என் மலர்
வாய்ப்பு கிடைக்காததால் புதிதாக போட்டுக்கொண்ட நிபந்தனைகளை நடிகை ஒருவர் தளர்த்திக் கொண்டுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
ஆரம்பத்தில் சேலைக்கடை விளம்பரத்தில் நடித்துவந்த நடிகைக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவே படங்களில் நடிக்கத்தொடங்கி பிசியான நடிகையானார். தமிழின் முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்து முன்னணி நடிகை பட்டியலிலும் இடம்பிடித்தார். சமீபத்தில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சமயத்தில், நடிகை இனிமேல் நடிக்கும் படங்களுக்கு புதிதாக நிபந்தனைகள் எல்லாம் விதிக்கத் தொடங்கினார்.
முன்னணி நடிகைகளாக வலம்வந்த நடிகைகள் சிலர், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மட்டுமே தேர்வு செய்து என்ற நிபந்தனையுன் சில படங்களில் நடித்து வருகின்றனர். அந்த படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தனக்கும் அதுபோல் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்று நினைத்த இந்த நடிகையும், தன்னை தேடி வரும் இயக்குனர்களிடம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் இருந்தால் கூறுங்கள் என்று நிபந்தனை விதிக்கிறாராம்.

அப்படி இவரை தேடிவந்த பல இயக்குனர்களும் தங்களிடம் அப்படியொரு கதையொன்றும் இல்லை என்று திரும்பி சென்றுவிட்டார்களாம். இதனால், தொடர்ந்து கதை கேட்டு வந்தவருக்கு எந்த கதையும் பிடிக்காததால் வாய்ப்புகள் இல்லாமலேயே போய்விட்டதாம். இப்படியே தொடர்ந்தால் நாம் ஓரக்கட்டப்படுவோம் என்று நினைத்தாரோ என்னவோ! திடீரென்று தன்னுடைய நிபந்தனையை தளர்த்திக் கொண்டுள்ளாராம்.
முன்னணி நடிகைகள் எல்லோரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கச் சென்றுவிட்டதால் இளம் ஹீரோக்கள் அதற்கடுத்தபடியாக இருக்கும் இந்த நடிகையுடன் டூயட் பாடவேண்டும் என்று ஆசைப்படுகிறார்களாம். ஆகையால், வாய்ப்பு இருக்கும்போதே எட்டி பிடித்துக்கொள்ள வேண்டும் என்பதுபோல் நடிகையும் முன்புமாதிரி எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்ற லெவலுக்கு இறங்கி வந்துவிட்டாராம்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பாகுபலி-2’ படம் ரூ.1000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ இந்திய சினிமாவில் இதுவரை நிகழ்த்திய சாதனைகளையெல்லாம் தகர்த்தெறிந்து சென்று கொண்டிருக்கிறது. இப்படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையிலும், திரையிட்ட அனைத்து திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடிக்கொண்டிருக்கின்றன.
இதனால், இந்த படத்தின் வசூலும் இந்திய சினிமாவில் யாரும் நிகழ்த்த முடியாத சாதனையை சாதனையை பெற்றுள்ளது. படம் வெளியான 6 நாட்களிலேயே ரூ.800 கோடிக்கும் மேல் வசூலித்து இந்திய சினிமாவிலேயே அதிகமான வசூலை பெற்ற படம் என்ற சாதனையை பெற்றது. இதைத் தொடர்ந்து இப்படம் விரைவில் ரூ.1000 கோடியை எட்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

அந்த சாதனையையும் தற்போது பாகுபலி-2 நிகழ்த்தியுள்ளது. தற்போது 9 நாட்களில் இந்த படம் ரூ.1000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவிலேயே ரூ.1000 கோடியை எட்டிய முதல் படம் இதுதான் என்ற பெருமையை பெற்றுள்ளது. இனிமேல், இந்தியாவில் வெளிவரும் படங்கள்கூட இந்த சாதனையை எட்டுமா? என்பது சந்தேகம்தான்.

திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைப்பதைக் காட்டிலும் பாலியல் பலாத்காரர்களுக்கு மரண தண்டனை என்று காட்டுவது அதிக தேசப்பற்றுடையதாக இருக்கும் என நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.
டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் நிர்பயாவை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் டெல்லி சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதித்து அவர்கள் 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமும் அவர்களது மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்புக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தள பக்கங்களில் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் சித்தார்த்தும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர் கூறும்போது, ‘திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்னதாக தேசியகீதத்தை இசைப்பதை காட்டிலும் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்பதை காட்டுவதே அதிக தேசப்பற்று உடையதாக இருக்கும் என நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன், சினிமாத்துறையில் அடியெடுத்து வைக்க ஒரு படக்கம்பெனியைத் தொடங்கினார்

ஆனால், அவருடைய முயற்சி வெற்றி பெறவில்லை.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"வில்லுப்பாட்டுக்கு ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்தான். அந்தக் கலையின் சிறு வடிவத்திற்குள் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் கருத்துக்கள் ஒளிவிடும். இது அவருடைய தனிச்சிறப்பு.
அண்ணன் பாவலரும் அப்படித்தான். கலைவாணருக்கு சமமாக அவர் கருத்துக்கள் சிறப்பானவையாக இருக்கும். அவர் சினிமாவுக்குள் வராமல் போனது, சினிமாவின் துரதிர்ஷ்டமே தவிர, அவருடைய தகுதி இன்மை அன்று.
சினிமா உலகில் நுழைய அவர் முயற்சியும் செய்தார். நண்பர்களுடன் சேலத்தில் ஒரு ரூம் எடுத்து, "ஜே.ஏ.கே.எஸ். புரொடக்ஷன்ஸ்'' என்ற பெயரில் சினிமா கம்பெனியும் தொடங்கி விட்டார்! சென்னையில் படக்கம்பெனி தொடங்கினால் நிறைய செலவாகும் என்று கருதி, சேலத்தில் படக்கம்பெனியை தொடங்கினார்.
தபால் கார்டுகளில் விலாசம் எழுதும் பகுதிக்குப் பக்கத்தில் காலி இடம் இருக்கிறது அல்லவா? அங்கு "ஜே.ஏ.கே.எஸ். புரொடக்ஷன்ஸ்'' என்று அச்சடித்திருந்தார் - "ஏவி.எம். புரொடக்ஷன்ஸ்'' என்பது மாதிரி! அந்தக் கார்டில்தான் வீட்டுக்குக் கடிதம் எழுதுவார்.
`அண்ணன் சினிமாவில் பெரிய ஆளாக வரப்போகிறார்' என்று நான் நினைத்தேன். அம்மா, பாஸ்கர், அமர் அனைவரும் அப்படித்தான் எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அப்படி நடக்கவில்லை. அண்ணன் மறுபடியும் ஊருக்குத் திரும்பிவிட்டார்.
இவ்வாறு இளையராஜா குறிப்பிட்டார்.
பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் ஏற்பட்ட நட்பு, இரண்டு குடும்பத்தினர் இடையேயும் பாசத்தை வளர்த்தது.
இதுபற்றி இளையராஜா கூறுகிறார்:
"வேலை பார்ப்பதற்காக, பண்ணைபுரத்துக்கு பாரதி வந்தது 1961-ம் வருடம். அவருக்கு சனி, ஞாயிறு விடுமுறை. அதனால், அந்த நாட்களில் சொந்த ஊரான அல்லிநகரத்துக்குப் போய் விடுவார். ஒரு முறை, என்னையும், பாஸ்கரையும் கூட அழைத்துப்போனார்.
