணநேரம் கூட்டிக்கழித்தவர், பாஸ்கரை அழைத்தார். "பாவலர் என்று சொல்லி நீங்களே கச்சேரியை நடத்திவிட முடியுமா?'' என்று கேட்டார். எங்களுக்கு அதிர்ச்சி. நாங்களாக கச்சேரியை நடத்திவிட முயன்று பார்க்கலாம். ஆனால் பாவலராக நடிப்பதாவது? சினிமாவை விடத் தமாஷாக இருக்கிறதே? சரி, பாவலராக பாஸ்கர் நடிக்கட்டும். அப்படியானால் பாஸ்கராக நடிப்பது யார், நானா?

    அண்ணன் பாவலரோடு பாட்டுக்கு இடையே காமெடியாக பாஸ்கர் சில கேள்விகள் கேட்பது வழக்கம். அதற்கு அண்ணனின் பதில்கள் மக்களிடம் கைதட்டல் பெறும். இப்போது பாஸ்கர் இடத்தில் நான் இருந்து கொண்டு, பாவலராக பாஸ்கரை கருதிக்கொண்டு கேள்விகள் கேட்கவேண்டும். கச்சேரியில் அத்தனை பாடல்களும், உரையாடல்களும் எங்களுக்கு மனப்பாடம். எதை, எப்படி ஏற்றி, இறக்கிப் பேசவேண்டும் என்பதும் அத்துப்படியான பாடம். என்றாலும் மாலை வரையில் அண்ணன் பாவலர் வந்து விடமாட்டாரா என்ற ஒரு கவலை ஓடிக்கொண்டிருந்தது. எப்படியும் வந்துவிடுவார் என்ற நம்பிக்கையும் இருந்தது.

    மாறுவேடம் புனைந்து நாங்கள் நடித்தாக வேண்டும் என்றிருக்கும்போது, அண்ணன் எப்படி வருவார்? வரவேயில்லை. கோவில்பட்டியில் இருந்து ஒரு வாடகைக்காரில் நானும் பாஸ்கரும் சென்றோம். கூடவே கட்சித்தோழர் ஒருவரும் வந்தார். சூரங்குடி என்ற கிராமத்தில் முதல் நாள் நிகழ்ச்சி. அன்றைக்கென்று பார்த்து எந்த ஊரிலும் நாங்கள் எதிர்பார்த்திராத ஒரு நிகழ்ச்சி நடந்தது.

    அந்த ஊரிக்கு வெளியே மக்கள் கூடியிருந்தார்கள். அங்கிருந்து பாவலருக்கு வரவேற்பு அளித்து மேடை அமைக்கப்பட்ட மைதானம் வரை கிராமத்தெருக்களில் ஊர்வலமாகப் போய் கூட்டம். அதைத்தொடர்ந்து கச்சேரி. மைதானம் வந்ததும் காரைவிட்டு இறங்கினோம். எங்களைப் பார்த்ததும் "பாவலர் வரதராஜன்'' என்று  ஒருவர் உரத்த குரலாய் ஒலிக்க, மக்கள் "வாழ்க'' என்று கோஷம் போட்டார்கள்.
    ×