என் மலர்
இதற்கு பரிசாக ராணி, பேட்டரியை திருடியதாக கைது செய்து வைத்திருந்த சைதானாவின் சகோதரியான கரேன் கில்லென்னை அவர்களிடமே ஒப்படைக்கிறார். கார்டியன்சும் கில்லென்னை கைதிபோலவே நடத்தி அழைத்துச் செல்கிறார்கள். இந்நிலையில், கார்டியன்ஸ் குழுவில் உள்ள ராக்கெட், அந்த கிரகத்தில் உள்ள சில பேட்டரிகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்துவிடுகிறது.

இதையறியும் ராணி தனது படை வீரர்களை அனுப்பி கார்டியன்சை தாக்குகிறார். ஆனால், யாரென்று தெரியாத ஒருவர் அவர்களிடமிருந்து கார்டியன்சை காப்பாற்றுகிறார்கள். முடிவில் அந்த மர்ம நபர் கிறிஸ் பிராட்டின் அப்பா என்பது தெரிய வருகிறது. அவர் தனது கிரகத்திற்கு அழைத்துச் செல்லவே இங்கு வந்ததாக கூறுகிறார். முதலில் அவருடன் கிறிஸ் பிராட்டை அனுப்ப சக கார்டியன்ஸ் மறுப்பு தெரிவிக்கிறார்கள்.
ஆனால், கிறிஸ் பிராட்டோ அவருடன் போக விருப்பப்படவே, பேபி குரூட், ராக்கெட்டிடம் கில்லென்னை ஒப்படைத்துவிட்டு, அவள் தப்பிக்கவோ, அல்லது ஏதேனும் செய்ய நினைத்தால் அவளை கொன்றுவிடுமாறு கூறிவிட்டு, கிறிஸ் பிராட்டோவின் அப்பாவுடைய கிரகத்துக்கு மற்ற மூன்று பேரும் பயணமாகிறார்கள்.
இதற்குள், பேட்டரியை திருடிச்சென்ற கார்டியன்சை தேடிக் கண்டுபிடிப்பதற்காக மைக்கேல் ரூக்கர் தலைமையில் ஒரு குழுவை அனுப்புகிறார் ராணி. அவர்கள் பேபி குரூட்டும், ராக்கெட்டும் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சிறைப்பிடிக்கிறார்கள். இந்நிலையில், மைக்கேல் ரூக்கர் குழுவுக்குள் பதவி ஆசை ஏற்பட்டு, மைக்கேல் ரூக்கரையும் கைது செய்கிறார்கள்.

இதன்பிறகு பேபி குரூட்டும், ராக்கெட்டும் அந்த கும்பலிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள்? மைக்கேல் ரூக்கர் மற்றும் கில்லெனின் நிலைமை என்னவாயிற்று? தனது அப்பாவின் கிரகத்திற்கு சென்ற கிறிஸ் பிராட் தனது சக நண்பர்களை மீட்க திரும்பி வந்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
முந்தைய பாகத்தைப் போலவே இந்த பாகமும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றிருக்கிறது. கிறிஸ் பிராட், ஜோ சைதானா, டேவ் பௌதிஸ்தா, பேபி குரூட் முதல் பாகத்தைப் போலவே இந்த பாகத்திலும் நடித்து அசத்தி இருக்கின்றனர். கரேன் கில்லென் குறைவான காட்சிகளில் வந்தாலும், காட்சிக்கு தேவையான பங்கை அளித்திருக்கிறார். ரங்கூனான ராக்கெட் செய்யும் வம்புகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன. அதேபோல் பேபி குரூட்டாக வரும் சிறு மரம் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் சிரிக்க வைக்கின்றன.

குறிப்பாக மைக்கேல் ரூக்கர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போது, அவரை காப்பாற்றுவதற்காக இது செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் தியேட்டரை கலகலப்பாக வைத்திருக்கிறது. ரூக்கர் சிறையில் இருந்து வெளிவந்த பிறகு அனைவரையும் ஒரே விசிலில் துவம்சம் செய்வது மாஸ்.
