என் மலர்
விக்ரமின் ‘சாமி-2‘ படத்திற்காக ஹரி தற்போது லொக்கேஷன் தேடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஹரி-விக்ரம்-திரிஷா கூட்டணியில் உருவான ‘சாமி’ படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. படம் வெளிவந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார் ஹரி. முதல் பாகத்தைப் போன்றே இரண்டாம் பாகத்திலும் விக்ரம், திரிஷா நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளனர்.
இரண்டாவது கதாநாயகியாக கீர்த்தி சுரேஷும் ஒப்பந்தமாகியுள்ளார். இசையமைப்பாளராக தேவிஸ்ரீபிரசாத் ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகளை ஹரி தற்போது தொடங்கியுள்ளார். முதலில் லொக்கேஷன் தேடும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளார்.

விக்ரம் தற்போது ‘ஸ்கெட்ச்’, ‘துருவ நட்சத்திரம்’ ஆகிய படங்களில் பிசியாக இருக்கிறார். இப்படங்களை முடித்த பிறகுதான் ‘சாமி-2’ படத்தில் கவனம் செலுத்த உள்ளார். அதற்குள் அனைத்து ஆரம்பகட்ட பணிகளையும் முடித்துவிட தற்போது ஹரி தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் இப்படத்திற்காக டெல்லியில் லொக்கேஷன் தேடும் பணியை ஹரி மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தை சிபு தமீன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

தமிழ் சினிமாவின் வளர்ச்சியை கேளிக்கை வரி அழித்துவிடும் என்று இயக்குனரும், நடிகருமான சித்ரா லட்சுமணன் கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் தமிழிலே 250 திரைப்படங்கள் வெளியாகின்றதென்றால் அதில் 10 சதவிகித படங்கள்கூட வெற்றிப் படங்களாக அமைவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. தமிழக அமைச்சர் பெருமக்கள், அரசு அதிகாரிகள் உட்பட எல்லோரும் அறிந்த உண்மை இது.
அனுபவசாலிகள், அறிவாளிகள், வசதியானவர்கள் என பல தரப்பினர் இந்த சினிமா தயாரிப்பில் ஈடுபட்டாலும் அவர்கள் யாராலுமே தொடர்ந்து வெற்றிகளைக் கொடுக்க முடிந்ததில்லை. அதற்கு முக்கியமான காரணம் மற்ற தொழில்களைப் போல வெற்றிக்கான நிரந்தரமான பார்முலா இல்லாத ஒரு நிலையில்லாத தொழிலாக சினிமா இருப்பதுதான்.
சினிமாவிற்கு உள்ள அதீத விளம்பரம், கவர்ச்சி, திடீர் புகழ் ஆகியவைகள்தான் ஆயிரக்கணக்கான மக்களை தினமும் இந்தத் துறைக்குள் இழுத்து வருகிறது.அப்படி வருகின்றவர்களில் ஐந்து சதவீதத்தினர் கூட இங்கே நிலைத்து நிற்பதில்லை. கடந்த பத்து ஆண்டுகளில் ஒரே ஒரு திரைப்படம் தயாரித்து விட்டு இந்தத் தொழிலை விட்டு ஓடிப்போனவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.

