search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக வலைதளங்கள்"

    • ஓட்டலில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது
    • குத்தி கொலை செய்யும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    குழித்துறை :

    மார்த்தாண்டம் தேசிய நெடுஞ்சாலை பம்மத்தில் உள்ள ஓட்டலில் தென் தாமரைகுளத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது50) மற்றும் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் நெட்டூரை சேர்ந்த கணேசன் (45) ஆகியோர் பணியாற்றி வந்தனர்.

    நேற்று மாலை 2 பேரும் பணியில் இருந்தபோது, சப்ளை செய்வதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாக கூறப்ப டுகிறது. இதில் ஆத்திர மடைந்த கணேசன், ஓட்ட லில் இருந்த கத்தியை எடுத்து ராதா கிருஷ்ணனை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அதற்குள் ராதாகிருஷ்ணன் பரி தாபமாக இறந்துவிட்டார்.

    ராதாகிருஷ்ணன் உடலை போலீசார் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஓட்டலில் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு உதயசூரியன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

    தப்பியோடிய கணேசனை பிடிக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் அவரை பல இடங்களில் தேடி வருகின்றனர்.

    கணேசனின் சொந்தஊர் ெநல்லை மாவட்டம் ஆலங்குளம் என்பதால், அவர் அங்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று தேடுதல் ேவட்டையில் ஈடுபட்டுள்ள னர்.

    இதற்கிடையில் ஓட்டலில் ராதா கிருஷ்ணனை துரத்தி துரத்தி கணேசன் குத்தி கொலை செய்யும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கைதான 4 பேர் ஜெயிலில் அடைப்பு
    • 10 வினாடிகள் மட்டுமே வீடியோ பதிவாகி இருந்தது.

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்ட பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணின் படுக்கையறை காட்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். இந்த புகார் மனு மீது விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் பெண்ணின் வீட்டில் செல்போனில் வீடியோ எடுத்து பரப்பியது தெரியவந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (37), சுமேஷ் (20), நிகேஷ் (20), பபின் (20) ஆகிய 4 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இளம்பெண்ணின் கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வாலிபர் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

    இந்த விவகாரம் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அந்த வாலிபரையும், பெண்ணையும் கண்டித்தனர். பலமுறை கண்டித்தும் அவர்கள் இதை அலட்சியமாக எடுத்துக்கொண்டனர். சம்பவத்தன்று வாலிபரும், இளம்பெண்ணும் வீட்டிற்குள் இருந்தனர். அப்போது வாலிபர்கள் வீட்டின் வெண்டிலேட்டர் வழியாக செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். படுக்கை அறையில் இருவரும் இருப்பது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. 10 வினாடிகள் மட்டுமே வீடியோ பதிவாகி இருந்தது.

    இந்த வீடியோவை வாலிபர்கள் தனது நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோ வேகமாக சமூக வலைதளங்களில் பரவியது தெரியவந்துள்ளது. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    இதில் சுமேஷ், நிகேஷ், பபின் ஆகிய 3 பேரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப் பது தெரியவந்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். போலீசார் தேடுவதை அறிந்த அந்த வாலிபர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்பட போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

    • பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்தார்.
    • பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டி உள்ளார்.

    அவிநாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியின் பின்புறம் உள்ள ஒருவரின் வீட்டில் இருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்தார். எனவே குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பலமுறை தெரிவித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், பள்ளியில் உள்ள செடிக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்ற போது, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கழிவுநீரை பள்ளி மாணவர்கள் மீது ஊற்றியுள்ளார். இது குறித்து மாணவர்கள் எதிர்த்து கேட்டபோது, ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டி உள்ளார். இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அவிநாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கண்டித்துள்ளனர். மேலும் மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர்.

    அப்போது மாணவர்களை தாக்கிய நபருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் கணவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனை கழுத்தை நெரித்து தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    ஒருவர் பொய்யை பரப்புவதன் மூலமாக சமுதாயத்தில் எவ்வளவு சேதம் விளைவிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியவில்லை என பிரதமர் மோடி பேசியுள்ளார். #PMModi
    புதுடெல்லி:

    தனது தொகுதியான வாரனாசியில் பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி இன்று உரையாடினார். அப்போது தொண்டர்கள் கேள்விக்கும் அவர் பதிலளித்து பேசினார். அவர் பேசுகையில்:-

    எல்லோரும் சமூக வலைதள ஊடகங்ளை ஒருபோதும் அழுக்கை  பரப்புவதற்காக பயன்படுத்தக்கூடாது, அவர்களைச் சுற்றியுள்ள பல நல்ல விஷயங்கள் உள்ளன. அதனை பரப்புவதற்காக பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் மக்கள் கண்ணியத்தின் எல்லைகளை தாண்டி வருகிறார்கள். 

    அவர்கள் பொய்யைப் பார்ப்பார்கள் அல்லது கேட்பார்கள். அதை மற்றவர்களுக்கு பகிரிந்து விடுகிறார்கள். இதனால்  அவர்கள் சமுதாயத்தில் எவ்வளவு சேதம் விளைவிக்கிறார்கள் என்பதை அவர்கள் அறியவில்லை.  சிலர் எந்தவொரு கண்ணியமான சமுதாயத்திற்கும் பொருந்தாத வார்த்தைகளை பயன்படுத்துகின்றனர். பெண்களைப் பற்றி அவர்கள் கூறுகிறார்கள் அல்லது எழுதுகிறார்கள். இந்த பிரச்சினை எந்தவொரு அரசியல் கட்சியையோ அல்லது சித்தாந்தத்தை சேர்ந்ததோ அல்ல.

    என மோடி பேசினார்.

    நாட்டைப் பற்றிய நேர்மறையான செய்திகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மோடி, இந்தியாவின் மாறும் முகத்தை உயர்த்திப் பேசும் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்தார், நாடு இப்போது வரலாற்றில் இல்லாத முன்னேற்றத்தை கண்டிருக்கிறது என்று கூறினார்.

    இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் இப்போது மின்சாரம், பள்ளிகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளன. நாடு மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக மாறியுள்ளது. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாறியுள்ளது. விமான சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. ஏசி ரயில்களில் பயணிப்பதை விட அதிகமான மக்கள் விமானத்தில் பறக்கின்றனர். இந்த வளர்ச்சிகள் ஒவ்வொரு இந்தியர்களையும் பெருமை அடைய செய்யும் என மோடி கூறினார்.

    வாரனாசியில் தனது அரசு செயல்படுத்தி வரும்  அபிவிருத்தி பணிகளை பற்றி கூறினார். விமான நிலையத்திற்கு இரயில்வே நிலையத்திற்கான பாதைகளில் இருந்து மாற்றம் காணப்படுவதாகவும் அது புனித நகரத்தின் முன்னேற்றத்திற்கு உறுதியளிப்பதாகவும் தெரிவித்தார்.
    ×