என் மலர்
கமல் நடத்தவிருக்கும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்குபெறும் 15 பேரில் 2 அரசியல்வாதிகளும், 2 கிரிக்கெட் வீரர்களும் அடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உலகமெங்கும் புகழ்பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழிலும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று நடத்தவுள்ளது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் விதிமுறையானது, 15 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் இணைந்து வசிக்க வேண்டும். போன், நாளிதழ், உள்ளிட்ட எந்த உபகரணங்களும் அங்கே இருக்காது. வெளியுலக தொடர்புகளும் இருக்காது. கமல் மட்டுமே அவர்களை அவ்வப்போது வந்து சந்திப்பார். யார் கடைசி வரை அங்கேயே வசிக்கிறார்களோ? அவரே வெற்றியாளர்.

இந்த நிகழ்ச்சிக்காக சென்னையை அடுத்துள்ள ஈவிபி பிலிம்சிட்டியில் பிரம்மாண்ட அரங்கு ஒன்றை அமைக்கிறார்கள். வருகிற ஜுன் 18-ந் தேதியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 8.30 மணிக்கும் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில் இப்போதைக்கு 2 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் 2 அரசியல்வாதிகள் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதைத் தவிர்த்து சில நடிகர்களும், கலையுலகினரும் போட்டியாளர்களாக பங்கேற்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய திரைப்படங்களில் வசூலில் நம்பர்-1 இடத்தை ‘பாகுபலி-2’ படம் பிடித்துள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
இந்திய திரையுலகின் பல்வேறு சரித்திர சாதனைகளை ‘பாகுபலி-2’ படம் மாற்றி எழுதிக் கொண்டிருக்கிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 28-ந் தேதி வெளிவந்த இந்த படம் 3 நாட்களில் ரூ.500 கோடியை வசூலித்து சரித்திர சாதனை படைத்தது.
விரைவில் ரூ.1000 கோடியை எட்டும் என்ற கணிப்பில் அதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்திய படங்களிலேயே அதிக வசூலை எட்டிய படம் என்ற பெருமையை ‘பாகுபலி-2’ 6 நாட்களிலேயே பெற்றுள்ளது.

‘பாகுபலி-2’ வெளியாகி இன்றோடு 6 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இப்படம் ரூ.792 கோடி வசூலித்து இந்தியா திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமீர்கான் நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளிவந்த ‘பிகே’ படம்தான் இதுவரை அதிக வசூலை பெற்ற படம் என்ற பெருமையை கொண்டிருந்தது. அந்த படம் ரூ.743 கோடி வசூலித்திருந்தது.
தற்போது அந்த சாதனையை ‘பாகுபலி-2’ தகர்த்தெறிந்துள்ளது. ‘தங்கல்’, ‘பாகுபலி’, ‘பஜ்ரங்கி பாய்ஜான்’, ‘தூம்-3’ ‘சுல்தான்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ராவை வம்புக்கு இழுத்து நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அது என்ன சர்ச்சை என்பதை கீழே பார்ப்போம்.
பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருவதுண்டு. முன்னதாக பிரதமர் மோடியின் படம் போட்ட ஆடை அணிந்து அனைவருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தார். இப்போது, அரசியலிலும் நிலைக்காமல், சினிமா மார்க்கெட்டும் இல்லாமல் இருக்கும் இவர், அவ்வப்போது மற்ற நடிகைகளை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறார்.
அந்த வகையில், இவர் இப்போது ஹாலிவுட் வரை பிரபலமாகி இருக்கும் பிரியங்கா சோப்ராவை பற்றி சர்ச்சை கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா ‘மாதம் ஒரு காதலருடன் இருக்கிறார்’ என்று புது சர்ச்சையை கிளப்பி விட்டு இருக்கிறார்.

ராக்கி சாவந்த்தின் இந்த கருத்து பாலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் பிரியங்கா சோப்ரா தரப்பினர் ராக்கி மீது அதிருப்தியில் உள்ளனர்.