இப்படி நிலையான வெற்றியோ வருமானமோ இல்லாத சினிமா துறையின்மீது அடுக்கடுக்காக வரிகளை விதித்துக் கொண்டிருந்தால் திருவள்ளூவரின் “பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்” என்ற வாக்கின்படி தமிழ் சினிமா உலகம் அழிந்து போகும் நிலைதான் ஏற்படும்.
ஏற்கனவே சினிமா டிக்கெட்டுகளின் மீது 18 முதல் 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் சினிமா டிக்கெட்டுகளின் மீது 30 சதவிகிதம் கேளிக்கை வரியும் விதித்தால் தமிழ் சினிமாவின் வளர்ச்சி அடியோடு முடங்கிப் போகும்.
இப்போதுதான் உலக சினிமாக்களோடு போட்டி போடக்கூடிய அளவிற்கு தமிழ் சினிமா வளர்ந்து கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து ஊக்குவிக்க வேண்டிய அரசு மேலும் மேலும் வரிச்சுமையை ஏற்றுவது எந்த விதத்தில் சரியாக இருக்க முடியும்?
தமிழக முதல்வர் உடனடியாக இந்த வரி விதிப்பை திரும்பப் பெற உத்தரவிட்டு தமிழ் சினிமா உலகைக் காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உதவித் தொகையையும் அவர்களுக்கு தந்து உதவ வேண்டும். கடந்த பல ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களுக்கு அந்த உதவித் தொகை வழங்கப்படவில்லை.
பல தயாரிப்பாளர்கள் மீண்டும் திரைப்படத் தொழிலில் ஈடுபட அந்த உதவித்தொகைதான் விதை நெல் போல உதவியிருக்கின்றது. ஆகவே உடனடியாக அந்த உதவித் தொகையையும் வழங்கி தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களை வாழ வைக்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மலையாள இயக்குனர் குமார் நந்தா இயக்கத்தில் கேரளாவில் அடர்ந்த காட்டுக்குள் ‘சூறாவளி’ என்ற படம் உருவாகவுள்ளது.
மலையாள இயக்குனர்கள் பலருக்கும் தமிழில் படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வம் நிறையவே உண்டு. இதற்கு முன் பலர் அப்படி வந்து தங்களது திறமையை நிரூபித்துள்ளார்கள். அந்தவகையில் மலையாள திரையுலகில் இருந்து புதிய வரவாக தமிழுக்கு வந்திருப்பவர்தான் இயக்குனர் குமார் நந்தா.
மலையாளத்தில் ‘கொட்டாரத்தில் குட்டி பூதம்’, ‘முள்ளசேரி மாதவன் குட்டி நேமம் P.O’ ஆகிய படங்களை இயக்கியுள்ள இவர் மலையாள டிவி சீரியல்களில் பிரபல நடிகையான 'பிரஜூஷா' கதையின் நாயகியாக நடிக்கும் ‘அகதி’ எனும் தமிழ் படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது..
இதை தொடர்ந்து அடுத்ததாக ‘சூறாவளி’ என்கிற படத்தை இயக்கவுள்ளார் குமார் நந்தா. கோல்டன் விங்ஸ் நிறுவனம் சார்பாக ஷ்யாம் மோகன் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு வி.ஜி.சஜி ஒளிப்பதிவு செய்ய, ராம் இசையமைக்கிறார். ‘தொட்டால் தொடரும்’, ‘சேது பூமி’ படங்களின் நாயகன் தமன் குமார், ‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’, ‘பட்டதாரி’ படங்களின் நாயகன் அபி சரவணன் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, மனிஷா ஜித் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடங்களில் அருண் பத்மநாபன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஒருபக்கம் கஞ்சா விற்கும் கும்பல். இன்னொரு பக்கமோ அவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தவேண்டிய போலீஸாரும் போட்டிக்கு கஞ்சா விற்கின்றனர். இவர்களுக்குள் ஏற்படும் தொழில் போட்டியும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் இந்தப்படம் விவரிக்கிறது.. கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் வரும் 'ஜூலை 10' முதல் சுமார் 15 நாட்கள் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தவுள்ளார்கள்.

இசை உலகில், இளையராஜாவின் வாரிசுகளாக கார்த்திக்ராஜா, பவதாரிணி, யுவன்சங்கர்ராஜா ஆகியோர் திகழ்கிறார்கள்.