பாரதியின் அம்மா, சகோதரிகள் பாலாமணி, பாரதி, சகோதரர் செல்லக்கண்ணு, ஜெயராஜ், இன்னும் மூத்த சகோதரர், அப்பா பெரிய மாயத்தேவர் எல்லோரும் நன்றாகப் பழக்கமாகிவிட்டார்கள்.
முதல் சந்திப்பிலேயே, பாரதியின் அம்மா, "வாங்கப்பா! நீங்கதானா அது?'' என்று மிகவும் அன்புடன் பேசினார்கள்.
என் அம்மாவும் இப்படித்தான். யாரையாவது அழைத்துப்போய், அம்மாவிடம் அறிமுகப்படுத்தினால், "வாப்பா! சவுக்கியமா? ஏம்பா இவ்வளவு நாள் இந்தப் பக்கம் வரலே?'' என்று கேட்பார்கள்!
இரண்டு தாய்களும், எங்களுக்கு ஒரே தாய்தான்.
ஒருமுறை தீபாவளிக்கு நானும், பாரதியும் அல்லிநகரம் போய்விட்டோம். இரவெல்லாம் பட்டாசு வெடித்து, மத்தாப்பு கொளுத்தி தீபாவளியைக் கொண்டாடினோம்.
பிறகு தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்தால், வெந்நீரும், சோப்பும், சீயக்காயும், துண்டும் தயாராக இருந்தன.
"வாங்கப்பா! சீக்கிரம் எண்ணை தெய்த்து குளிச்சிட்டு ரெடியாகுங்க'' என்றார், பாரதியின் அம்மா.
"எதுக்கு?'' என்று நாங்கள் கேட்க, "சாப்பிட வேணாமா? பின்னே என்ன தீபாவளி?'' என்று கூறிவிட்டு, பாரதிக்கு எண்ணை தேய்த்து விட்டார்கள்.
நானும் எண்ணை எடுத்து தேய்த்துக்கொண்டேன். "நல்லா இருக்கு நீ எண்ணை தேய்க்கிற லட்சணம்!'' என்று கூறிவிட்டு, எண்ணை கிண்ணத்தை வாங்கிக் கொண்டார்கள். என் முதுகில், எண்ணை படாமலிருந்த இடங்களில் எல்லாம் எண்ணை தேய்த்துவிட்டார்கள்.
பிறகு, பாரதியின் தலையில் நன்றாக சீயக்காய் போட்டுத் தேய்த்ததுடன், சோப்பு போட்டு தேய்த்து, தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டினார்கள்.
நான் குளிப்பதற்கு சொம்பில் தண்ணீர் எடுத்தேன். "போதும். இங்கே கொண்டா!'' என்று வலுக்கட்டாயமாக சொம்பை வாங்கி, எனக்கும் சீயக்காய் தேய்த்து, குளிப்பாட்டினார்கள்!
வீட்டுக்கு வந்த மகனின் நண்பனுக்கு, எந்த ஊரில் எந்தத்தாய் இப்படி செய்திருப்பார்கள்!
பிறகு சாப்பாடு. சாதாரணமாக மூன்று நாலு இட்லி, ஒரு தோசை, காபியுடன் கதை முடிந்து விடும். ஆனால் எங்களுக்கு 6 இட்லி, 6 பனியாரம், 6 தோசை இவற்றுடன், சட்னி, சாம்பார், மிளகாய் சட்னி ஆறாக ஓடியது!
ஒரே ஒரு தீபாவளிக்கு இப்படி நடந்தது என்றால் பரவாயில்லை. எத்தனை தீபாவளிகளுக்கு நான் அல்லிநகரத்துக்கு போனேனோ, அப்போதெல்லாம் இப்படி நடந்தது.
பெரிய மாயத்தேவர், காந்தீயத்தில் பற்று மிக்கவர் என்பதை அவருடைய கதர் வேட்டியும், சட்டையும் எடுத்துக்காட்டின. சகோதரி பாலா, பள்ளிக்கூட ஆசிரியையாக இருந்தார். பாரதி - இந்தத் தங்கையின் பெயரைத்தான் தன் பெயராக மாற்றிக்கொண்டார், பாரதிராஜா. (இயற்பெயர் சின்னச்சாமி)
பின்னால் நான் இசையமைப்பாளனாக ஆன பிறகு, பண்ணைப்புரம் போகும்போதோ, அம்மாவின் சமாதிக்கு போகும்போதோ, அல்லிநகரத்திலும், தேனியிலும் காரை நிறுத்தி, அம்மாவைப் பார்க்காமல் போனதே இல்லை. வெறும் கையுடன் போகமாட்டேன். ஒவ்வொரு முறையும், 4 புடவையும், பணமும் கொடுத்து அந்தத் தாயை வணங்குவேன்.
என்னைப் பெறாமல் பெற்ற தாய் அவர்.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.

