என் மலர்

  நீங்கள் தேடியது "Chris Pratt"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹாலிவுட் நடிகரும், திரைப்பட இயக்குனருமான அர்னால்டு மகள் கேதரின், ஹாலிவுட் நடிகரான கிறிஸ் பிராட், இவர்களின் காதல், திருமணத்தில் முடிய உள்ளது. #Arnold #ChrisPratt #Katherine
  வாஷிங்டன்:

  ஹாலிவுட் நடிகர், திரைப்பட இயக்குனர், தொழில் அதிபர், அமெரிக்க அரசியல்வாதி, கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னர் என பல முகங்களை கொண்டவர் அர்னால்டு. அவரது மகள் கேதரின் (வயது 29). இவர் ஒரு எழுத்தாளர்.

  இவர் ஹாலிவுட் நடிகரான கிறிஸ் பிராட்டை (39) கடந்த ஓராண்டு காலமாக காதலித்து வந்தார். இப்போது இவர்களின் காதல், திருமணத்தில் முடிய உள்ளது.

  இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இதை சமூக வலைத்தளம் ஒன்றில் கிறிஸ் பிராட் தெரிவித்துள்ளார். அதில் அவர், “இனிமையான கேதரின், உன்னை மணந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். உன்னுடன் வாழப்போவதில் பெருமை அடைகிறேன். நாம் நமது வாழ்க்கையை இங்கிருந்து தொடங்கலாம்” என கூறி உள்ளார். நிச்சயதார்த்தம் தொடர்பான படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

  இந்த கிறிஸ் பிராட் ஏற்கனவே நடிகை அன்னா பாரிசை காதலித்து மணந்து, அந்த ஜோடிக்கு ஜேக் என்று 7 வயதில் மகன் இருக்கிறான். இந்த நிலையில் கிறிஸ் பிராட், அன்னா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மார்வல் ஸ்டூடியோஸ் சார்பில் பல சூப்பர் ஹீரோக்கள் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் உலக வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. #AvengersInfinityWar
  உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகி திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

  உலகம் முழுக்க ரசிகர்களை ஈர்த்துள்ள இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 2 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்து வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தற்போது வரை இந்த படம் 2 பில்லியன் டாலர்கள் (அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் 13 ஆயிரத்து 5,17 கோடியை) வசூலித்துள்ளது. 

  வட அமெரிக்காவில் மட்டும் இந்த படம் 655 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. தவிர்த்து உலகம் முழுக்க 1.346 பில்லியன் டாலர்கள் வசூலாகியுள்ளது. 

  உலகளவில் அதிகம் வசூலித்த படங்கள் பட்டியலில் ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ நான்காவது இடத்தில் உள்ளது.   ஜேம்ஸ் கேமரானின் அவதார் (2.78 பில்லியன் டாலர்) மற்றும் டைட்டானிக் (2.18 பில்லியன் டாலர்) முதல் இரண்டு இடங்களை தக்கவைத்துள்ளன. ஸ்டார்வார்ஸ் த ஃபோர்ஸ் அவாகென்ஸ் படம் வசூலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. விரைவில் இந்த படங்களில் வசூல் சாதனைகளை ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

  மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பல சூப்பர் ஹீரோக்களும், தனோஸ் என்ற பயங்கரமான வில்லனும் நடித்துள்ளனர். மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக இந்த படம் வந்துள்ளது.

  இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இரண்டாவது பாகம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. #AvengersInfinityWar #AvengersInfinity #ThanosDemandsYourSilence

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜே.ஏ.பயோனா இயக்கத்தில் கிறிஸ் பிராட் - ப்ரைஸ் டல்லாஸ் ஹோவார்டு நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜூராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம்' படத்தின் விமர்சனம். #JurassicWorldFallenKingdom #ChrisPratt
  கடந்த பாகத்தில் இஸ்லா நுப்லர் தீவில் ஏற்படும் மரபணு மாற்ற டைனோசர்களால் ஏற்படும் விபத்தால் அங்குள்ள ஜூராசிக் பார்க்க மூடப்படுகிறது. இருப்பினும் பல வகையான மரபணு மாற்றப்பட்ட டைனோசர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், அந்த தீவில் இருக்கும் எரிமலைகள் வெடித்துச் சிதறவிருப்பதாக அரசுக்கு தகவல் கிடைக்க, அங்கிருக்கும் டைனோசர்களை காப்பற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. 