இளையராஜாவின் குடும்பத்தில் அவரது தம்பி கங்கை அமரனும் புகழ் பெற்ற இசை அமைப்பாளராக இருக்கிறார்.
இளையராஜாவின் வாரிசுகள் கார்த்திக்ராஜா, பவதாரிணி, யுவன்சங்கர்ராஜா மூவருமே அப்பா வழியில் இசையமைப்பாளர்களாகி
விட்டார்கள்.பவதாரிணி பாடகியாகவும், புகழ் பெற்றுள்ளார். "பாரதி'' திரைப்படத்தில் "மயில் போல பொண்ணு ஒண்ணு'' என்ற பாடலைப் பாடி தேசிய விருது பெற்றார். இந்தப் பாடலுக்கு இசை அமைத்தவர் இளையராஜா. பாடலை எழுதியவர் மு.மேத்தா.
இளையராஜாவின் இசைக்குழுவில், 11 வயதில் கீ போர்டு வாசிப்பவராக சேர்ந்த ஏ.ஆர்.ரகுமான், இன்று உலகப்புகழ் பெற்ற இசை அமைப்பாளராக விளங்குகிறார்.
தன் இசைக்குழுவில், ஏ.ஆர்.ரகுமான் எப்படி சேர்ந்தார் என்பது பற்றி இளையராஜா கூறியதாவது:-
"மூடுபனி படத்துக்கு நான் இசை அமைத்துக் கொண்டிருந்த நேரத்தில், கீபோர்டு வாசிப்பவர், குடிபோதையில் வந்திருப்பது தெரிந்தது. உடனே அவரை வெளியே அனுப்பி விட்டேன். `கீபோர்டு' வாசிக்கத் தெரிந்த வேறொருவர் தேவைப்பட்டபோது உடனடியாக யாரும் கிடைக்கவில்லை. அப்போது என் குழுவில் இருந்த ஒருவர் என்னிடம் வந்து, "எனக்குத் தெரிந்த ஒரு பையன் இருக்கிறான். அவன் ஓரளவு கீ போர்டு வாசிப்பான். அழைத்து வரட்டுமா?'' என்று கேட்டார். "இதென்ன கேள்வி? உடனே அழைத்து வாருங்கள்'' என்றேன்.
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த சிறுவனை அழைத்து வந்தார்கள். நான் அந்தச் சிறுவனிடம் கீபோர்டில் வாசிக்க வேண்டிய இசைக் குறிப்பை கொடுத்தேன். அதை வாசிப்பதில் அவனுக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டபோது நானே அவன் கையைப் பிடித்து வாசிக்கச் சொல்லிக் கொடுத்தேன். அந்தச் சிறுவனும் புரிந்து கொண்டு நான் எதிர்பார்த்த மாதிரி வாசித்து விட்டான். பாடலும் நன்றாக அமைந்தது.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல, இசையமைப்பாளர் சேகரின் மகன் திலீப்தான் அவர். இந்த திலீப்தான் பின்னாளில் ஏ.ஆர்.ரகுமானாக இசை உலகுக்கு வந்தார்.''
இவ்வாறு இளையராஜா கூறினார்.
சித்ரா, ஜென்சி, சுஜாதா, மகதி உள்பட பல பின்னணி பாடகிகளை அறிமுகப்படுத்திய பெருமை இளையராஜாவுக்கு உண்டு.
இளையராஜா இசை அமைத்த "நிழல்கள்'' படத்தில், "பொன்மாலைப் பொழுது'' பாட்டை எழுதி, திரை உலகில் அடியெடுத்து வைத்தார், கவிஞர் வைரமுத்து. பாரதிராஜா இயக்கிய இந்தப்படம் 1980-ல் வெளிவந்தது.
இசையமைத்துப் பாடுவதோடு மட்டுமின்றி இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர், இளையராஜா.
"சங்கீதக் கனவுகள்'', "வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது'', "பால் நிலா பாதை'', "துளிக்கடல்'', "ஞான கங்கா'', "வெண்பா நன்னூல் மாலை'', "பள்ளியெழுச்சி பாவை பாடல்கள்'' முதலான புத்தகங்களை எழுதியுள்ளார்.
ஆதிசங்கரரின் ஞான நூலை சமஸ்கிருதத்தில் ரமண மகரிஷி எழுதினார். தமிழில் அதை "விவேக சூடாமணி'' என்ற பெயரில் இளையராஜா எழுதியிருக்கிறார்.
இலக்கிய ஆர்வம் பற்றி அவர் குறிப்பிடுகையில், "அவ்வப்போது கவிஞர் பொன்னடியான் எனக்கு தமிழ் இலக்கிய - இலக்கணம் கற்பிக்க வருவார். பிற்காலத்தில் பாடல்கள் எழுதவும், வெண்பா, கவிதைகள் போன்ற பலவற்றை எழுதும்போதும், அவர் முன்பு கூறிய விஷயங்கள் பெரிதும் உதவியிருக்கின்றன'' என்று கூறியுள்ளார்.
இசைக்காக 3 முறை டாக்டர் பட்டம் பெற்றவர் இளையராஜா.
1994-ல் அரிசோனா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. அதே ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், அடுத்த ஆண்டில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் "டாக்டர்'' பட்டங்களை வழங்கின.