கமலின் ‘விஸ்வரூபம்-2’ படக்குழுவினர் அடுத்ததாக அதிரடி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள். அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
கமல் நடிப்பு, இயக்கம் என உருவாகியுள்ள ‘விஸ்வரூபம் 2’ படத்தை ஒருவழியாக இந்த வருடத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளார் கமல். விஸ்வரூபம் படம் எடுக்கும்போதே, அதன் இரண்டாம் பாகத்திற்கும் உண்டான சில காட்சிகளை படமாக்கிவிட்டதாக கமல் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து விஸ்வரூபம் வெளியான பிறகும் மீதமிருக்கும் காட்சிகளை படமாக்கிவிட்டு, இறுதிக்கட்ட பணிகளில் இறங்கினார்.
விஸ்வரூபம்-2 க்கான படப்பிடிப்பு இன்னும் 1 நாட்கள் பாக்கி இருக்கிறதாம். ஆகவே, அந்த 10 நாட்கள் படப்பிடிப்பையும் விரைவில் நடத்தி முடித்துவிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த படப்பிடிப்பை சென்னை ராணுவ அதிகாரிகள் அகாடமியில் வைத்து படமாக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கு முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை இந்த வருடத்தின் இறுதியில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் சுமார் 6,000 பெண்களை பிரபாஸ் நிராகரித்துள்ளதாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது எதற்காக என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூல் இதுவரையில் ரூ.700 கோடியை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விரைவில் ரூ.1000 கோடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ் இந்திய சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். `பாகுபலி-2' படத்திற்காக, அவர் எடுத்துள்ள முயற்சி மற்றும் உழைப்பினை படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. அதுவும் படத்திற்காக 5 வருடங்கள் வேறு எந்த படத்திலும் நடிக்காமல் `பாகுபலி' படத்திற்காக தனது முழு பங்களிப்பையும் அளித்திருந்தார்.

இதனாலேயே பிரபாஸை பலமேடைகளில், பலமுறை ராஜமவுலி பாராட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் `பாகுபலி-2' படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது பிரபாஸ் பணக்கஷ்டத்தில் இருந்ததாகவும் ராஜமௌலி தெரிவித்திருந்தார்.
இது ஒருபுறம் இருக்க, `பாகுபலி' படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, பிரபாஸ் தனது குடும்ப வாழ்க்கையிலும் இருந்து சற்றே ஒதுங்கி இருந்துள்ளார். அதாவது, `பாகுபலி' படத்தில் நடித்த அந்த இடைப்பட்ட காலத்தில் மட்டும் சுமார் 6,000 பேர் பிரபாஸை திருமணம் செய்து கொள்ள தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் `பாகுபலி' படத்தில் நடிக்கும் ஒரே காரணத்திற்காக அனைத்து பெண்களையும் பிரபாஸ் நிராகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரகணம் படவிழாவில் இரண்டு விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தியை கீழே பார்ப்போம்.
பிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘கிரகணம்’. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இளன் என்கிற இளம் இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.
கிருஷ்ணா, கயல் சந்திரன் என இரண்டு ஹீரோக்கள். கதாநாயகியாக நந்தினி என்கிற புதுமுகம் நடித்துள்ளார். மற்றும் கருணாஸ், ஜெயபிரகாஷ், கருணாகரன், கும்கி அஸ்வின், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு இசையமைத்த சுந்தர மூர்த்தி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணி படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.. இதை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடைபெற்றறது. படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சங்க செயலாளர் கதிரேசன், இயக்குனர் எஸ். ஆர்.பிரபாகரன், கே பிலிம்ஸ் நிறுவனர் சேரன் மற்றும் ராஜராஜன், நடிகர் ஆரி, ‘பட்டதாரி’ புகழ் அபி சரவணன், 'அசத்தப்போவது யாரு’ இயக்குனர் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்..

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் டில்லியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தியபோது தற்கொலைக்கு முயன்ற இரண்டு விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இந்த விழாவில் படத்தயாரிப்பாளர் சார்பாக ஒரு கணிசமான நிதி உதவி வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அபிசரவணன் டில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் இந்த விவசாயிகளுடன் சில நாட்கள் கலந்துகொண்டு, அந்த நட்பின், உணர்வின் காரணமாக தற்கொலைக்கு முயன்ற இந்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்திற்கு இந்த நிதி உதவி கிடைக்க இந்த ‘கிரகணம்’ படக்குழுவினர் மூலமாக வழிவகை செய்துள்ளார்.
இந்த விழாவில் பேசிய அபி சரவணனும் ஆரியும் விவசாயிகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார்கள்.