இயக்குநர் ஜேம்ஸ் கன், இப்படத்தின் முதல் பாகத்தை போலவே இரண்டாவது பாகத்தையும் ரசிக்கும்படி இயக்கியிருக்கிறார். கார்டியன்ஸ் அனைவரும் அண்டத்திலேயே சுற்றிக்கொண்டு வரும்படி தத்ரூபமாக திரைக்கதையை அமைத்திருப்பது சிறப்பு. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் ரொம்பவும் மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. அவர்களின் உடல்மொழி, உருவங்கள் என அனைத்திலும் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். திடீரென கிறிஸ் பிராட்டோ வரும் காட்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும்படி இருப்பது சிறப்பு. காட்சிகளும் ரசிக்கும்படி இருப்பது படத்திற்கு ப்ளஸ். அண்டத்தை காட்டுவதில் ஒரு புதுமுயற்சியை எடுத்திருப்பதற்காக இயக்குநருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
படத்தின் கிராபிக் காட்சிகள் அனைத்தும் ரொம்பவும் தத்ரூபமாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக, பேபி குரூட் அட்டகாசங்களை கிராபிக்சில் செய்த காட்சிகள் எல்லாம் அருமை. ப்ரெட் ரஸ்கின், கிரெக் வூட்டின் எடிட்டிங் பணிகள் சிறப்பாக வந்துள்ளன. ஹென்றி பிரஹாம் ஒளிப்பதிவில் காட்சிகள் பிரமாதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டைலர் பேட்ஸின் பின்னணி இசை கதையின் ஓட்டத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் `கார்டியன்ஸ் ஆப் த கேலக்ஸி' பாதுகாப்பு வளையம்.
இந்த படம் திரையிடப்பட்ட 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூல் செய்து உலக அளவில் சரித்திர சாதனை படைத்து இருக்கிறது. இந்திய படம் ஒன்று இந்த சாதனை படைத்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
‘டைட்டானிக்’, ‘அவதார்’, ‘ஹாரிபாட்டர்’, ‘லார்ட் ஆப் ரிங்ஸ்’ உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே ரூ.1000 கோடி வசூல் செய்தன. அந்த பட்டியலில் ‘பாகுபலி-2’ படமும் சேர்ந்து இருப்பது இந்திய திரைஉலகினரை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ படத்தின் கதையை எழுதியவர் பாகுபலி இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத். ‘பாகுபலி-2’ பட வெற்றி குறித்து அவர் கூறி இருப்பதாவது:-
‘பாகுபலி -2' -ன் வெற்றி எதிர்பார்த்தது தான் என்றாலும், 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூலித்து மிகப்பெரிய சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படம் இவ்வளவு பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
ஒரு தெலுங்கு சினிமா எல்லை கடந்து உலகம் முழுவதும் வெற்றி பெற்று இருக்கிறது. இதை ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த படம் என்று பார்க்காமல் எல்லோருக்குமான படம் என்று அனைவரும் ரசிக்கிறார்கள்.
இது இந்த படத்துக்கு கிடைத்த பெருமை.
இந்த படத்தை இயக்கிய ராஜமவுலி, நடித்த நடிகர், நடிகைகள், பங்கேற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த பெருமை சொந்தமானது. இந்த சாதனை படைக்க உதவிய ரசிகர்களுக்கு நன்றி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் கூறி இருப்பதாவது:-
‘பாகுபலி-’ படத்தின் பெருமையை சொல்லிக் கொண்டே இருக்கலாம். கனவு நிறைவேற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். என்பதை இந்த படத்தின் வெற்றி நிரூபித்து இருக்கிறது.
படத்தை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம். சீட் நுனியில் உட்கார்ந்துதான் இந்த படத்தை பார்த்தேன். எத்தனை முறை கைதட்டி ரசித்தேன் என்பது எனக்கே தெரியாது. 9 நாட்களில் ரூ.1000 கோடி வசூல் என்பது வரலாற்று சாதனை. இந்த பட உலகுக்கு பெருமை சேர்த்த ராஜமவுலியையும், அவரது படக்குழுவினரையும் எப்படி பாராட்டினாலும் போதாது.
இவ்வாறு தேவஸ்ரீ பிரசாத் கூறினார்.
ஆடுகளம் நரேன், வேலா ராமசாமி, கிருஷ்ணா, ராஜ்குமார், வளவன், விநோத், சவுமியா, ராதா உள்பட பலரும் நடித்திருக்கும் இப்படத்தில், தற்போதைய முக்கிய பிரச்சனையான மருத்துவத்தை படிக்க சென்று, அதனால் பாதிக்கப்படும் 16 பேரை மையமாக வைத்து கதை நகர்கிறது. அந்த சம்பவத்தால் பாதிக்கப்படும் அனைவரும், அதிலிருந்து தப்பவே முயற்சி செய்கிறார்கள்.

