search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரக்கு மற்றும் சேவை வரி"

    • தற்போதைய அரசின் ஜி.எஸ்.டி. வரி செலுத்துபவரைக் கூட முற்றிலும் திகைக்க வைக்கிறது.
    • ஜி.எஸ்.டி. பொருளாதாரத்தை சிதைத்து விட்டது.

    ஜி.எஸ்.டி.வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவையொட்டி, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், தற்போதைய ஜி.எஸ்.டி. பிறப்பு குறைபாடுகளை கொண்டது, கடந்த ஐந்து ஆண்டுகளில், அந்த குறைபாடுகள் மிகவும் மோசமாகி விட்டது என தெரிவித்தார்.

    இன்று அமலில் உள்ள ஜி.எஸ்.டி முறை, முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டிருந்த ஜி.எஸ்.டி.அல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

    தற்போதைய அரசின் ஜி.எஸ்.டி., வரி செலுத்துபவரைக் கூட முற்றிலும் திகைக்க வைக்கும் என்றும், மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான நம்பிக்கையை இது முற்றிலும் சிதைத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    காங்கிரஸ் கட்சி தற்போதைய ஜி.எஸ்.டி.யை நிராகரிப்பதாகவும், தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, ஆட்சிக்கு வந்தவுடன் தற்போதைய ஜிஎஸ்டியை குறைந்த விகிதத்தில் இருக்கும்படியான ஜிஎஸ்டி 2.0 ஆக மாற்றியமைக்க நாங்கள் முயற்சி செய்வோம் என்றும் ப.சிதம்பரம் கூறினார்.

    • வணிகம் செய்வதை ஜி.எஸ்.டி. எளிதாக்குகிறது.
    • சரக்கு மற்றும் சேவை வரி, ஒரு பெரிய வரி சீர்திருத்த முறையாகும்.

    மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரி விதிப்பாக ஜி.எஸ்.டி.எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை மோடி தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

    கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி.அமல்படுத்தப்பட்டு, இன்றுடன் 5 ஆண்டுகள் நிறைவையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    சரக்கு மற்றும் சேவை வரி, ஒரு பெரிய வரி சீர்திருத்த முறையாகும். இது வணிகம் செய்வதை எளிதாக்குகிறது. ஒரே நாடு, ஒரே வரி என்ற நோக்கத்தை அது நிறைவேற்றியுள்ளது.

    புதிய இந்தியாவின் பொருளாதார கட்டமைப்பை வரையறுப்பதிலும், குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் ஜிஎஸ்டி முக்கியப் பங்காற்றியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×