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் நடத்திவரும் போராட்டத்தை வலியுறுத்தி ‘திறப்பு விழா’ படம் உருவாகியிருக்கிறது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
இன்று ‘டாஸ்மாக்’ எதிராக தமிழகம் முழுவதும் நடந்து வரும் மக்கள் போராட்டத்தை திரைக்கதையாக்கி, காதல் காட்சிகளுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்து ஜனரஞ்சக ‘திறப்பு விழா’ என்ற படமாக உருவாக்கியுள்ளனர். இந்த படத்தை டைரக்டர் ஹரியிடம் ‘வேங்கை’, ‘சிங்கம்’, ‘பூஜை’ போன்ற படங்களில் அசோஸியேட்டாக பணியாற்றிய கே.ஜி.வீரமணி என்பவர் இயக்கியிருக்கிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்புகள் விருதாச்சலம், நெய்வேலி, கல்பாக்கம், சென்னை போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது. எடிட்டிங், டப்பிங், மிக்ஸிங் வேலைகளும் மும்முரமாக நடந்து முடிவடைந்திருக்கிறது. இந்தப்படத்தை இம்மாதம் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகிறார்கள்.

இதில் புதுமுக நடிகர் ஜெயஆனந்த் கதாநாயகனாக நடிக்க பல படங்களில் கதாநாயகியாக நடித்துவரும் ரஹானா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மனோபாலா, ஜி.எம்.குமார், ‘பசங்க’ சிவக்குமார், ‘ரோபோ’ சங்கர், சூப்பர் குட் லட்சுமணன், சிசர் மனோகர், ‘நாதஸ்வரம்’ முனீஸ், கவிதா பாலாஜி, ரெங்க நாயகி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ஆர்.பி.செல்வா, இசை - வசந்த ரமேஷ், பாடல்களை மறைந்த பாடலாசியரியர் நா.முத்துக்குமார் மற்றும் பழநிபாரதி, நந்தலாலா, ச.ஞானக்கரவேல், நிலம் ஆகியோர் எழுதியுள்ளனர். வசந்த ரமேஷ் என்பவர் இசையமைத்திருக்கிறார். ஆர்.பி.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை பூமிகா இன்ப்ராடெவலப்பர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எம்.ஜெரினா பேகம் தயாரித்துள்ளார்.

தனுஷ் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படம் வருகிற மே 14-ந் தேதி தொடங்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்போபம்.
தனுஷ் நடிப்பதற்கு கைவசம் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளன. இருப்பினும் ‘ப.பாண்டி’ என்ற படத்தை இயக்கி, அதிலும் வெற்றி கண்டார். இந்நிலையில், அடுத்ததாக தான் ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் தனுஷ்.
வேலையில்லா பட்டதாரி-2 பாகத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், அடுத்ததாக அவர் ஒப்புக்கொண்ட ஹாலிவுட் படத்தில் நடிக்க ஆயத்தமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 14-ந் தேதி மும்பையில் தொடங்கவிருக்கிறதாம். அதைத் தொடர்ந்து ரோம், பாரீஸ் என பல நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தவுள்ளனர். இப்படத்தின் கதை பிரபல ஆங்கில நாவலை அடிப்படையாக வைத்து உருவாகவிருக்கிறது.

கனடா நாட்டை சேர்ந்த கென் ஸ்காட் என்பவர் இப்படத்தை இயக்கவிருக்கிறார். ரொமான்டிக் காமெடி படமாக உருவாகவுள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகை பெரெனைஸ் சிஜோ என்பவர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பகிர் எனும் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகவிருப்பதாக சொல்லப்படுகிறது.

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் சஸ்பென்ஸ் வெளியாகி உள்ளது. அது என்னவென்னபதை கீழே பார்ப்போம்.
இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் - மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ள படம் `எனை நோக்கி பாயும் தோட்டா'. காதல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை கவுதம் மேனனின் ஒன்ராகா எண்டர்டெயின்ட்மண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் இருந்து "மறுவார்த்தை பேசாதே", "நான் பிழைப்பேனோ" என இரு பாடல்களை வெளியிட்டுள்ள கவுதம் மேனன் படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிவிக்காமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார். படத்தின் டீசரை வெளியிடும் போதும் இசையமைப்பாளர் யார் என்பதை தெரிவிக்காமல் மிஸ்டர்.எக்ஸ் (Mr.X) என்றே குறிப்பிட்டிருந்தார். எனினும் படத்திற்கு தர்புகி சிவா அல்லது லியோன் ஜேம்ஸ் தான் இசையமைத்திருப்பார்கள் என்று இணையதளத்தில் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் `எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடித்துள்ள மற்றொரு நடிகை குறித்த தகவலையும் கவுதம் மேனன் சஸ்பென்ஸாகவே வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. அது வேறு யாருமில்லை நடிகை சுனைனா தான். சுனைனா இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இப்படத்தில் அவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதுதவிர சுனைனா சமுத்திரக்கனி இயக்கத்தில் `தொண்டன்' படம், தெலுங்கில் `பெல்லிக்கி முண்டு பிரேம கதா' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இவ்விரு படங்களும் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.
நடிகர் ராணாவும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளியூர் கோர்ட்டில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் சார்பில் வக்கீல் காந்திமதிநாதன் வள்ளியூர் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார்.
அதில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியபோது மகாபாரதத்தை இழிவுபடுத்தி கருத்துகளை தெரிவித்ததாகவும், எனவே அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி செந்தில்குமார், கமல்ஹாசனை நாளை (வெள்ளிக் கிழமை) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் அந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக விலக்கு அளிக்கும்படி கமல்ஹாசன், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
அந்த மனுவில், ‘யார் மனதையும் புண்படுத்தும்படி கருத்து தெரிவிக்கவில்லை. அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு தான் பேசினேன். இதே சம்பவம் தொடர்பாக கும்பகோணம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அந்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஆனால் வள்ளியூர் கோர்ட்டு நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்தும், வழக்கை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