அதில் ஒருவர் நாயகனின் தங்கை. தங்கையின் உயர் படிப்பு கனவை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிக்கல்களையும், அதனால் உருவாகும் பிரச்சினைகயைும், சந்திக்கும் அரசியல் சூழ்ச்சிகளும், அதை எதிர்கொள்ள அவர் எடுக்கும் முடிவுகளுமே ‘எய்தவன்’ படத்தின் கதை.
காதல், காமெடி, ஆக்ஷன் கலந்து கமர்சியல் படமாக உருவாகியுள்ள ‘எய்தவன்’ வருகிற 12-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இதில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருக்கிறார். ரெஜினா நாயகியாக நடித்துள்ளார். மற்றொரு நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். இவர்களுடன் சூரி, லிவிங்ஸ்டன், மனோபாலா, ரவிமரியா, மன்சூர் அலிகான், யோகிபாபு, மதுமிதா, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இசை- டி.இமான், ஒளிப்பதிவு- கே.ஜி.வெங்கடேஷ், பாடல்கள்- யுகபாரதி, படத்தொகுப்பு- கே.ஆனந்த லிங்ககுமார், நடனம்- பிருந்தா, தினேஷ், தினா, ஸ்டண்ட்- திலீப் சுப்பராயன், கலை- ருத்ரகுரு, எழுத்து, இயக்கம்- எஸ்.எழில்.

இதில், உதயநிதி ஸ்டாலின் நண்பனாக யோகிபாபு நடித்திருக்கிறார். சூரி மாறுபட்ட வேடத்தில் நடித்து இருக்கிறார். காதல், நகைச்சுவை கலந்த படமாக ‘சரவணன் இருக்க பயமேனே’ உருவாகி இருக்கிறது.
படம் பற்றி கூறிய இயக்குனர் எழில்........
‘‘இந்த படத்துக்கு டி.இமான் இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள் கிடைத்து இருக்கிறது. இந்த படம் வித்தியாசமான கதை களத்தில் உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் விரும்பும் எல்லா அம்சங்களும் இருக்கும்’’ என்றார்.
வருகிற 12-ந் தேதி ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் திரைக்கு வருகிறது.
அதாவது ஒருமுறை அஜித்தும், விவேக்கும் காரில் பயணம் செய்துகொண்டிருந்த போது, அஜித் கையில் இருந்த ரோலக்ஸ் வாட்ச் விவேக்கை ரொம்பவும் கவர்ந்துள்ளதாகவும், அந்த வாட்சின் அழகை பார்த்து வியந்துபோன விவேக், என்றாவது தானும் அதுபோன்ற ஒரு வாட்சை வாங்குவேன் என்று அஜித்திடம் கூறினாராம்.

உடனே அஜித் சற்றும் யோசிக்காமல் கையில் இருந்த வாட்சை கழற்றி விவேக்கில் கையில் கொடுத்துவிட்டாராம். இதைப் பார்த்து விவேக் எதுவும் பேசமுடியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தாராம். இதுகுறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த விவேக், அந்த செய்தியில் கூறியபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால், அது இப்போது பெரிய விஷயமில்லை.
அந்த செய்தியில் ஒரு டெக்னிக்கல் பிழை உள்ளது. அஜித் எனக்கு பரிசாக கொடுத்தது ரோலக்ஸ் அல்ல, செய்கே (Seiko) வாட்ச் என்று கூறியுள்ளார். அஜித்தின் சிறந்த மனிதர் என்பதற்கு இதுவும் சான்று என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தின் வியாபாரமும் தொடங்கியுள்ளது. பிரபல நடிகரும், தயாரிப்பாளர், விநியோகஸ்தருமான அருண்பாண்டியன் ஒரு மிகப்பெரிய தொகைக்கு வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார்
. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். மறைந்த இயக்குனர் கே.சுபாஷின் கதைக்கு பிரபுதேவா திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். பிரபுதேவாவின் ரீ-என்ட்ரி, மூன்று முன்னணி நடிகர்கள், படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆகியவை இப்படத்தின் மீதாக எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு வாங்கி கொடுத்து இருப்பார். தமிழக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1,570 கோப்புகளில் கையெழுத்து இட்டதாக கூறப்பட்டுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். என்ன திட்டம் என்று தெரியாமலேயே காட்டுகிற இடத்தில் எல்லாம் கையெழுத்து போடுகிற இடத்தில் அவர் இருக்கிறார் என நம்புகிறேன்.