தமிழ் தெரிந்த நடிகர்களை யாரும் கண்டுகொள்வதில்லை என்று ஒரு நடிகர் புலம்பி வருகிறாராம். அவர் யார்? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் அந்த மூத்த நடிகர். ஆரம்ப காலங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த நடிகர் தற்போது ஹீரோவுக்கு இணையான வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில்கூட மூன்றெழுத்து படமொன்றில் முக்கியமான வில்லன் வேடம் ஏற்று நடித்து, நடிப்பால் மிரள வைத்திருந்தார்.
இந்த நடிகருக்கு முழுமையான திறமை இருந்தும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு கதாபாத்திரங்கள் அமையவில்லையே என்ற வருத்தம் இருக்கிறதாம். இதற்கு காரணமாக அவர் நினைப்பது, வெளிமாநில வில்லன்களுக்கு தமிழ் சினிமா அதிக வாய்ப்புகள் கொடுப்பதுதானாம். மேலும், இங்குள்ள இயக்குனர்கள் தமிழிலேயே திறமையான நடிகர்கள் இருந்தாலும், வெளிமாநில நடிகர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். தமிழ் நடிகர்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை என்று ஆதங்கப்படுகிறாராம்.

மேலும், அப்படி வரும் வெளிமாநில நடிகர்களின் பெயர்களை உச்சரிக்கத் தெரியாமல் இருக்கும் சூழ்நிலை இங்கு நிலவுகிறது. அவர்களுடைய பெயர்களையே எழுதி வைத்துதான் உச்சரிக்கிறார்கள். பெயரைக்கூட உச்சரிக்க முடியாத ஒருவரை வைத்து படம் பண்ண ஆசைப்படுகிறார்களே தவிர, தமிழ் தெரிந்த நடிகர்களை அவர்கள் கண்டுகொள்வதாக இல்லை என்று தனது சக நண்பர்களிடம் சொல்லி புலம்புகிறாராம்.

புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் ஜோடியாக நடித்து வெள்ளி விழா கண்ட ஜனரஞ்சக திரைக்காவியம், ‘மாட்டுக்கார வேலன்’ 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் வருகிறது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., இரட்டை வேடங்களில் நடித்த படம் என்ற பெருமையையும், கவியரசர் கண்ணதாசன் மற்றும் வாலிபக்கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த தித்திக்கும் பாடல்களையும் கொண்ட காவியத் திரைப்படம் என்ற பெருமையையும் ஒரு சேர பெற்ற படம் ‘மாட்டுக்கார வேலன்’.
ப.நீலகண்டன் இயக்கத்தில் 1970-ல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, லட்சுமி, அசோகன், வி.கே.ராமசாமி, சோ மற்றும் பலர் நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் ‘திரை இசைத் திலகம்’ கே.வி.மகாதேவன்.
கிட்டத்தட்ட 46 வருடங்களுக்குப் பின் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட்டு, மெருகேற்றப்பட்ட வண்ணக்கலவையில், 5.1 ஒலி அமைப்பில், சினிமாஸ்கோப் திரைப்படமாக தயாராகிக் கொண்டிருக்கிறது.

1970ம் வருடத்திலேயே சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்துடன் உருவாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்து சென்னையில் மட்டும் அரங்கம் நிறைந்த 400 காட்சிகள் என்ற வரலாறு படைத்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆன, ‘மாட்டுக்கார வேலன்’, இன்னும் மெருகூட்டப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.
‘தொட்டுக்கொள்ளவா, நெஞ்சில் தொடுத்துக்கொள்ளவா’ கவியரசரின் வரிகளோடு அமைந்த பாடலும், ‘ஒரு பக்கம் பாக்குறா‘ பாடலும், ‘வாலிபக்கவிஞர்’ வாலி வரிகளில் அமைந்த ‘பூ வைத்த பூவைக்கு பூக்கள் சொந்தமா’ ஆகிய இனிமையான காதல் சொட்டும் பாடலும் அமைந்த அற்புதத் திரைக்காவியம்.
‘சத்தியம் நீயே தர்ம தாயே’ பாடலும், ‘பட்டிக்காடா பட்டணமா’ ஆகிய தத்துவப் பாடல்களும் இடம் பெற்றுள்ள திரைப்படம்.
எம்.ஜி.ஆர் படங்கள் என்றாலே கமர்சியலுக்கும் குறைவிருக்காது, காதலுக்கும் குறைவிருக்காது. அப்படி, காதலென்னும் தேன் இருக்கும் பாத்திரம் ஆக அமைந்த படங்களில் ஒன்றான மாட்டுக்கார வேலன் மீண்டும் டிஜிட்டலில் வெளியாகும் செய்தி, நிச்சயமாக எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கும், சினிமா காதலர்களுக்கும் கொண்டாட்டமான குதூகலமான செய்தியாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.
ஜெயந்தி பிலிம்ஸ் சார்பில் என்.கனகசபை தயாரிப்பில் உருவான ‘மாட்டுக்கார வேலன்’ டிஜிட்டல் பதிப்பை சாய் வெங்கட் ராமா பிலிம்ஸ் சார்பில் சுனிதா வெளியிடுகிறார்.

