என் மலர்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய்சேதுபதி, அவரது வெற்றிப்பட இயக்குநருடன் மீண்டும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த இயக்குநர் யார் என்பதை கீழே பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி பாதையை அமைத்து அதில் பயணம் செய்து வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. அவர் நடிப்பில் வெளியான படங்களில், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதை, கதாபாத்திரம் என தேர்வு செய்து நடிக்கும் இவரை "மக்கள் செல்வன்" என்றும் அழைக்கின்றனர்.
சீனு ராமாசாமி இயக்கத்தில் கடந்த 2010-ல் வெளியான `தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருகிறார்.

அவரது நடிப்பில் கடந்த 2015-ல் வெளியான படம் `ஆரஞ்சு மிட்டாய்'. இப்படத்தை பிஜு விஸ்வநாத் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு வசனங்களை எழுதிய விஜய் சேதுபதி, இப்படத்தில் ஒரு 57 வயது முதியவராக நடித்திருந்தார். ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்ற இப்படம், பல்வேறு விருதுகளையும் வென்றது. இந்நிலையில், பிஜு விஸ்வநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் என மூன்றையும் விஜய் சேதுபதியே எழுதவிருப்பதாகவும் படக்குழுவுக்கு நெருங்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி தற்போது, `விக்ரம் வேதா', `கருப்பன்', `96', `அநீதிக்கதைகள்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் `புரியாத புதிர்' படம் தயாராகி ரிலீசாகமல் தொடர்ந்து தள்ளிப்போய் வருகிறது.

ஒரு நடிகை பாடிய பாட்டைக் கேட்டு, இளையராஜா கதறி அழுதார். அவரை பாரதிராஜா தேற்ற முயன்றும் முடியவில்லை.