எந்த கோப்புகளில் கையெழுத்து போட்டார் என்பதை மக்களுக்கு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இவ்வளவு வேகமாக கையெழுத்து போட வேண்டிய அவசியம் என்ன? திட்டங்கள் நடக்கிறதோ இல்லையோ நிதி ஒதுக்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் பிடியில் இருக்கும் ஆட்சியில் இருக்கும் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுக்கு நிதியை பங்கீட்டு கொள்வதற்காக கோப்புகள் விரைவாக கையெழுத்திட்டு அனுப்பப்படுவதாக தகவல்கள் கிடைத்து இருக்கிறது.
இவ்வளவு வேகமாக கையெழுத்து போடும் அவர் இன்னும் 2 கையெழுத்து போட வேண்டும். முதல் கையெழுத்து 3 அல்லது 6 மாதத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை ஒழிப்போம் என்கிற கையெழுத்து. இரண்டாவதாக, கடல்நீரை சுத்தப்படுத்தி பயன்படுத்தும் நீராக மாற்றுவதற்கான கையெழுத்தை போட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து, பாஹுபலி 2 க்கு கிடைத்திருக்ககூடிய இந்த இமாலய வெற்றிக்குத் தன்னுடைய ரசிகர்களுக்கும், இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி அவர்களுக்கும் பிரபாஸ் தன்னுடைய நன்றியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது "மகத்தான இந்த தருணத்தில் என்னுடைய ஒவ்வொரு ரசிகரையும் ஆரத்தழுவி மகிழ்கிறேன். அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பில் திளைத்து நெகிழ்ந்து போய் இருக்கிறேன். நான் சிரமம் கொண்டு எடுத்த அத்தனை முயற்சிகளும் படக்காட்சிகளில் சிறப்பாக அமைந்து, இந்தியா மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள உங்களுடைய பேரன்பை பெற்று தந்துள்ளது.
மேலும் இத்தனைப் பிரம்மாண்டமான ஒரு வரலாற்றுக் காவியத்தில், என் மீது நம்பிக்கை வைத்து, என்னையும் இந்த பயணத்தில் இணைத்துக்கொண்டு, எனக்கொரு முக்கிய பங்களித்து, என்னை ஊக்குவித்து சிறப்புற இயக்கி, இந்த மாபெரும் வெற்றிக்கு வித்திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி அவர்களுக்கு மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தனது இளமைப் பருவம் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:-
"1963-ம் ஆண்டில், பம்பாயிலும் (தற்போதைய மும்பை) ஆமதாபாத்திலும் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்து, இசை நிகழ்ச்சிகள்
நடத்தினோம்.அப்போது, பம்பாய் நகரில் எங்கள் காலடி படாத இடமே கிடையாது. சிட்டி பஸ், டிராம், மாடி பஸ், அதிவேக ரெயில் - இவற்றில் எல்லாம் பயணம் செய்திருக்கிறோம். இப்போதுள்ள நெரிசல் அப்போது கிடையாது.
மலபார் ஹில்ஸ் போகும் வழியில், லதா மங்கேஷ்கர் இருந்த வீட்டை வேடிக்கை பார்த்துக்கொண்டே போவோம்.
மெரின் டிரைவ், மெயின் டவுன் ஏரியா, தாதர், மாதுங்கா என்று எந்த இடம் போனாலும், ஒரே ஒரு பாடல் இடைவிடாமல் கேட்டுக்கொண்டிருந்தது. அது, "தாஜ்மகால்'' படத்தில், மதன் மோகன் இசை அமைத்த "ஜொவாதாக்கியாவோ நிபானா படேகா'' என்ற பாடல்தான். மகமத் ரபியும், லதா மங்கேஷ்கரும் பாடிய இந்தப்பாடல் எங்களை கிறங்க வைத்தது.
தாராவியில் ஒரு தமிழ் நாடகத்திற்கும் இசை அமைத்தோம்.
தாராவிக்குள் நுழையும்போதே கருவாடு வாடையும், மீன் நாற்றமும், வாந்தி வருகிற அளவுக்கு இருந்தன.
இந்தப் பகுதியிலா தமிழர்கள் வாழ்கிறார்கள்! நìனைக்கும்போதே நெஞ்சம் பதைத்தது.
"விதியே, விதியே!
தமிழ்ச் சாதியை
என் செய்ய நினைத்தாய்
எனக் குரையாயோ?''
- என்ற பாரதியின் பாடல் இதயத்தில் எதிரொலித்தது.
