என் மலர்
நீங்கள் தேடியது "chris hemsworth"
- மார்வல் வரிசையில் 'தோர்' படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் கிறிஸ் ஹேம்ஸ்வொர்த்.
- இவர் தற்போது சினிமாவில் இருந்து ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹேம்ஸ்வொர்த். இவர் மார்வல் வரிசையில் 'தோர்' படங்களில் நடித்து சூப்பர் ஹீரோவாக உலகம் முழுவதும் புகழ் பெற்றார். ஹாலிவுட் நடிகை எல்சாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை கட்டுக்கோப்பாகவும் வைத்து இருந்தார். கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துக்கு தற்போது 39 வயது ஆகிறது. சில தினங்களுக்கு முன்பு தனக்கு அல்சைமர் எனப்படும் மறதி நோய் பாதிப்பு இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

கிறிஸ் ஹேம்ஸ்வொர்த்
இந்த நிலையில் மறதி நோய் காரணமாக சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுக்கப்போவதாக கிறிஸ் ஹேம்ஸ்வொர்த் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "எனக்கு அல்சமைர் நோய் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மருத்துவ பரிசோதனையில் இது தெரியவந்தது. எனது தாத்தாவுக்கும் இந்த நோய் பாதிப்பு இருந்துள்ளது. எனவே எனக்கும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதில் ஆச்சரியம் இல்லை. எனவே சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்து மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை கழிக்க விரும்புகிறேன்'' என்றார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