மதுரையில் நடந்த அந்த நிகழ்ச்சி பற்றி இளையராஜா விவரிக்கிறார்:-
"மதுரையில் சித்திரைத் திருநாள் வந்தால் போதும். மதுரை நகரம் முழுக்க கூட்டம் அலைமோதும். கோவிலில் மட்டுமல்ல, தெருக்களிலும் இதே நிலைதான்.
சித்திரைப் பவுர்ணமியன்று அழகர் ஆற்றில் இறங்கும்போது சுற்றுப்புற ஊர்களில் இருந்து வரும் கூட்டத்தின் எண்ணிக்கை சொல்லி முடியாது. இந்த வைபவம் முடிந்த பவுர்ணமி இரவுகளில், தண்ணீர் இல்லாத வைகை ஆற்று மணல் வெளியில் பாரதி, பாஸ்கர், நான், சுப்பிரமணியன், செல்வராஜ் என ஐவர் குழுவாக விடிய விடிய உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம்.
திருவிழாவையொட்டி தமுக்கம் மைதானத்தில் பொருட்காட்சி நடைபெறும். கச்சேரி இல்லாத நாட்களில் அங்கே சென்று, பொழுதை மகிழ்ச்சியாக கழித்து விட்டு வருவோம். மதுரை ரீகல் தியேட்டரில், ஜெர்ரி லூயிஸ் நடித்த ஆங்கிலப் படம் பார்த்து விட்டு அவரைப் போலவே நடிக்கும் பாஸ்கரை பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். சில சமயம் ஓட்டல்களில் சர்வர்களிடம் பேசும்போது அவராக வேறுவித ஸ்டைலில் நடிப்பார். அதை நாங்கள் ரசிப்போம்.
சில நேரம் பொருட்காட்சியில் பேச்சு சுவாரஸ்யத்தில் நேரம் தாண்டிப் போயிருக்கும். கடைசி பஸ்சை தவறவிட்டு நடந்தே மீனாட்சி நிலையம் ரூமிற்கு வந்ததுண்டு. அந்த நேரத்தில் ரோட்டில் ஆள் நடமாட்டம் இருக்காது. நான், பாஸ்கர், பாரதி மூவரும் சத்தம் போட்டு பேசி சிரித்தபடி, பல சமயங்களில் உரத்த குரலில் பாடிக்கொண்டே நடந்து வருவோம்.
இதில் பாஸ்கர்தான் எங்களுக்கு ஹீரோ. அவரை வேடிக்கை பார்ப்பதுதான் எனக்கும் பாரதிக்கும் பிடித்தமான ஒன்று. ஒருமுறை பஸ் ஸ்டாண்ட் தங்கும் விடுதியில் உள்ள மீனாட்சி நிலையத்தில் தங்கியிருந்தபோது ஒரு பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அந்தப் பெண் ஒரு நடிகை என்பது பிற்பாடுதான் தெரிந்தது.
இந்தியாவிற்கு 'டிவி' வரும்முன் "டிவி'' என்பது எப்படி இருக்கும்? டிவி நிகழ்ச்சிகள் எப்படி ஒளிபரப்பப்படுகிறது என்பதை விளக்க, ஒரு வடநாட்டு கோஷ்டி மதுரை பொருட்காட்சியில் ஸ்டால் போட்டிருந்தது. அதில் ஒரு பெண் மேக்கப்புடன் ஆட, அதைக் கேமிரா படம் பிடிக்க, பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த டிவி ஸ்கிரீனில் அதை எல்லாரும் காணும்படி ஒளிபரப்பினார்கள். இந்த டிவி நடிகைக்கு நாங்கள் தங்கியிருந்த மீனாட்சி நிலையத்தில் ரூம் கொடுத்திருந்தார்கள். அதுவும் எங்கள் ரூமுக்கு அடுத்த ரூம்.
நாங்கள் பகல் வேளையில் ரூமில் பயிற்சிக்காகவும், பொழுது போக்கிற்காகவும் வாசித்து பழகிக்கொண்டிருப்போம். அப்போது சிவாஜி நடித்த "பாவமன்னிப்பு'' படம் ரிலீசான நேரம். ஆதலால் அந்தப் படத்தின் பாடல்களையும் பாடி வாசித்துக் கொண்டிருப்போம்.
இப்படி வாசிக்கிற நேரத்தில் அந்த டிவி பெண்ணும் அடிக்கடி எங்கள் கண்ணில் படும். ஆனால் பேச வேண்டுமென்றோ, பழகவேண்டுமென்றோ எந்தவிதமான எண்ணமும் எங்களில் யாருக்கும் கிடையாது. ஒருமுறை பொருட்காட்சியை சுற்றி விட்டு நான், பாஸ்கர், பாரதி, காமராஜ் (இன்னொரு நண்பர்) என நால்வரும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம். அங்கே புறப்படத் தயார் நிலையில் இருந்த பஸ்தான் கடைசி பஸ் என்று யாரோ சொல்லிவிட, ஓடிப்போய் ஏறிக்கொண்டோம்.
கடைசி வரிசையில் 3 சீட் காலியாக இருந்தது. என்னைத்தவிர மற்ற மூவரும் அதில் உட்கார்ந்து கொண்டார்கள். எனக்காக ஒரு சீட் தேடிப் பார்த்தேன். டிரைவருக்குப் பின் இருந்த சீட்டில் அந்த டிவி பெண் உட்கார்ந்திருக்க, காலியாக இருந்த ஒரேயொரு எதிர் சீட்டில் நான் உட்கார்ந்தேன்.
என்னைப் பார்த்ததும் அந்தப் பெண் அடையாளம் கண்டு கொண்டாள். உடனே பாவமன்னிப்பு படப்பாடலான "அத்தான் என்னத்தான்'' பாடலை மெதுவான குரலில் பாடத் தொடங்கினாள். அந்தப்பெண் பாடகி அல்ல; எனவே, குரல் சாதாரணமாக கீழ் ஸ்தாயியில் ஒலித்தது. அதைக் கேட்ட மாத்திரத்தில் நான் "ஓ'' என்று கதறி அழ ஆரம்பித்தேன். அத்துடன் நில்லாமல், பாஸ்கர், பாரதி இருந்த கடைசி சீட்டுக்கு, அழுதபடி வேகமாக ஓடினேன்.
பஸ்சில் இருந்த எல்லாரும் "என்னவோ ஏதோ'' என்று பார்த்தார்கள். நான் எதற்காக அழுகிறேன் என்பது அந்தப் பெண்ணுக்கும் புரியவில்லை.கேவிக்கேவி அழுதவாறு வந்த என்னை, "ஏய்! என்ன? என்னாச்சு?'' என்று அவர்களும் புரியாமல் கேட்டார்கள். இப்போதும் நான் அழுகையை மட்டும் தொடர, "சொல்லித் தொலையடா'' என்றார் பாஸ்கர், ஆத்திரமாய்.
நான் அந்தப் பெண்ணை சுட்டிக் காட்டினேன். "அதோ அந்த அம்மா பாடுறாங்க'' என்றபடி அழுகையை தொடர்ந்தேன். இப்போது, என் குசும்பு பாரதி, பாஸ்கர் ஆகியோருக்குப் புரிந்து விட்டது. அடக்க முடியாமல் சிரித்தார்கள். "என் டென்ஷன் உங்களுக்கெல்லாம் சிரிப்பாய் போச்சுதா?'' என்று நான் அழுவதற்கு மறுபடியுமாய் குரலை உயர்த்தியபோது, கண்டக்டர் அருகில் வந்தார். என் தோளில் கைபோட்டவர். "அண்ணே! விடுண்ணே'' என்றார்.
என்னுடைய இந்த கிண்டலுக்கு ஆளான அந்தப் பெண்ணுக்கு அப்போது எப்படி இருந்ததோ தெரியாது... திடீரென ஒருநாள் அந்தப் பெண்ணின் படம் நகர வீதிகளில் ஒட்டப்பட்டிருந்த சினிமா போஸ்டர்களில் காணப்பட்டது. படத்தில் அவர் பெயரைப்போட்டு 'கதாநாயகியாக நடிக்கும்' என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள்.
"ஏய்! இது அந்த டெலிவிஷன் பொண்ணுல்ல?'' என்று அதிசயித்தோம். அந்தப்படம் வெளிவந்து அதன் மூலம் பெரிய கதாநாயகியாகிவிட்ட அந்த நடிகையை யாரென்று சொல்ல நான் விரும்பவில்லை.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 64-வது திரைப்பட தேசிய விருதுகளை வழங்கினார். இயக்குநர் ராஜூ முருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் விருதுகளை பெற்றார்.
புதுடெல்லி:
64-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து, சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை சுந்தர் ஐயர் பெற்றனர். சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படம் சார்பாக அதன் இயக்குநர் ராஜூ முருகன் விருதினை பெற்றார்.
தர்மதுரை படத்தின் எந்த பக்கம் பாடலுக்காக வைரமுத்துக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.