ஜி.வி.பிரகாஷ் அடுத்ததாக தெலுங்கு ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
கடந்த 2011-ஆம் ஆண்டு தெலுங்கில் நாக சைத்தன்யா-தமன்னா நடிப்பில் வெளியாகி, வசூல் வேட்டை செய்த படம் ‘100% லவ்’. இப்படத்தை தெலுங்கில் பி.சுகுமார் என்பவர் இயக்கியிருந்தார். இப்படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது. இப்படத்தில் கதாநாயகனாகவும், இசையமைப்பாளராகவும் ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுகிறார்.
இப்படத்தை எம்.எம்.சந்திரமௌலி என்பவர் இயக்குகிறார். இவர் பேக் வாட்டர்ஸ், நடாஷா உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ப்ரெட் மார்பியிடம் பணியாற்றியவர். தெலுங்கில் இயக்கிய சுகுமார் கிரியேட்டிவ் சினிமாஸ் NY சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார். NJ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது.

இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் படமாகவிருக்கிறது. முழுக்க முழுக்க லண்டனிலேயே படமாக்கவுள்ளனர். இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகவுள்ளது. இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

சென்னையில் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
சென்னை உயர்நீதிமன்றத்தில், தியாகராய நகர், வித்யோதயா காலனியை சேர்ந்த ஸ்ரீரங்கன் உள்ளிட்ட பலர் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளனர். அந்த வழக்கில் அவர்கள், “சென்னை தியாகராய நகர், அபிபுல்லா சாலையில் இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, அபிபுல்லா சாலையையும், பிரகாசம் சாலையையும் இணைக்கும் 33 அடி அகலம் கொண்ட பொது சாலையை நடிகர் சங்கத்தினர் மறித்துள்ளனர்.
இதனால், பொதுமக்கள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதியில் குடியிருப்பவர்கள், பிரகாசம் சாலைக்கு வருவதற்கு வேறு பாதைகளை பயன்படுத்தி சுற்றி வரவேண்டியதுள்ளது. விதிமுறைகளை மீறி, சாலைகளை மறித்து கட்டிடம் கட்டப்படுவதால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்று கூறி உள்ளனர். இந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது, சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இவ்வழக்கில் நடிகர் சங்கம் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையில் நடிகர் சங்கத்துக்கான கட்டிடம் கட்ட இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம். அதேநேரத்தில் அஸ்திவாரம் அமைக்கும் பணிகளை தொடரலாம் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

'பாகுபலி'யில் அனுஷ்கா நடித்த ‘தேவசேனா’ என்ற பெயரில் கார்த்திகா நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
‘பாகுபலி’ முதல் பாகத்தில் கொஞ்சம் ஏமாற்றினாலும், இரண்டாம் பாகத்தில் அழகு பதுமை, சண்டைக் காட்சி, வீர வசனங்கள் என தனது ‘தேவசேனா’ கதாபாத்திரத்தை முழுமையாக செய்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா. இந்த கதாபாத்திரம் அனைவருக்கும் ஒரு பெரிய உத்வேகத்தை கொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். அந்தளவுக்கு இந்த கதாபாத்திரத்தை செதுக்கியிருந்தார் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்.
இந்நிலையில், இந்தியில் தொலைக்காட்சி தொடர் ஒன்றிற்கு கதை எழுதி வரும் விஜயேந்திர பிரசாத், அந்த தொடரில் வரும் கதாநாயகிக்கு தேவசேனா என்று பெயர் வைத்திருக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் நடிக்கவுள்ளார்.