தாராவியில் ஒருநாள் இருந்தோம். அவர்களோடுதான் உண்டோம்; உறங்கினோம்.
பிறகு, ஆமதாபாத்தில் இரண்டு நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக ஒரு வாரம் தங்கினோம். மீண்டும் பம்பாய் வந்து, சென்னை மதுரை வழியாக பண்ணைபுரம் வந்தோம்.
1964-ல் பிரதமர் நேரு மறைந்தபோது, "சீரிய நெற்றி எங்கே?'' என்று தொடங்கும் இரங்கல் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுத, அதை சீரணி அரங்கில் சீர்காழி கோவிந்தராஜன் பாடினார்.
இந்தச் செய்தியுடன், அந்த முழுப்பாடலையும் "தினத்தந்தி'' வெளியிட்டிருந்தது.
இந்த சமயத்தில் நாங்கள் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காகச் சென்றிருந்தோம். நேரு மறைவு காரணமாக, திருத்துறைப்பூண்டி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
அடுத்த நாள் வேதாரண்யத்தில் நிகழ்ச்சி. அதை நடத்துவதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, கண்ணதாசன் எழுதியிருந்த பாடலை இசை அமைத்துப் பார்ப்போம் என்று எண்ணினேன். சீர்காழி கோவிந்தராஜன் அதை எப்படி பாடியிருப்பார் என்று எனக்குத் தெரியாது. நான் என் பாணியில் இசை அமைத்துப் பாடினேன்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த அண்ணன், பிரதமர் நேருவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேதாரண்யம் நிகழ்ச்சியை நடத்தி விடலாம் என்று கூறினார்கள்.
அதுமட்டுமல்ல, நிகழ்ச்சியில் என்னை பாடவும் வைத்துவிட்டார்கள்.
கச்சேரிகளில், பாடல் முடிந்தவுடன் அடுத்த பாடலுக்கு இடையே ஒரு சினிமா பாடல்களை வாசிப்பது வழக்கம். அதற்கெல்லாம் சில சமயம் கைதட்டல் கிடைக்கும். ஆரம்ப காலத்தில் இதற்காகப் பெருமைப்பட்டுக்கொண்ட நான், பிறகு, "இந்தக் கைதட்டல்கள் எல்லாம், பாட்டை யார் கம்போஸ் செய்தார்களோ அவர்களுக்கு அல்லவா போய்ச்சேர வேண்டும்'' என்று எண்ணத் தொடங்கினேன்.
நாங்கள் இப்படிப் பாடுவதில் அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாடல்கள்தான் அதிகமாக இருக்கும். என்னுடைய பாடல்களுக்கு மக்களிடம் என்றைக்கு அதிகம் கைதட்டல் கிடைக்கிறதோ அன்றைக்குத்தான் நான் பெருமையோ, கர்வமோ கொள்ள முடியும் என்ற திட்டவட்டமான முடிவுக்கு என் மனம் வந்துவிட்டது. எனவே, சினிமா பாடல்களுக்கு கைதட்டல் ஒலி எழும்போது, அதோடு சொந்தம் கொண்டாடாமல்,
தனித்திருந்தேன்.அண்ணன் எம்.எஸ்.வி. பாடல்களுக்கு கைதட்டல்கள் விழும்போதெல்லாம் அவருடைய பாடல்களை மனம் ஆராயத் தொடங்கியது. அவருடைய ஆற்றல் என்னை வியக்க வைத்தது.
அடேயப்பா! எவ்வளவு வித்தியாசமான - ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாத ட்ïன்கள்? அதோடு இணைந்து வரும் அருமையான மிïசிக்!
நாளுக்கு நாள் அண்ணன் எம்.எஸ்.வி. மீது மதிப்பும், மரியாதையும் கூடின.
சிறு வயதிலேயே எங்கள் உள்ளங்களை எல்லாம் கொள்ளை கொண்ட சி.ஆர்.சுப்பராமனிடம் எம்.எஸ்.வி. உதவியாளராக இருந்தார் என்றும், உடுமலை நாராயணகவி, பாபநாசம் சிவன் முதலிய மேதைகளிடம் பாடல் எழுதி வாங்கும் பணியில் இருந்தார் என்றும், எம்.எஸ்.வி. அவர்கள் பத்திரிகைகளுக்கு அளித்திருந்த பேட்டிகளின் வாயிலாக அறிந்திருந்தேன்.