இளையராஜாவின் இசை பற்றி ஆய்வு மேற்கொண்டு, பாடகி அனுராதா ஸ்ரீராம் உள்பட பலர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
"டாக்டர்'' பட்டம் கிடைப்பதற்கு முன்பே, இளையராஜா பெற்ற பட்டம் "இசை ஞானி.'' இதை வழங்கியவர் முதல்-அமைச்சர்
கருணாநிதி.காரைக்குடியில் பட அதிபர் பழ.கருப்பையா நடத்திய விழாவில், இந்த விருது வழங்கப்பட்டது.
தமிழக அரசின் "கலைமாமணி'' விருது, கேரள அரசின் "சிறந்த இசையமைப்பாள''ருக்கான விருது, ஆந்திர அரசின் "நந்தி'' விருது உள்பட பல விருதுகளை இளையராஜா பெற்றுள்ளார்.
"ஹவ் டு நேம் இட்?'', "நத்திங் பட் வின்ட்'', "இன்டியா 24 ஹவர்ஸ்'' ஆகிய பெயர்களில் இசை ஆல்பங்கள் வெளியிட்டுள்ளார்.
இளையராஜா பல்வேறு இந்திய மொழிகளிலும் 854 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இசை அமைத்த பாடல்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்துக்கும் மேல்.
இளையராஜா இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கும் 855-வது படம் `ஆ தினகளு' (அந்த நாட்கள்) என்ற கன்னடப்படம். தனது இசைப்பணிகளை சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனக்கான நிரந்தர அறையில் இருந்து கவனிக்கிறார்.
இளையராஜாவை "அன்னக்கிளி'' படத்தின் மூலம் இசை உலகுக்கு அறிமுகப்படுத்தியவரும், ராஜா என்ற பெயரை மாற்றி "இளையராஜா'' என்ற பெயரை சூட்டியவருமான பஞ்சு அருணாசலம் கூறியதாவது:-
"தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு இருந்த போதிலும், இந்தி சினிமாப் படங்கள் பாடலுக்காகவே இங்கே வெற்றிகரமாக ஓடின.
இந்திப் படங்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை தடுக்கக்கூடிய விதத்தில், இசையில் புதுமையைப் புகுத்தியவர் இளையராஜா. அதனால், இசையில் இளையராஜாவின் கொடி, வெகு உயரத்தில் பறந்தது; இன்னும் பறந்து கொண்டிருக்கிறது.
இசை உள்ளவரை இளையராஜாவின் புகழும் வாழ்ந்து கொண்டிருக்கும்.''
இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.
இளையராஜா கூறியதாவது:-
"இசை தானாக வராது. யாரும் அழைத்து வந்துவிட முடியாது. அதுவாக என்னிடம் வந்தது. போட்டியும், பொறாமையும், குரோதமும் நிறைந்த இந்த உலகில் அன்பும், பாசமும் நேசமும் உள்ள மனித உறவுகளை காண்பதரிது.
இவ்வளவுக்கும் மத்தியில், என்னை தவிக்க விட்டு விடாமல், சப்த சுரமும், நற்றமிழும், பாடலும், நாதாமிர்தமாக - நதியாக - கடலாக இருக்கும் இசையிலே ஒரு துளியாக என்னை இறைவன் உட்கார வைத்தானே! இது, தகுதியற்ற என் மீது இறைவன் கொண்ட கருணையே அல்லாமல் வேறு என்னவாக இருக்கும்!
மனித வாழ்க்கையில் சில மனிதர்கள் மட்டுமே ஆலமரம் போல் நின்று, வருகிறவர்களுக்கு நிழல் தருவதுடன் தங்கும் பறவைகளுக்கு இடம் கொடுப்பது போல, மற்றவர்களுக்கு உபயோகமாக தங்கள் வாழ்க்கையை கழிப்பார்கள்.
சாதாரணமான ஒரு இசை அமைப்பாளனான என்னிடம் வந்து தங்கிப்போனவர்களும் தாளாது போனவர்களும் இருந்தாலும், எத்தனையோ தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள், இசைத்தட்டு - கேசட் விற்பனையாளர்கள் உயர்வதற்கு என் இசை ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
எனினும், இந்தப் பிறவியில் இவை எல்லாம் எனக்கு பெரிதல்ல. என் இசை, என் அன்னை மூகாம்பிகை, என் பிறவிப்பிணி ஒழித்த பகவான் ஸ்ரீரமணர் அருள் - இதையெல்லாம் அடைந்ததை மட்டுமே முக்கியமாக கருதுகிறேன்.
திருவண்ணாமலை என்ற ஒரு ஸ்தலம் இல்லாது போயிருந்தால், என் கதி என்னவாகியிருக்கும்? அதைச்சுற்றிச் சுற்றி இந்த உடம்பைத் தேய்ப்பதைத் தவிர எனக்கு ஏதும் உயர்வாகத் தோன்றவில்லை!''

திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க முடியாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி (GST) மற்றும் கேளிக்கை வரியால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு ஆதரவு தர முடியாது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது,
சினிமாத்துறை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அமலுக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரியால் சினிமாத்துறை மேலும் குழப்பான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வருகிற 3-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவினை எடுக்கும் முன்பு அனைத்து தயாரிப்பாளர்களின் நிலைமையை உணர்ந்து செயல்பட்டிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். தயாரிப்பாளர்கள் நலனுக்காக தான் நாம் அனைவரும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். ஆனால் 20 தயாரிப்பாளர்கள் முற்றிலுமாக பாதிக்கப்படும் வகையில் ஒரு முடிவை எடுப்பது என்பது தயாரிப்பாளர்கள் சங்கம் உடன்படியாத விஷயம்.

மாநில அரசுக்கு நம் தேவைகளை புரிந்து நடவடிக்கை எடுப்பதற்கு கால அவகாசம் தரவேண்டிய தேவையும் உள்ளது. இதனை பொருட்டில் கொண்டு வருகிற திங்கள் முதல் அறிவிக்கப்பட்டிருக்கும் வேலை நிறுத்தத்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் உடனடியாக ஆதரவு அளிக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் திரைத்துறையினர் பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தற்போது அறிவித்துள்ள வேலைநிறுத்தத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமாய் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக அன்புடன் வலியுறுத்துகிறோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து வசூலிக்கப்படும் உள்ளாட்சி வரிவிதிப்பால் சினிமா தியேட்டர்களில் முன்பதிவு டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் ரூ.100-க்கு உட்பட்ட சினிமா டிக்கெட்களுக்கு 18 சதவீத வரியும், ரூ.100க்கு அதிகமாக டிக்கெட்களுக்கு 28 சதவீத வரியும் செலுத்த வேண்டியுள்ளது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமும் 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க தமிழக அரசு நேற்று புது சட்டம் கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாக, ஒரு சினிமா டிக்கெட்டுக்கு 58 சதவீத வரி செலுத்த வேண்டியுள்ளது. இதன்படி டிக்கெட் பணமாக ரூ.100 வசூலித்தால் அதில் 64 ரூபாயை வரியாக செலுத்த வேண்டும். மீதம் உள்ள 36 ரூபாயைதான் தியேட்டர் அதிபர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் பங்கிட்டு கொள்ள வேண்டியது இருக்கிறது. கூடுதல் வரியை மக்கள் மீது திணித்தால் தியேட்டருக்கு கூட்டம் வராது.

எனவே, கேரள அரசை போல, தமிழகத்திலும் உள்ளாட்சி அமைப்பு வரிகளை ரத்து செய்யக் கோரி 3-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்படுகின்றன. இந்த அறிவிப்பை தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சம்மேளன தலைவர் அபிராமி ராமநாதன் வெளியிட்டுள்ளார்.
பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், கமல்ஹாசன் உள்ளிட்ட பட அதிபர்கள் வரிவிதிப்பை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். உள்ளாட்சி விதிக்கும் கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் திரைஉலகினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சினிமா டிக்கெட்களுக்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் தியேட்டர் கள் மூடப்படுகின்றன. எனவே, இன்று அனைத்து தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.

