search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலைமை ஆசிரியரை தாக்கிய தி.மு.க.கவுன்சிலரின் கணவர் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
    X

    தி.மு.க.கவுன்சிலரின் கணவர் தலைமை ஆசிரியரை தாக்கிய காட்சி.

    தலைமை ஆசிரியரை தாக்கிய தி.மு.க.கவுன்சிலரின் கணவர் - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

    • பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்தார்.
    • பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டி உள்ளார்.

    அவிநாசி :

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியின் பின்புறம் உள்ள ஒருவரின் வீட்டில் இருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் புகார் தெரிவித்தார். எனவே குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பலமுறை தெரிவித்து வந்துள்ளார்.

    இந்நிலையில், பள்ளியில் உள்ள செடிக்கு மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்ற போது, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கழிவுநீரை பள்ளி மாணவர்கள் மீது ஊற்றியுள்ளார். இது குறித்து மாணவர்கள் எதிர்த்து கேட்டபோது, ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டி உள்ளார். இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அவிநாசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கண்டித்துள்ளனர். மேலும் மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர்.

    அப்போது மாணவர்களை தாக்கிய நபருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி தி.மு.க.வை சேர்ந்த கவுன்சிலர் ஒருவரின் கணவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனை கழுத்தை நெரித்து தாக்கிவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சம்பவ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    Next Story
    ×