`இதுபோன்ற சந்தர்ப்பங்கள் எதிர்காலத்தில் நமக்கு அமையுமா? இவர்களை நேரில் காணும் வாய்ப்பாவது கிட்டுமா?'' என்று என் உள்ளம் அலைமோதும்.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
ஸ்ரீ அங்காளம்மன் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘மங்களாபுரம்’. யாகவன், சிவகுரு, இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் அஜெய்ரத்னம், டெல்லி கணேஷ், பெஞ்சமின், போண்டா மணி, பேபிதர்ஷினி, பேபிமகதி உள்பட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-திருஞான சம்மந்தம், இசை-கார்த்திகேயன் மூர்த்தி, பாடல்கள்- கோ.சேஷா, கலை- சின்னா,நடனம்- எஸ்.எல்.பாலாஜி, ராம்முருகேஷ் ,எடிட்டிங் - ராஜ் கீர்த்தி, வசனம் -சிவா, கதை-ஸ்ரீ அங்காளம்மன் மூவீஸ். திரைக்கதை, இயக்கம்- ஆர்.கோபால், இணை தயாரிப்பு- சித்ராதேவி செழியன், தயாரிப்பு- புதுவை.ஜி.கோபாலன்சாமி

படம் பற்றி கூறிய இயக்குனர் ....
“புதிதாக திருமணம் செய்து கொண்ட ஒரு இளம் தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஜமீன் பங்களாவில் குடியேறுகிறார்கள். அவர்களை ஒன்று சேர விடாமல் ஒரு அமானுஷ்ய சக்தி தடுக்கிறது.
அந்த சக்தி யார் ? வென்றது இளம் காதலர்களா ? அமானுஷ்ய சக்தியா? என்பது கதை. மது என்கிற அரக்கன் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது என்பதுதான் படத்தின் மையக் கரு” என்றார். ‘மங்களபுரம்’ இந்த மாதம் வெளியாகிறது.
‘பாகுபலி 2’ படத்தின் வசூலைப் பற்றி இன்னும் சில நாட்களுக்குப் பேசிக்கொண்டே இருக்கலாம். இப்படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதற்கு என்ன காரணம் என்பதை யோசிக்கவேண்டும். பிரம்மாண்டமான ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு பேசும் அளவுக்கு இப்படத்தின் உருவாக்கம் அமைந்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம். தமிழில் உருவான பல படங்களைப் பார்த்துவிட்டு அரங்குகள் மற்றும் கிராபிக்ஸ் உள்ளிட்ட விஷயங்களை இன் னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என நினைப்போம். ‘பாகுபலி 2’ படத்தைப் பொறுத்தவரை அப்படி ஒரு எண்ணமே தோன்றவில்லை.

திருட்டு விசிடி, கேபிள் டிவி உள்ளிட்ட பல விஷயங்கள் இருந் தாலும் இதன் பிரம்மாண்டத்தை அனைவருமே திரையரங்குக்கு சென்று பார்க்க விரும்பியுள்ளார்கள். படம் பார்ப்பவர்களை அப்படியே மகிழ்மதி நாட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளார்கள்.
ஒவ்வொரு காட்சியையும் பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என நினைத்து உருவாக்கியுள்ளனர். திருட்டு விசிடியில் படத்தைப் பார்த்தவர்கள்கூட அதன் பிரம்மாண்டத்தைக் காண திரையரங்குக்குச் செல்கிறார்கள்.

மற்றொரு முக்கியமான விஷயம், இக்கதையில் பேண்டஸி கிடையாது. இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடிய படமாக உருவாகியிருக்கிறது. அதேநேரத்தில், அனைத்து மக்களும் ரசிக்கும்படியாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
காதல், காமெடி, பழிவாங்கல், நம்பிக்கை துரோகம் என அனைத்தும் சேர்ந்த கலவையாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பையும் மீறி இப்படம் அமைந்தது. ஆகையால்தான் ரசிகர்களிடையே இப்படத்துக்கு இந்த அளவு வரவேற்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘பாகுபலி-2’ படம் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலேயே இப்படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளத்திலும் வெளியானது. இதுகுறித்து, நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது:- சமீபத்தில் வெளியான 'பாகுபலி-2' திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதேபோல் புது படங்கள் அனைத்தும் அந்த இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், ‘பாகுபலி-2’ படம் இணையதளத்தில் வெளியான பிறகும்கூட இதுவரையில் இந்திய சினிமாவில் எந்தவொரு சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.