தெலுங்கு படமான ஜனதா கேரேஜ்-ல் பணியாற்றியதற்காக நடன இயக்குநர் ராஜூ சுந்தரத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தயாரிப்பாளர் தனஞ்செயன், மோகன்லால் உள்ளிட்ட பலரும் தங்களுக்கான தேசிய விருதினை பெற்றுக் கொண்டனர்.

புலி முருகன் படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் தேசிய விருதினை பெற்றுக் கொண்டார். அதேபோல், இந்தியில் சோனம் கபூர், அக்ஷய் குமார் உள்ளிட்டோரும் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

முன்னதாக, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, ராஜ்வர்த்தன் ரத்தோர் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. இப்படத்தை எழில் இயக்கியுள்ளார். ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே சூரி, லிவிங்ஸ்டன், சாம்ஸ், மன்சூர் அலிகான், வித்யூலேகா ராமன், ரோபோ சங்கர், உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘சரவணன் இருக்க பயமேன்’ படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படம் நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள், நன்றாக இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள் என்று பேசினார்.

சமீபத்தில்தான் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், எந்த படங்களுக்கும் விமர்சனம் கொடுப்பதாக இருந்தால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு மாற்று யோசனையாக நன்றாக இருந்தால் உடனே விமர்சனம் கொடுங்கள், நன்றாக இல்லையென்றால் மூன்று நாட்கள் கழித்து விமர்சனம் கொடுங்கள் என்று உதயநிதி பேசியதை அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள்.
‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தை உதயநிதி தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். வருகிற ஏப்ரல் 12-ந் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.