‘ஆரம்ப்’ என்ற அந்த தொடர் புராணக் கதையாக உருவாகவிருக்கிறது. இந்த தொடரில் வரும் தேவசேனா கதாபாத்திரம் திராவிட பாரம்பரியத்தில் வந்த வீரமங்கை இளவரசியாக உருவாக்கப்பட்டுள்ளதாம். ‘கோ’, ‘புறம்போக்கு’ என்று சில வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்துவிட்டு, வாய்ப்பில்லாமல் இருக்கும் கார்த்திகாவுக்கு இந்த தொடர் கைகொடுக்கும் என நம்பலாம்.

பிரபல நடிகர் ஒருவருக்கு அவரது ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை வைத்து பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் இடைவெளி காட்சிகளை வைத்தாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் யார்? என்பதை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பாகுபலி-2’ இந்திய திரையுலகின் பல்வேறு சாதனைகளையும் முறியடித்து வருகிறது. பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்தவர்களுக்கு இடைவெளி காட்சிகள் என்றைக்குமே மறக்கமுடியாது. அந்தளவுக்கு அந்த காட்சியை அனைவரும் மெய்சிலிர்க்க வைக்கும் விதமாக படமாக்கியிருப்பார்கள்.
முதல் பாகத்தில் கீழே விழப்போகும் பல்லாள தேவனுடைய சிலையை ஒற்றைக்கையால் தாங்கி பிடித்துக் கொண்டு விடைபெறும் மகேந்திர பாகுபலியை பார்க்கும் மக்கள் ‘பாகுபலி.. பாகுபலி..’ என்று உரக்க குரல் எழுப்புவார்கள்.

அதேபோல், இரண்டாம் பாகத்தில் அமரேந்திர பாகுபலி மகிழ்மதி அரசாங்கத்தின் சேனாதிபதியாக பொறுப்பேற்கும் சமயத்தில் ஒட்டுமொத்த மக்களும் ‘பாகுபலி... பாகுபலி’ என்று உரக்க குரல் எழுப்புவார்கள். அதேசமயத்தில் வீரர்கள் அனைவரும் தங்கள் போர் கருவிகளை வைத்து அந்த மைதானமே அதிரும் அளவுக்கு தரையில் தட்டுவார்கள். யானைகள் மண்டியிட்டு வணங்கும். இப்படியாக செல்லும் அந்த காட்சி அனைவரையும் கொஞ்சம் நேரம் உறைய வைக்கும்.
இந்த காட்சியை இப்படத்தின் கதையாசிரியான விஜயேந்திர பிரசாத், ஒரு பிரபல நடிகருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை மனதில் வைத்துதான் படத்தில் சேர்த்ததாராம். அவர் யாரென்றால், தெலுங்கு உலகில் பவர் ஸ்டாராக திகழும் பவன் கல்யாண்தான். ஒருமுறை பவன் கல்யாண் படத்தின் ஆடியோ வெளியீட்டில் விஜயேந்திர பிரசாத் கலந்துகொண்டாராம்.

அப்போது அவரை அறிமுகப்படுத்தும் சமயத்தில் ரசிகர்கள் அனைவரும் ‘பவர் ஸ்டார்.... பவர் ஸ்டார்..’ என்று ஆர்ப்பரிக்க அந்த அரங்கமே அதிர்ந்ததாம். அதை மனதில் வைத்துக்கொண்டு அதேபோல், பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் இடைவேளைகளிலும் அதேபோன்றதொரு காட்சி வரும்படி கதையை எழுதினாராம். இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரே தெரிவித்துள்ளார்.

ரஜினி - பா.ரஞ்சித் இணையும் புதிய படத்தில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளிவந்த ‘கபாலி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்திலும் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவிருக்கிறார்.
இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை பா.ரஞ்சித் மேற்கொண்டு வருகிறார். அதேபோல், நடிகர், நடிகையர் தேர்வும், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. அதில், தற்போது சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, ‘கபாலி’ படத்திற்கும் சந்தோஷ் நாராயணன்தான் இசையமைத்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் அமைந்த அனைத்து பாடல்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. இப்படமும் தாதா பற்றிய கதையாக உருவாகவிருக்கிறது. வருகிற மே 28-ந் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘லொள்ளு சபா’ ஜீவா கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் ‘ஆரம்பமே அட்டகாசம்’ படம் எப்படியிருக்கிறது? என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
நாயகன் ஜீவாவின் அப்பா பாண்டியராஜன் சிறுவயதில் காதலித்த பெண்ணை திருமணம் செய்யமுடியவில்லை என்பதால் தனது மகனை சிறுவயதில் இருந்து காதலித்துதான் திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லியே வளர்க்கிறார்.
வளர்ந்து பெரியவனானதும் ஜீவா, ஒருநாள் நாயகி சங்கீதா பட்டை பார்க்கிறார். அவளைப் பார்த்ததும் இவருக்குள் காதல் பிறக்கிறது. மறுநாளும் நாயகியை பார்க்கும் சூழ்நிலை ஜீவாவுக்கு கிடைக்க இருவரும் நட்பாகிறார்கள். இந்த நட்பு நாளடைவில் காதலாகி இருவரும் காதலர்களாக வலம் வருகிறார்கள்.