  டைனோசர்களால் மக்களுக்கு பாதிப்பு தான் ஏற்படும் என்பதால் அவற்றை காப்பாற்றுவதற்கான முயற்சி கைவிடப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் விஞ்ஞானியின் சொத்தை பராமரித்து வரும் ரபே ஸ்பால், அங்கிருக்கும் டைனோசர்களில் மனிதர்களின் பேச்சைக் கேட்டு நடக்கும் ஊதா நிற டைனோசரை கைப்பற்றி வர நினைக்கிறார். அதற்காக அழிந்து வரும் மிருகங்களை காப்பாற்றி வரும் நாயகி ப்ரைஸ் டல்லாஸ் ஹாவர்டின் உதவியை ரபே ஸ்பால் கேட்கிறார். அந்த டைனோசர்களை காப்பாற்றி வேறு ஒரு தீவில் உயிர்வாழ வைக்க உதவி வேண்டும் என்று கேட்பதால், நாயகி அதற்கு சம்மதிக்கிறார்.  பின்னர், சிறிய வயதில் அந்த ஊதா நிற டைனோசரை வளர்த்த நாயகன் கிறிஸ் பிராட்டும் இந்த குழுவில் இணைகிறார். அவர்களுடன் ஒரு ஹேக்கர் மற்றும் ஒரு படையே அந்த தீவுக்கு செல்கிறது. கிறிஸ் பிராட் தான் வளர்த்த டைனோசரை தேடி கண்டுபிடிக்கிறார். அதனுடன் அன்பை பரிமாற நினைக்கும் போது, அவருடன் வந்தவர்கள் துப்பாக்கி மூலம் அந்த டைனோசரை குறிவைத்து மயக்க மருந்தை செலுத்துகின்றனர். மேலும் கிறிஸ் பிராட்டையும் அடித்துவிட்டு, நாயகியையும் ஏமாற்றி விட்டு டைனோசரை அங்கிருந்து கடத்திச் செல்கின்றனர். 

  அத்துடன் அந்த தீவில் இருந்த டைனோசர்களின் மரபணுக்களையும் சேகரித்தும் செல்கின்றனர். அந்த மரபணுவை வைத்து புதிய கொடூர டைனோசர்களை உருவாக்கி போருக்கு பயன்படுத்த நினைக்கிறார் ரபே ஸ்பால்.   கடைசியில் அந்த தீவில் மாட்டிக் கொண்ட கிறிஸ் பிராட் தனது செல்ல டைனோசரை காப்பாற்றினாரா? அதன் மூலம் உருவாக்கப்படும் கொடூர டைனோசர்களை அழித்தாரா? டைனோசர்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? அதன் முடிவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. 

  கிறிஸ் பிராட் அவருக்குண்டான காமெடி கலந்த பேச்சால் ரசிக்க வைக்கிறார். ப்ரைஸ் டல்லாஸ் ஹாவர்டு, ஜெஃப் கோல்ப்ளம், ஆண்ட்ரூ ஓக்கேலோ, பி.டி.வாங், டேனியல் பினேடா, டேவிட் ஓலவாலே, கார்ல் பாரர், ரபே ஸ்பால் என அனைத்து கதாபாத்திரங்களும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.   கடந்த பாகமான ஜூராசிக் வேர்ட்டு சக்கை போடு போட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் ஜூராசிக் வேர்ட்டு ஃபாலன் கிங்டம், டைனோசர்களை போருக்கு பயன்படுத்த நினைக்கும் ஒருவரின் முயற்சி, அதனால் ஏற்படும் பிரச்சனையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாகி இருக்கிறது. குட்டி டைனோசர் முதல் பெரிய டைனோசர் வரை, கிறிஸ் பிராட் மற்றும் அவர் வளர்த்த ப்ளூ டைனோசர், கொடூரமான மஞ்சள் வரியுடைய டைனோசர் என ஒவ்வொன்றுக்குமான வித்தியாசத்தை காட்டி, அதன் அட்டாகசங்களை ரசிக்க வைத்ததுடன் வாய் பிளக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் ஜே.ஏ.பயோனா. கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாகவந்திருக்கிறது. தமிழ் டப்பிங்கிலும் அசத்தியிருக்கிறார்கள். அடுத்த பாகம் வருதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். 

  மிச்செல் கியாசினோவின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ஆஸ்கார் ஃபாராவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அற்புதமாக வந்திருக்கிறது. 

  மொத்தத்தில் `ஜூராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம்' மிரட்டல். #JurassicWorldFallenKingdom #ChrisPratt

  ×