நடிகை ஒருவர் மீண்டும் சரும பிரச்சினைக்கு ஆளாகியுள்ளாராம். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
சமத்தான நடிகை ரொம்ப நேரம் வெயிலிலோ, அதிக வெளிச்சம் கொண்ட விளக்கு முன்போ நின்றால் சருமப் பிரச்சினை ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார். இப்படி சருமப் பிரச்சினையால் முன்னணி இயக்குனர்களின் படங்களில்கூட இவரால் நடிக்க முடியாமல் போனது.
இப்போது முன்பு எப்போதும் உள்ளதைவிட கடுமையான வெயில் வாட்டி எடுப்பதால் அந்த நடிகைக்கு மீண்டும் சரும பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எப்போதும் பிறந்தநாளை வெளிப்படையாக கொண்டாடும் நடிகை, சமீபத்தில் அவருடைய பிறந்தநாளை ரொம்பவும் அடக்கியே வாசித்தாக சொல்லப்படுகிறது.

விரைவில் இவருக்கு கல்யாணம் வேறு ஆகப்போவதால் தான் கமிட்டான படங்களை இவர் முடித்துக் கொடுப்பாரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனினும், சருமப்பிரச்சினையில் இருந்து மீண்டுவர நடிகை கடுமையாக போராடி வருகிறாராம். தன்னை நம்பி படங்களில் ஒப்பந்தம் செய்த இயக்குனர்களை ஏமாற்றிவிடக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறாராம்.

நடிகை ஸ்ரேயா ‘நரகாசூரன்’ என்ற படத்தில் வில்லியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
‘துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்ததாக ‘நரகாசுரன்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தை கவுதம்மேனனின் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும், கார்த்திக் நரேனின் ‘க்னைட் நாஸ்டால்ஜியா’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அரவிந்த்சாமி இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும், இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என முடிவு செய்யப்பட்டதால், அந்த மாதத்தில் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் திருமணம் நடக்கவிருப்பதால் இப்படத்தில் அவர் விலகிவிட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக இன்னொரு தெலுங்கு நடிகர் ஒருவரை நடிக்கவைக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்களாம்.

இந்நிலையில், இப்படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஸ்ரேயா வில்லியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை கேட்டவுடனே இப்படத்தில் நடிக்க ஸ்ரேயா உடனடியாக சம்மதம் தெரிவித்தாராம்.
மேலும், இப்படத்தில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் மலையாள நடிகர் பிருத்விராஜின் சகோதரர் ஆவார். வரும் ஜுலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் பாகுபலி படத்தின் கனெக்சன் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 28-ந் தேதி வெளிவந்த ‘பாகுபலி-2’ படத்தின் வசூல் இந்திய திரையுலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தின் வெற்றிக்கு மூலகாரணமாக அமைந்தவர் ராஜமௌலியின் அப்பாவும், கதாசிரியருமான விஜயேந்திர பிரசாத் தான். இவருடைய கதையைத்தான் ராஜமௌலி படமாக எடுத்தார்.
இப்படத்தை தொடர்ந்து விஜயேந்திர பிரசாத் தற்போது விஜய் நடிப்பில் அட்லி இயக்கிவரும் புதிய படத்திற்கு கதை எழுதியிருக்கிறார். இந்நிலையில், விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ள கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இப்படத்தை ராஜமௌலியின் முன்னாள் அசோசியேட் இயக்குனர் மகாதேவ் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் கதையை ஏற்கெனவே ராகவா லாரன்சிடம் சொல்லிவிட்டதாகவும், அவரும் கதையை கேட்டுவிட்டு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிப்பார் என்றும் பேசப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி படத்தில் நடித்ததால் நல்ல கதைகள் தன்னை தேடி வருகின்றன என்று ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்திருந்த தன்ஷிகா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த தன்ஷிகாவின் முழு பேட்டியை கீழே பார்ப்போம்.
‘தன்ஷிகா’ நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘எங்க அம்மா ராணி’. இதில் 2 குழந்தைகளின் அம்மாவாக தன்ஷிகா நடிக்கிறார். இதுபற்றி தன்ஷிகாவிடம் கேட்டபோது...
“இந்த படத்தில் நடிக்க சிபாரிசு செய்தவர் இயக்குனர் சமுத்திரக்கனி. கதை கேட்டேன், பிடித்தது. இளையராஜா இசை என்றார்கள். நடிக்க ஒப்புக் கொண்டேன். மலேசியாவில் கதை நடக்கிறது. 2 குழந்தைகளின் அம்மாவாக எப்படி வாழ்க்கையை சமாளிக்கிறேன் என்பது கதை. படம் நன்றாக வந்திருக்கிறது.
‘கபாலி’யில் குட்டையாக முடிவெட்டி கேங்ஸ்டராக வந்தேன். ரஜினி சார் படத்தில் நடித்த பிறகு வித்தியாசமான கதைகள் வருகின்றன. நானும் சந்தோஷமாக ஏற்கிறேன். ‘எங்க அம்மா ராணி’ படத்தின் கிளைமாக்ஸ் அருமையாக இருக்கும். நல்ல கதைகள் கிடைத்தால் அம்மா வேடத்தில் நடிக்க ஆட்சேபனை இல்லை.