எஸ்.கல்யாண் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குலேபகாவலி’ படத்தில் பிரபுதேவா - ஹன்சிகா ஆடும் பாடல் ஒன்றுக்கு ரூ.2 கோடி செலவில் செட் அமைக்கப்படுகிறது.
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ்.கல்யாண் இயக்கி வரும் திரைப்படம் ‘குலேபகாவலி’. பிரபுதேவா கதாநாயகனாகவும், ஹன்சிகா கதாநாயகியாகவும் நடிக்கும் இந்த படத்தின் பாடல் காட்சி ரூ.2 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது. இதற்காக கலை இயக்குனர் கதிர் பிரமாண்டமாக அரங்கு அமைத்துள்ளார். அதி நவீன தொழில்நுட்ப கருவிகள் கொண்டு ஆனந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இசையமைப்பாளர்கள் விவேக் - மெர்வின் இசையில் உருவான இதற்கான பாடலுக்கு நடன இயக்குனர் ஜானி நடனம் அமைக்கிறார். படத்தொகுப்பு - விஜய் வேலுக்குட்டி, ஹாலிவுட் கிராபிக்ஸ் கலைஞர்களின் பங்கேற்புடன் இது பிரமாண்ட முறையில் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை கே.ஜே.ஆர். ராஜேஷ் தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்திற்கான தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பா.ரஞ்சித் இயக்கி வரும் ‘காலா’ படத்துக்காக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ரஜினியின் ‘2.0’ படத்தை பிரபலப்படுத்தும் வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ராட்சத பலூன்களை பறக்கவிட்டு அதன் மூலம் படத்தை விளம்பரப்படுத்திய நிலையில், அந்த மாத கடைசியில் நியூ ஜெர்சியில் சீசர் திருவிழா என்று புதிய முறையில் விளம்பரப்படுத்துகின்றனர். இதே போல் பல்வேறு வழிகளில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
‘2.0’ படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் தலைப்பு வெளியானதில் இருந்து `காலா' குறித்து தினம் தினம் புதுப்புது தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் ஹூமா குரோஷி, அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், பங்கஜ் த்ரிபாதி, அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திகுச்சி' திலீபன், சாக்ஷி அகர்வால், சுகன்யா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் ‘காலா’ படத்தின் இந்தி பதிப்பின் கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் புதிய முயற்சியாக இந்தி பதிப்பிற்கு ரஜினியே ‘டப்பிங்’ பேசுகிறார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

சினிமாவை காப்பாற்றாத ரஜினி தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார் என்று நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி. ராஜேந்தர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
ஜி.எஸ்.டி இந்த சரக்கு - சேவை வரி விதிப்பு என்பது, இந்தியாவின் கனவென்று, இந்த மத்திய அரசு கூறிவிடும். ஆனால் என்னை கேட்டால், எல்லா துறைகளிலும் விலைவாசி ஏறிவிடும். நடுத்தர ஏழை மக்களின் வாழ்வு நாறி விடும். இதிலே நாட்டின் முன்னேற்றம் எங்கே மாறிவிடும்?
இந்த அரசு வந்ததிலிருந்தே எந்த திட்டத்தால் நாட்டிற்க்கு வந்திருக்கிறது. வளர்ச்சி? வரி.. வரி.. என்று மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ச்சி. இந்த பிரதமர் மோடி அரசு அமைந்ததிலிருந்தே மக்களுக்கு இல்லை மகிழ்ச்சி. இதிலே சரக்கு - சேவை வரி விதிப்புக்கு நடத்துக்கிறார்கள் பிரம்மாண்டமான நிகழ்ச்சி.

மத்திய அரசே - தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனும் பிராந்திய மொழி படங்களை ஒடுக்க நினைக்காதே - மாநில அரசுகளின் உரிமைகளை மீறி, உள்ளே நுழைய துடிக்காதே! மத்திய அரசே தென்னகத்தை நசுக்காதே! திரை உலகத்தை பொசுக்காதே!
நூறு ரூபாய் கட்டணத்தை தாண்டினாலே, மத்திய அரசு விதிக்குமாம் 28 சதவீதம். இதிலே மாநில அரசு கேளிக்கை வரியாய் விதிக்குமாம் 30 சதவீதம், இதர வரிகளையெல்லாம் சேர்த்து, அரசுக்கே கட்டி விட வேண்டும் 64 சதவீதம். மீதி இருப்பதோ 36 சதவீதம், இதை திரையரங்கு உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் போட்டுக் கொள்ள வேண்டும் பங்கு. நோகாமல், வேகாமல் அரசு சாப்பிடுமாம் நுங்கு. நொந்து கொண்டிருக்கும் சினிமா உலகிற்கு, ஊதுவார்களாம் சங்கு.
பக்கத்து மாநிலம் கேரளா, தன் மாநில கேளிக்கை வரியை செய்திருக்கிறது ரத்து. தமிழக அரசு மட்டும் ஏன் தமிழ் திரை உலகத்தை குத்துகிறீர்கள் இந்த குத்து?

