search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹாலிவுட்"

    • தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது.
    • கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் ரீமேக்.

    மோகன்லால், மீனா ஜோடியாக நடித்த 'திரிஷ்யம்' மலையாள படம் ரூ.5 கோடி செலவில் தயாராகி 2013-ல் திரைக்கு வந்து ரூ.75 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தியது.

    இந்த படம் கமல்ஹாசன், கவுதமி நடிக்க பாபநாசம் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செயப்பட்டது. தெலுங்கு, கன்னடம், இந்தி, சீன மொழிகளிலும் வெளியானது. பின்னர் 'திரிஷ்யம்' படத்தின் இரண்டாம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் வந்து வரவேற்பை பெற்றது.

    திரிஷ்யம்' படத்தின் 3-ம் பாகத்தினை தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து ரீமேக் செய்து ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், திரிஷ்யம் திரைப்படத்தின் 1ம் மற்றும் 2ம் பாகம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுகிறது. ஒரு இந்தியத் திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

    கடந்த ஆண்டு கொரிய மொழியில் இப்படத்தை ரீமேக் செய்வதற்கான உரிமத்தை பனோரமா ஸ்டுடியோஸ் பெற்ற நிலையில், தற்போது கல்ஃப்ஸ்ட்ரீம் பிக்சர்ஸ் உடன் இணைந்து ஹாலிவுட்டிலும் அதனை ரீமேக் செய்ய முன்வந்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆதிபுருஷ் திரைப்படத்தை ஒப்பிட்டால் இதற்கு 6 மடங்கு அதிகம் செலவானது
    • இங்கிலாந்தில் படப்பிடிப்பு நடந்ததால் தயாரிப்பில் 25 சதவீதம் வரி சலுகை கிடைத்தது

    சில வருடங்களாக இந்திய திரைப்படங்கள் உலகெங்கும் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் புதிய உச்சங்களை தொடுகின்றன.

    வசூலை வாரி குவிப்பதில் இந்திய திரைப்படங்கள் சாதனைகள் புரிவதால், அடுத்தடுத்து உருவாக்கப்படும் முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களை தயாரிக்கும் செலவும் பல கோடிகள் அதிகரிப்பதாக திரைப்பட வர்த்தகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    கடந்த வருடம் வெளியான "ஆதிபுருஷ்" திரைப்படம், சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் தயாரானது.


    2015ல், ஹாலிவுட்டில் உருவாகி உலகெங்கும் வெளியான "ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்" (Star Wars: The Force Awakens) எனும் ஆங்கில படம், திரைப்பட வரலாற்றிலேயே மிக அதிக பட்ஜெட்டில் தயாரான திரைப்படம்.

    பிரபல ஹாலிவுட் முன்னணி ஹீரோ ஹாரிசன் ஃபோர்டு (Harrison Ford) கதாநாயகனாக நடித்து, ஜே ஜே அப்ரம்ஸ் (JJ Abrams) இயக்கிய இப்பட செலவு சுமார் ரூ.3000 கோடி ($447 மில்லியன்) மதிப்பை தொட்டது.

    படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ள இயக்குனரும், தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி நிறுவனமும் இணைந்து முடிவெடுத்தனர். எனவே, திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காட்சிகளை இங்கிலாந்தின் பைன்வுட் ஸ்டூடியோவில் படம் பிடித்தனர். இதன் மூலம் 25 சதவீத செலவு தொகை அந்நாட்டில் வரிவிலக்கு மூலம் திரும்ப கிடைத்தது.

    இத்திரைப்படம் $2.07 பில்லியன் வசூல் புரிந்து சாதனை புரிந்தது.

    இப்பட பட்ஜெட், ஆதிபுருஷ் படத்திற்கு ஆன செலவை விட 6 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்
    • அவர்களுக்கு ஆதரவாக ஹாலிவுட் நடிகர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு

    தடையின்றி மக்களை மகிழ்வித்து வரும் ஹாலிவுட் திரையுலகம் ஒரு நீண்ட வேலை நிறுத்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

    குறைந்து வரும் ஊதியம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தாக்கத்தினால் வரும் ஆபத்து ஆகிய காரணங்களுக்காக ஹாலிவுட் திரைப்பட எழுத்தாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தில் இவர்களுடன் கைகோர்க்கும் விதமாக திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்களும் இணையப்போகின்றனர்.

    டாம் க்ரூஸ், ஏஞ்சலினா ஜோலி மற்றும் ஜானி டெப் உள்ளிட்ட முன்னணி திரைப்பட நட்சத்திரங்கள் உட்பட 1,60,000 கலைஞர்களை கொண்ட ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் மற்றும் அமெரிக்க தொலைக்காட்சி மற்றும் வானொலி கலைஞர்கள் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

    வால்ட் டிஸ்னி மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற மிகப்பிரபலமான நிறுவனங்களை உள்ளடக்கிய அலையன்ஸ் ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அமைப்புடன் ஒரு புதிய தொழிலாளர் ஒப்பந்தத்தை எட்டும் முயற்சி தோல்வியடைந்ததால் இந்த அழைப்பு விடப்பட்டிருக்கிறது.

    இந்த வேலைநிறுத்தம் தொழிற்சங்கங்களுடனான தொழிலாளர் ஒப்பந்தங்களின் கீழ் வராத தனியார் திரைப்பட தயாரிப்புகளை தவிர, அமெரிக்காவில் எழுதி உருவாக்கப்படும் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் அனைத்து தயாரிப்புகளையும் கட்டுப்படுத்தும்.

    இதனால் "ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்" (Stranger Things) மற்றும் "தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல்" (The Handmaid's Tale) போன்ற பிரபலமான தொடர்களின் தயாரிப்பு இப்போது நீண்ட தாமதத்தை எதிர்கொள்கிறது. வேலைநிறுத்தம் தொடர்ந்தால், சில முக்கிய திரைப்படங்களின் படப்பிடிப்பு தள்ளிப்போகலாம்.

    அமெரிக்காவில் திரைப்படங்கள் தயாரிப்பதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும் என்பதால் திரையரங்குகளில் தற்போது வெளியிடப்பட உள்ள திரைப்படங்கள் உடனடியாக பாதிக்கப்பட போவதில்லை.

    ஆனால் மார்வெல் நிறுவன தயாரிப்பான பிளேட் (Blade) மற்றும் தண்டர்போல்ட்ஸ் (Thunderbolts) போன்ற எதிர்கால வெளியீடுகள் தாமதமாகும். தொழிலாளர் மோதல்கள் தீர்க்கப்படும் வரை அவை நிறுத்தி வைக்கப்படலாம். வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் விளம்பர நிகழ்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.

    அமேசான் நிறுவனத்தின் பிரைம் வீடியோ மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் (Netflix) போன்ற ஸ்ட்ரீமிங் சேவைகள் எனப்படும் இணையவழி பொழுதுபோக்குகளில் கொரியாவிலும் இந்தியாவிலும் தயாரிக்கப்படும் உள்ளூர் மொழி நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்க முடியும். ஆனால் ஹாலிவுட் தயாரிப்புகள் இடைநிறுத்தப்படும்.

    இது போன்றதொரு வேலைநிறுத்தம் கடைசியாக 1960-ல் ரொனால்டு ரீகன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் ரொனால்டு ரீகன் அமெரிக்க ஜனாதிபதியானார்.

    ×