அடுத்து ‘காலக்கூத்து’ படத்தில் `மெட்ராஸ்' கலையரசன் ஜோடியாக கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். சிருஷ்டி டாங்கே மற்றொரு ஜோடி. இன்னொரு படம் ‘விழித்திரு’. இதில் சென்னை தமிழ் பேசும் ஏழை பெண்ணாக நடிக்கிறேன். மீரா கதிரவன் இயக்கும் இந்த படத்தில் எனது நடிப்பை பார்த்து வசந்தபாலன், சீனுராமசாமி போன்ற இயக்குனர்கள் பாராட்டினார்கள். அது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது. இது தவிர ‘உரு’ என்ற சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கிறேன். தமிழ், மலையாளத்தில் உருவாகும் ‘சோலோ’ படத்தில் கண் பார்வையற்ற டான்சராக வருகிறேன். அடுத்து கல்யாண் இயக்கும் ‘கூத்தாடி’ படத்திலும் நடிக்கிறேன். இவை தவிர தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கிறேன்” என்றார்.

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பாகுபலி-2’ படம் ஜப்பானில் டப் செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி-2’ கடந்த வாரம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இதுவரை இந்திய சினிமாவில் எந்தவொரு படத்திற்கும் கிடைக்காத வரவேற்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது. இதனால், படமும் வசூலில் பல்வேறு சாதனைகளை முறியடித்து வருகிறது.
வெளிநாடுகளில் அமெரிக்கா, கனடா, அரபு நாடுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இப்படம் இந்திய மொழிகளிலேயே வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, இப்படத்தை ஜப்பான் மொழியில் டப் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய படங்களுக்கு ஜப்பானில் மிகுந்த வரவேற்பு உண்டு. ரஜினி நடிப்பில் உருவான நிறைய படங்கள் ஜப்பானில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளன. ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘முத்து’ படம் முதல் ‘கபாலி’ படம் வரை ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன.
தற்போது, அந்த வரிசையில் ‘பாகுபலி-2’ படத்திற்கும் வெளிநாடுகளில் நல்ல மவுசு கூடியுள்ளதாலும், ஜப்பானிலும் இந்த படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் இருப்பதாலும் அந்த மொழியில் டப் செய்து வெளியிடவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் திருமணமான பிரபல டி.வி. சீரியல் நடிகர் பிரதீப் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
ஐதராபாத்:
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘சுமங்கலி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரதீப். இவர் ஐதராபாத்தில் உள்ள பப்புல்லாகுடா பகுதியில் வசித்து வந்தார்.
இவர் இன்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் என்ன என்பது உடனே தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்ட பிரதீப் சமீபத்தில் டி.வி. நடிகை பவணி ரெட்டியை திருமணம் செய்து கொண்டார். இவரது தற்கொலை திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

பிரதீப் தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரது நண்பர்களிடமும், குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரதீப் தனது குடும்பத்தினருடன் கருத்து வேறுபாட்டில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனினும் இதுகுறித்த உண்மை நிலவரங்கள் இன்னும் கிடைக்கவில்லை.