காதலர்களான பிறகு நாயகி கேட்கும் அனைத்தையும் எந்தவித மறுப்பும் சொல்லாமல் வாங்கிக் கொடுக்கிறார் ஜீவா. அவளுக்கு செலவு செய்வதற்காகவே தனது நண்பர் சாம்ஸிடம் சொல்லி, அவரது கம்பெனியிலேயே வேலைக்கும் சேர்கிறார். இந்நிலையில், ஜீவா வேலை விஷயமாக வெளியூர் செல்லவேண்டிய சூழ்நிலை வருகிறது.
வெளியூர் சென்றபிறகு சங்கீதாவிடமிருந்து எந்தவொரு அழைப்பும் ஜீவாவுக்கு வரவில்லை. சந்தேகத்தின் பேரில் சென்னை திரும்பும் ஜீவாவுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. சங்கீதா மற்றொருவருடன் நெருக்கமாக பழகி வருகிறார். அதை தட்டிக்கேட்க செல்லும் ஜீவாவை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறாள் நாயகி.

இதன்பிறகு ஜீவா நாயகியை விட்டுக்கொடுத்துவிட்டு பிரிந்து சென்றாரா? அல்லது அவளை பழிவாங்கினாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
ஜீவா இதுவரை காமெடி நடிகராக வலம்வந்தவர் தற்போது ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். ஹீரோவுக்குண்டான முகம், வசனம் உச்சரிக்கும் விதம், ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் கலக்கியிருக்கிறார். காதல் தோல்விக்கு இவர் முகத்தில் கொடுத்திருக்கும் பாவணைகள் ரசிக்குமபடியாக இருக்கிறது. இப்படத்தில் நடனமும் நன்றாகவே ஆடியிருக்கிறார். இவரது நடிப்பில் கொஞ்சம் ரஜினியின் சாயல் இருக்கிறது. அதை தவிர்த்து தனக்கேற்றவாறு தனி ஸ்டைலை ஏற்படுத்திக்கொண்டு நடித்தால் இவருக்கென்று சினிமாவில் தனி மார்க்கெட் உருவாக்கலாம்.

சங்கீதா பட்டை சுற்றிதான் கதையே நகர்கிறது. அதை உணர்ந்து அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். சாம்ஸ், வையாபுரி ஆகியோரின் காமெடி படத்தின் இடைவேளை வரை கதையை நகர்த்தி செல்கிறது. பாண்டியராஜன் ஒருசில காட்சிகள் வந்தாலும் நிறைவாக செய்திருக்கிறார். பதிவாளராக வரும் ஞானசம்பந்தம் பேசும் வசனங்கள் எல்லாம் அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது. இன்றைய கால காதலர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக அமைந்துள்ளது.
இயக்குனர் ரங்கா இன்றைய கால இளைஞர்களை காதலித்து கழட்டிவிட்டு செல்லும் பெண்களுக்கு புகட்டும் பாடமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார். தங்களுடைய காதலிக்காக ஆண்கள் எந்தளவுக்கெல்லாம் இறங்கிச் செல்கிறார்கள் என்பதையும் அழகாக எடுத்துச் சொல்லியிருக்கிறார். காதல், ஊடல் அதனிடையே காமெடியையும் கலந்து சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

ஆனந்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, ஒயின்ஷாப்பில் வரும் பாடல் காட்சிக்கு இவர் அமைத்திருக்கும் ஒளியமைப்பு பிரமாதமாக இருக்கிறது. ஜெயா கே தாஸின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. பின்னணி இசையும் ஓகே ரகம்தான்.
மொத்தத்தில் ‘ஆரம்பமே அட்டகாசம்’ தூள்.