ஆக இரட்டைவரி என்பது ரெட்டை குழல் துப்பாக்கி. திரையரங்குகளை மூடுவோம் என்று போராட ஆரம்பித்து விட்டனர். இன்னும் எங்கள் போராட்டம் வெடிக்கும் தொடர்ந்து உங்கள் காதுகளில் ஒலிக்கும்.
ரஜினியும் மோடியும் நெருக்கம் என்று சொல்கிறார்கள். ஆனால் சினிமா கட்டணம் உயர்வு பற்றி ரஜினி இதுவரை வாய் திறக்கவில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே தனது எதிர்ப்பை தெரிவித்துவிட்டார். ரஜினி ஏன் எதுவும் பேசவில்லை?
தமிழ் சினிமா எனது தாய் என்கிறார். ஆனால் இந்த சினிமாவை காப்பாற்ற ரஜினி எதுவும் செய்யவில்லை. எதிர்த்து குரல்கூட கொடுக்கவில்லை. பிரதமருடன் நெருக்கம் இருந்தும் சினிமாவை காப்பாற்ற ஏன்முன் வரவில்லை?

சினிமாவை கூட காப்பாற்ற முடியாத ரஜினி அரசியலுக்கு வந்தால் எப்படி தமிழ்நாட்டை காப்பாற்றுவார்? அவர் அரசியலுக்கு வருவது பற்றி இதுவரை தெளிவாக பேசவில்லை.
வந்தால் என்ன செய்யப் போகிறார்? சினிமாவுக்காக ரஜினி குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு டி. ராஜேந்தர் கூறினார்.

அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் சம்பளம் உயர்ந்து இருக்கிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கதாநாயகிகளுக்கு முதல் வாய்ப்பு கிடைப்பதுதான் பெரும் கஷ்டம். அதன்பிறகு மளமளவென படங்கள் குவியும். இந்தி நடிகைகள் அவர்கள் மொழி படங்களில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் தென்னிந்திய நடிகைகள் தமிழ், தெலுங்கு, இந்தி என்று அனைத்து மொழிகளிலும் கலக்குகிறார்கள். ஒவ்வொரு மொழிக்கும் தனி சம்பளமும் நிர்ணயித்து உள்ளனர்.
படங்கள் வெற்றி பெற்றால் சம்பள தொகையை ஏற்றி விடுகிறார்கள். சில நடிகைகள் நகை கடைகள் திறப்பது, வணிக நிறுவனங்களுக்கு விளம்பர தூதுவர்களாக இருப்பது என்றும் சம்பாதிக்கிறார்கள். கதாநாயகிகளின் புதிய சம்பள பட்டியல் விவரம் வெளியாகி இருக்கிறது.
நடிகை நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் கேட்பதாக தகவல். இவர் 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நம்பர் 1 கதாநாயகியாக வலம் வந்தார். அவர் மார்க்கெட்டை வேறு எந்த நடிகையாலும் எட்டி பிடிக்க முடியாத உயரத்தில் இருந்தார். தமிழ் தவிர தெலுங்கு பட உலகிலும் கொடி கட்டி பறக்கிறார்.

தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், அறம், வேலைக்காரன், மற்றும் ஒரு தெலுங்கு படம் என்று 5 படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை என்றால் புதுமுக நடிகர்களுடனும் ஜோடி சேருகிறார். தெலுங்கு படங்களில் பாலகிருஷ்ணா போன்ற மூத்த நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கவும் சம்மதிக்கிறார்.
அனுஷ்கா சம்பள விஷயத்தில் நயன்தாராவை முந்தி விட்டார். இப்போது அவர் ரூ.5 கோடி சம்பளம் கேட்கிறார். 12 ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர் தெலுங்கு படத்தில் அறிமுகமான அவரது சினிமா வாழ்க்கை சூப்பராகவே போய் கொண்டிருக்கிறது என்கின்றனர். அருந்ததி, ருத்ரமாதேவி, பாகுபலி படங்கள் அவருக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளன. பாகுபலி படத்தில் அனுஷ்காவுக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுத்தனர். புதிய படங்களுக்கு அதைவிட கூடுதலாக ரூ.1 கோடி கேட்கிறார்.
சமந்தா சென்னையில் பிறந்து விரைவில் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை மணந்து ஆந்திர மருமகளாக போகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார். சமந்தா தமிழ், தெலுங்கில் நடித்த படங்கள் நன்றாக ஓடி லாபம் ஈட்டி உள்ளன.