நடிகை ரியாசென், தனது அரை நிர்வாண படத்தை இணையதளத்தில் வெளியிட்டு சமூக வலைதளங்களை சூடேற்றியிருக்கிறார். இந்த செய்தி குறித்த முழுதகவலை கீழே பார்ப்போம்.
பாரதிராஜாவின் ‘தாஜ்மகால்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இந்தி நடிகை ரியாசென். பிரசாந்தின் ‘குட்லக்‘ படத்திலும் நடித்தார்.
இந்தியில் ரியாசென்னுக்கு நிரந்தர மார்க்கெட் இல்லை. கடைசியாக ‘லோன்லி கேர்ள்’ என்ற குறும் படத்தில் நடித்தார். அதன் பிறகு இவரை யாரும் நடிக்க கூப்பிடவில்லை. இந்த நிலையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தன்னுடைய அரை நிர்வாண படத்தை எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இணைய தளத்தில் வேகமாக பரவி வரும் இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் ரியாசென் அழகை புகழ்ந்து வருகிறார்கள். இந்தி பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் கண்களிலும் இந்த படம் நிச்சயம் படும். இதனால் மீண்டும் பட வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் ரியாசென் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் விரும்பியது நடந்து விட்டது என்று இந்தி பட உலகில் பேசிக் கொள்கிறார்கள்.

‘பாகுபலி’ உருவான நேரத்தில் கையில் பணமில்லாமல் பிரபாஸ் தவித்ததாக எஸ்.எஸ்.ராஜமௌலி தெரிவித்துள்ளர். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வசூல் இதுவரையில் ரூ.600 கோடியை தாண்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் ரூ.1000 கோடியை எட்டும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகனாக நடித்த பிரபாஸ், இப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் பெரும் பணக்கஷ்டத்தில் இருந்ததாக இப்படத்தின் இயக்குனர் ராஜமௌலி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

அதாவது, ‘பாகுபலி’ முதல் பாகத்திற்கு பிரபாஸுக்கு சம்பளமாக ரூ.20 கோடி கொடுத்தார்களாம். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர், நடிகைகளுமே இதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே வேறு வேறு படங்களில் நடித்தார்களே தவிர, பிரபாஸ் மட்டும் எந்த படங்களும் ஒப்புக்கொள்ளாமல் ‘பாகுபலி’க்காக காத்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ஒருமுறை பிரபாஸுக்கு பணக்கஷ்டம் வந்துவிட்டதாம். இதை பயன்படுத்திக்கொள்ள நினைத்த சில தயாரிப்பாளர்கள் அவர்களிடம் கால்ஷீட் வாங்குவதற்காக பணத்தோடு அவரது வீட்டில் போய் நின்றுள்ளார்கள். சிலர், பணத்தை கொடுத்த உதவியாக கூட வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்கள்.
அப்போது, பிரபாஸ் ராஜமௌலியை தொடர்புகொண்டு என்ன செய்யவென்று கேட்க, அப்படி பணம் கொடுக்க வருபவர்களிடம் பணத்தை கடனாக வாங்கிக் கொள், படத்தின் நடிப்பேன் என்று வாக்குறுதி கொடுக்க வேண்டாம். பின்னர் அவர்களுக்கு திருப்பி கொடுத்துவிடு என்று அறிவுரை கூறியுள்ளார். ரூ.10 கோடி ரூபாய்க்கு ஒரு விளம்பரத்தில் நடிக்க வந்த வாய்ப்பைவிட பாகுபலிக்காக நடிக்க மறுத்துவிட்ட பிரபாஸின் அர்ப்பணிப்பு தன்னை வியக்க வைத்துவிட்டதாக ராஜமௌலி கூறியுள்ளார்.