search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jeff Goldblum"

    ஜே.ஏ.பயோனா இயக்கத்தில் கிறிஸ் பிராட் - ப்ரைஸ் டல்லாஸ் ஹோவார்டு நடிப்பில் வெளியாகி இருக்கும் `ஜூராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம்' படத்தின் விமர்சனம். #JurassicWorldFallenKingdom #ChrisPratt
    கடந்த பாகத்தில் இஸ்லா நுப்லர் தீவில் ஏற்படும் மரபணு மாற்ற டைனோசர்களால் ஏற்படும் விபத்தால் அங்குள்ள ஜூராசிக் பார்க்க மூடப்படுகிறது. இருப்பினும் பல வகையான மரபணு மாற்றப்பட்ட டைனோசர்கள் அங்கு வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், அந்த தீவில் இருக்கும் எரிமலைகள் வெடித்துச் சிதறவிருப்பதாக அரசுக்கு தகவல் கிடைக்க, அங்கிருக்கும் டைனோசர்களை காப்பற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது. 

    டைனோசர்களால் மக்களுக்கு பாதிப்பு தான் ஏற்படும் என்பதால் அவற்றை காப்பாற்றுவதற்கான முயற்சி கைவிடப்படுகிறது. இந்த நிலையில், முன்னாள் விஞ்ஞானியின் சொத்தை பராமரித்து வரும் ரபே ஸ்பால், அங்கிருக்கும் டைனோசர்களில் மனிதர்களின் பேச்சைக் கேட்டு நடக்கும் ஊதா நிற டைனோசரை கைப்பற்றி வர நினைக்கிறார். அதற்காக அழிந்து வரும் மிருகங்களை காப்பாற்றி வரும் நாயகி ப்ரைஸ் டல்லாஸ் ஹாவர்டின் உதவியை ரபே ஸ்பால் கேட்கிறார். அந்த டைனோசர்களை காப்பாற்றி வேறு ஒரு தீவில் உயிர்வாழ வைக்க உதவி வேண்டும் என்று கேட்பதால், நாயகி அதற்கு சம்மதிக்கிறார்.



    பின்னர், சிறிய வயதில் அந்த ஊதா நிற டைனோசரை வளர்த்த நாயகன் கிறிஸ் பிராட்டும் இந்த குழுவில் இணைகிறார். அவர்களுடன் ஒரு ஹேக்கர் மற்றும் ஒரு படையே அந்த தீவுக்கு செல்கிறது. கிறிஸ் பிராட் தான் வளர்த்த டைனோசரை தேடி கண்டுபிடிக்கிறார். அதனுடன் அன்பை பரிமாற நினைக்கும் போது, அவருடன் வந்தவர்கள் துப்பாக்கி மூலம் அந்த டைனோசரை குறிவைத்து மயக்க மருந்தை செலுத்துகின்றனர். மேலும் கிறிஸ் பிராட்டையும் அடித்துவிட்டு, நாயகியையும் ஏமாற்றி விட்டு டைனோசரை அங்கிருந்து கடத்திச் செல்கின்றனர். 

    அத்துடன் அந்த தீவில் இருந்த டைனோசர்களின் மரபணுக்களையும் சேகரித்தும் செல்கின்றனர். அந்த மரபணுவை வைத்து புதிய கொடூர டைனோசர்களை உருவாக்கி போருக்கு பயன்படுத்த நினைக்கிறார் ரபே ஸ்பால். 



    கடைசியில் அந்த தீவில் மாட்டிக் கொண்ட கிறிஸ் பிராட் தனது செல்ல டைனோசரை காப்பாற்றினாரா? அதன் மூலம் உருவாக்கப்படும் கொடூர டைனோசர்களை அழித்தாரா? டைனோசர்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? அதன் முடிவு என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. 

    கிறிஸ் பிராட் அவருக்குண்டான காமெடி கலந்த பேச்சால் ரசிக்க வைக்கிறார். ப்ரைஸ் டல்லாஸ் ஹாவர்டு, ஜெஃப் கோல்ப்ளம், ஆண்ட்ரூ ஓக்கேலோ, பி.டி.வாங், டேனியல் பினேடா, டேவிட் ஓலவாலே, கார்ல் பாரர், ரபே ஸ்பால் என அனைத்து கதாபாத்திரங்களும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். 



    கடந்த பாகமான ஜூராசிக் வேர்ட்டு சக்கை போடு போட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் ஜூராசிக் வேர்ட்டு ஃபாலன் கிங்டம், டைனோசர்களை போருக்கு பயன்படுத்த நினைக்கும் ஒருவரின் முயற்சி, அதனால் ஏற்படும் பிரச்சனையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாகி இருக்கிறது. குட்டி டைனோசர் முதல் பெரிய டைனோசர் வரை, கிறிஸ் பிராட் மற்றும் அவர் வளர்த்த ப்ளூ டைனோசர், கொடூரமான மஞ்சள் வரியுடைய டைனோசர் என ஒவ்வொன்றுக்குமான வித்தியாசத்தை காட்டி, அதன் அட்டாகசங்களை ரசிக்க வைத்ததுடன் வாய் பிளக்கவும் வைத்திருக்கிறார் இயக்குநர் ஜே.ஏ.பயோனா. கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாகவந்திருக்கிறது. தமிழ் டப்பிங்கிலும் அசத்தியிருக்கிறார்கள். அடுத்த பாகம் வருதையும் உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். 

    மிச்செல் கியாசினோவின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. ஆஸ்கார் ஃபாராவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அற்புதமாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `ஜூராசிக் வேர்ல்டு ஃபாலன் கிங்டம்' மிரட்டல். #JurassicWorldFallenKingdom #ChrisPratt

    ×