காஜல் அகர்வால் ரூ.2 கோடி சம்பளம் வாங்குகிறார். தெலுங்கில் இவருக்கு மகதீரா படம் திருப்பு முனையாக அமைந்தது. தமிழில் விஜய்யுடன் மெர்சல், அஜித்குமாருடன் விவேகம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படங்கள் திரைக்கு வந்த பிறகு சம்பளத்தை மேலும் உயர்த்தும் முடிவில் இருக்கிறார்.
சென்னை அழகியாக தேர்வாகி சினிமாவுக்கு வந்த திரிஷா 15 வருடங்களாக முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க கவனம் செலுத்துகிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.1½ கோடி வாங்குகிறார் என்கின்றனர்.
சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கிறார். இவர் ஒரு படத்துக்கு ரூ.1 கோடி வாங்குகிறார். ஹன்சிகா, தமன்னா, ரகுல்பிரீத்சிங் ஆகியோரும் ரூ.1 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

திங்கட்கிழமை முதல் தியேட்டர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், ‘படம் ரிலீஸ் ஆவதற்குள் தியேட்டரை மூடுகிறார்களே’ என்று சினிமா இயக்குநர் கண்ணீர் உதிர்த்துள்ளார்.
இந்த வாரம் 7 படங்கள் திரைக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையில் திங்கட்கிழமை முதல் தியேட்டர்கள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கவுதம் கார்த்திக் நடித்த ‘இவன் தந்திரன்’ படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளருமான ஆர்.கண்ணன் தனது ஆடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-
அனைவருக்கும் வணக்கம். இவன் தந்திரன் படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணன் பேசுகிறேன். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் திங்கட்கிழமை முதல் தியேட்டரை மூடுவதாக அறிவித்து இருக்கிறார்கள்.

இப்படி எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீர் என்று தியேட்டர்களை மூடினால் என்ன செய்வது? படத்துக்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது?
இயக்குனர்கள் விக்ரமன், செல்வமணி, சமுத்திரக்கனி ஆகியோர் இதற்கு உதவ வேண்டும். எனக்கு இருக்கும் ஒரே ஆதரவு டைரக்டர் சங்கம்தான். நான் 25 வருடங்கள் திரை உலகில் இருக்கிறேன். படம் நன்றாக ஓடும் நிலையில் தியேட்டர்களை மூடுவது, குழந்தை பிறந்தவுடன் அதன் கழுத்தை அறுத்தது போல இருக்கிறது. என் படம் தொடர்ந்து ஓட உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறிய அவர் கதறி அழும் குரலும் இந்த ஆடியோவில் பதிவாகி இருக்கிறது.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் - ரம்யா நம்பீசன் - வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் `சத்யா' படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
சிபிராஜ், ரம்யா நம்பீசன், வரலட்சுமி, ஆனந்த்ராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சத்யா’. இப்படத்தை ‘சைத்தான்’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வருகிறார். நாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரித்து வரும் இப்படத்தில் யோகி பாபு, சதீஷ், உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிரைம் த்ரில்லராக உருவாகி வரும் ‘சத்யா’ தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘ஷணம்’ படத்தின் ரீமேக்தான். படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். வரலக்ஷ்மி சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், ஆனந்த் ராஜ் மற்றும் சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதில் வரலக்ஷ்மியின் கதாபாத்திரம் படத்துக்கு பலம் சேர்க்கும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் `சத்யா' படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி வாங்கியிருக்கிறது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான நாதாம்பாள் பிலிம் பேக்டரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக பிரபுதேவா நடித்து வரும் ‘குலேபகாவலி’ மற்றும் நயன்தாரா நடித்து வரும் ‘அறம்’, சந்தானத்தின் மன்னவன் வந்தானடி, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடித்து வரும் பெயரிடப்படாத படம் உள்ளிட்ட பல படங்களின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.