பிரபல நடிகை பாவனாவின் திருமணம் வருகிற அக்டோபர் மாதம், ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக நடக்கவிருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாவனா அளித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
பிரபல நடிகை பாவனா மலையாளம், தமிழ் உள்பட பல்வேறு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் அவரை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியது. இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட நடிகை பாவனா அதில் இருந்து மீண்டு சினிமாவில் நடிக்க தொடங்கினார்.
மேலும் சினிமா பட தயாரிப்பாளரும், தனது நீண்ட நாள் காதலருமான நவீனை திருமணம் செய்யும் முடிவுக்கும் வந்தார். இதைத் தொடர்ந்து நடிகை பாவனா - நவீன் திருமண நிச்சயதார்த்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகவும் எளிமையாக நடைபெற்றது.

இந்த நிலையில் இவர்கள் திருமணத்தை வருகிற அக்டோபர் மாதம் 27-ந் தேதி திருச்சூரில் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்து உள்ளனர். மேலும் திருமண வரவேற்பை கொச்சியில் நடத்தவும் தீர்மானித்து உள்ளனர்.
தனது திருமணம் பற்றி நடிகை பாவனா கூறியதாவது:-
வருகிற அக்டோபர் மாதம் 27-ந் தேதி எனது திருமணம் சொந்த ஊரான திருச்சூரில் நடைபெற உள்ளது. எனது திருமணத்தில் ஆடம்பரமோ, பிரமாண்டமோ இருக்காது. அதிக விலை உயர்ந்த நகைகளை திருமணத்தன்று அணியவும் எனக்கு விருப்பம் இல்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களை மட்டும் திருமணத்திற்கு அழைக்க உள்ளோம். திரையுலகை சேர்ந்தவர்களில் யார்-யாரை அழைப்பது என்பதை நவீனுடன் கலந்து பேசி முடிவு செய்வேன். திருமணத்துக்கு பிறகு நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். நான் நடிப்பை தொடர்வதில் நவீனுக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ எந்த ஆட்சேபனையும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

மன அழுத்தத்துக்கு தற்கொலை தீர்வு ஆகாது என்று நடிகர் அக்ஷய் குமார் ஆலோசனை தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
தேர்வு பயத்தால் மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் நடிகர் அக்ஷய் குமார் வீடியோ மூலம் ஆலோசனை தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறி இருப்பதாவது:-
நான் சிறுவனாக இருந்தபோது என்னுடைய தந்தை என் அருகே அமர்ந்து, பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறாய்? என்று கேட்டார். அப்போது, எனக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பதாக கூறினேன். தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்தேன். இதைத்தொடர்ந்து, விளையாட்டு, மாடலிங் மற்றும் நடிப்பு என காலங்கள் கடந்துவிட்டன.

என்னுடைய பெற்றோர் மட்டும் எனக்கு ஆதரவாக இல்லை என்றால், தேசிய விருதை வெல்வது நெடுந்தூர கனவாகவே போயிருக்கும். குழந்தைகளின் வாழ்க்கை மீது பெற்றோர் அதிக கவனம் செலுத்துங்கள். மன நோயை மற்ற வியாதியை போல் பாருங்கள்.
இளைஞர்கள் வாழ்க்கையை லேசாக எடுத்து கொள்ள கூடாது. அதன் மதிப்பை உணர வேண்டும். உங்கள் உணர்வுகளை சிதைத்துவிடாதீர்கள். அதனை உங்களுக்கு அன்பானவர்களிடமும், அருகில் இருப்பவர்களிடமும் பகிருங்கள். மன அழுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர தற்கொலை ஒருபோதும் தீர்வு ஆகாது.
இவ்வாறு அக்ஷய் குமார் தெரிவித்தார்.